Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 35 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி கொண்டாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி கொண்டாட்டம்

- லத்திகா சுகுமார்

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 35 - பரிசு ரூ.5,000

- லத்திகா சுகுமார்

Published:Updated:
புதிர்ப் போட்டி கொண்டாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி கொண்டாட்டம்

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், `மின்கட்டணம், பட்டா, ரேஷன் கடை, ஆதார் பதிவு போன்ற விஷயங்களுக்காக அரசு அலுவலகங்களில் உங்களுடைய அனுபவம்... ‘நச்’சென்று சில வரிகளில் பகிருங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

பழமொழியைக் கண்டுபிடியுங்கள்

கீழே 14 கேள்விகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கான சரியான பதில்களைக் கண்டு பிடித்து எழுதுங்கள். எழுதிய பதில்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் எழுத்துகளை மட்டும் தனியே எடுத்து, வரிசைப்படுத்தினால் ஒரு பழமொழி கிடைக்கும். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

1. நோய் குணமாக இது அவசியம்.

2. ஆஸ்திரேலியாவின் சிறப்பு விலங்கு.

3. பாலைவனக் கப்பல்.

4. இது சோறு போடும்.

5. கைகளைச் சிவப்பாக்கும் இலைகள்.

6. பெயரில் காய் இருந்தாலும் இது ஒரு பழம்..

7. பாலையும் நீரையும் பிரிக்கும் என்று சொல்லப்படும் பறவை.

8. ------- இல்லாமல் புகையுமா?

9. மண்ணுக்குள் விளையும். மசாலாவுக்கு உதவும். மருத்துவக் குணம்கொண்டது.

10. தஞ்சைக்கு வளம் சேர்க்கும் நதி.

11. மண்ணுக்குள் செல்லும் வழி.

12. நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று.

13. தேனீக்கள் மூலம் கிடைக்கும் இனிப்புப் பொருள்.

14. ஐந்தும் நான்கும் பத்து என்பது சரியா?

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 35 - பரிசு ரூ.5,000
புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 35 - பரிசு ரூ.5,000

சரியான விடையுடன், `பிளாக் அண்ட் வொயிட் திரை ஜோடிகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு ஜோடி எது? ஏன்? ’ - நச் வரிகள் எழுதி 500 பரிசு பெறும் 10 பேர்...

1. வந்தனா, புதுடெல்லி

எஸ்.எஸ்.ஆர் - விஜயகுமாரி. இவர்கள் இருவரும் நடிக்கும் படங்களில் தாங்கள் ஏற்றுக்கொண்ட கதாபாத்திர மாகவே மாறிவிடுவார்கள்... கண்களாலேயே பேசிக் கொள்வார்கள். திருமணம் செய்துகொண்டு நிஜத்திலும் ஜோடியானார்கள்.

2. என்.கிருஷ்ணகுமாரி, சென்னை-97

நிஜ வாழ்விலும் ஜோடியான என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம் ஜோடி, சிரிக்க மட்டுமன்றி சிந்திக்கவும் வைத்தார்கள். நகைச்சுவையுடன் பாசிட்டிவ் எண்ணங்

களையும் விதைத்தவர்கள்.

3. கேயெம். பிருந்தா பிரேம், நெல்லை

இயல்பான நடிப்பால் ஒருவரை ஒருவர் விஞ்சும் ஜோடி முத்துராமன் - லட்சுமி. படபடவென பேசும் லட்சுமி - சிடுசிடுவென வலம்வரும் முத்துராமன். இந்த ஜோடியின் யதார்த்தமான நடிப்பு யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்?

4. பி.திலகவதி, தஞ்சாவூர்

சிவாஜி கணேசன் - பத்மினி. ‘வியட்நாம் வீடு’ படத்தில் இருவரும் ஆதர்ஷ தம்பதியராக வாழ்ந்து காட்டியிருப்பார்கள். ‘என் தேவையை யார் அறிவார்... உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்’ என்ற பாடல் வரிகளுக்கு நடிப்பின் உச்சம் தொட்டிருப்பார்கள்.

5. சி.சௌந்தர்யா, புதுச்சேரி-4

டணால் கே.ஏ.தங்கவேலு - எம்.சரோஜா ஜோடி. நகைச்சுவையில் இருவரின் நடிப்பும் திகட்டாத திரை விருந்தாக இன்றும் உள்ளது. திரைத்துறையில் ஜோடியாக நகைச்சுவை கொடுத்து மகிழ்வித்தவர்கள் இவர்களைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது.

6. என்.லதா, சென்னை-125

எனக்குப் பிடித்த ஜோடி ஜெமினி - சாவித்திரி. ஜெமினியின் சாந்தமான நடிப்பும் வசீகரமும், சாவித்திரி

யின் பிரமிக்க வைக்கும் அழகும், அபாரமான நடிப்பும் எப்போதும் ரசிக்க வைக்கும். இருவரும் இணைந்து நடித்த படங்களை இப்போது பார்த்தாலும் சலிக்காது.

7. அபூர்வம், திருவள்ளூர்

சிவாஜி - கே.ஆர்.விஜயா இவர்களை ரீல் ஜோடியா, ரியல் ஜோடியா என்று எண்ணும் அளவுக்கு ஆதர்ஷ தம்பதியாக நடித்தவர்கள். கணவன் - மனைவி இப்படித் தான் இருக்க வேண்டும் என்று நடித்துக்காட்டியவர்கள். உதாரணம்... `தங்கப்பதக்கம்', `திரிசூலம்'.

8. ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி-6

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா. துள்ளலான நடிப்பு. டான்ஸ் என்று வலம் வந்த இந்த ஜோடியின் இளமையில் ஒன்றிவிடுவேன். இரண்டரை மணி நேரம் போனதே தெரியாது.

9. சி.பானுமதி, சேலம்-16

ரவிச்சந்திரன் - காஞ்சனா. இவர்கள் நடித்த படங்களின் பாடல்கள் அத்தனையும் இனிமை. வசனங்கள் அருமை.

10. அனு, சேலம்-4

நாகேஷ் - மனோரமா. காமெடியில் பின்னி பெடல் எடுக்கும் இவர்கள் பாடல், நடனம், நடிப்பு என அனைத்திலும் அசத்தும் ஜோடி. `அனுபவி ராஜா அனுபவி' படத்தில் வரும் `முத்துக்குளிக்க வாரீகளா' பாடல் ஒன்றே இதற்கு சாட்சி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism