Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 36 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

- லத்திகா சுகுமார்

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 36 - பரிசு ரூ.5,000

- லத்திகா சுகுமார்

Published:Updated:
புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், `சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்க உங்கள் வீட்டில் பின்பற்றும் கூல் டிப்ஸ்' ஒன்றை, ‘நச்’ சென்று சில வரிகளில் பகிருங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

இங்கே 11 குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் குறிப்புகளுக்குத் தொடர்பான வார்த்தைகள் வலமிருந்து இடமாக, இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக... கட்டத்துக்குள் ஒளிந்திருக்கின்றன. எந்தக் குறிப்புக்கு எந்த வார்த்தை என்பதைச் சரியாகக் கண்டுபிடித்து எழுதுங்கள்.

குறிப்புகள்

1. இளங்கோ அடிகள்

2. கோடை வெயில்

3. பிள்ளையார் - முருகன் சண்டை

4. குற்றாலம்

5. அட்சயப் பாத்திரம்

6. முல்லைக்குத் தேர்

7. அதியமான்

8. கடல்

9. கவசகுண்டலம்

10. விசிறி

11. நக்கீரர் - சிவன்

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 36 - பரிசு ரூ.5,000
புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 36 - பரிசு ரூ.5,000

சரியான விடையுடன், ‘விதியை முயற்சியால் வெல்ல முடியும் என்பதற்கு உதாரணமாக வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் பற்றி `நச்’ வரிகள் எழுதி 500 பரிசு பெறும் 10 பேர்...

1. கே.லட்சுமி, சேலம்-30

திருமணமான ஒரு வருடத்தில் என் கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் என் விதியை எண்ணி அழுதேன். என் கணவர் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம் என்று கூறி அதில் வந்த பல தடைகளை, விமர்சனங்களைத் தள்ளிவிட்டு விடா முயற்சியோடு செயல்பட்டதால், நான் இப்போது அழகான பெண் குழந்தைக்கு அன்பான அம்மாவாக வாழ்கிறேன்.

2. சரஸ்வதி பத்மநாபன், சென்னை-51

கணவரின் கம்பெனி மூடப்பட்டபோது செய்வதறியாது திகைத்தோம். டைப் ரைட்டிங் லோயர் முடித்திருந்த நான், ஒரு ஜவுளிக்கடையில் கணக்கராகச் சேர்ந்து 20 வருடங்கள் பணியாற்றி, பிள்ளைகள் வேலைக்குச் சென்ற பின் ஓய்வு பெற்றேன்.

3. ஈஸ்வரி சபாபதி, திருச்சி-18

‘கொரோனா’ எனும் தொற்று தந்த தொழில் முடக்கத்தில் வீட்டுக்கு முன்பாகத் தேங்காய், காய் கறிகள், பழங்கள் விற்பனை செய்ய ஆரம்பித்தேன். இன்று எங்கள் பகுதியிலேயே ‘கடை’பிடித்து வெற்றியும் பெற்றுவிட்டேன்.

4. ந.வைஜெயந்தி, நாகப்பட்டினம்.

மூன்று வயதில் என் பேரன் ஆட்டிசம் நோயால் தாக்கப்பட்டுள்ளான். இது வினைப்பயன் என்று சோர்ந்துவிடாமல் மன உறுதியுடனும் விடாமுயற்சி யுடனும் மருத்துவம் பார்த்தோம். இன்று அவன் ஓரளவுக்கு சகஜநிலைக்கு வந்துகொண்டிருக்

கிறான்.

5. அனுஜெய், கோயம்புத்தூர்-18

மாடு மேய்க்கதான் லாயக்கு என்று பள்ளியில் டிசி கொடுத்து வீட்டுக்கு அனுப்பிய என் தம்பி, இன்று மாட்டுப்பண்ணை வைத்து அமோகமாக வாழ்கிறான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism