Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 40 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

- லத்திகா சுகுமார்

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 40 - பரிசு ரூ.5,000

- லத்திகா சுகுமார்

Published:Updated:
புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், ‘பள்ளிக் கட்டணத்தைவிட டியூஷனுக்கு அதிக கட்டணம் செலுத்தும் காலத்தில் வாழ்கிறோம். அதற்காக மாதாமாதம் செலவிடும் தொகை, அதனால் ஏற்படும் சிக்கல்கள், பலன்கள் பற்றி...’ -

‘நச்’ சென்று சில வரிகளில் பகிருங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

குறுக்கெழுத்துப் புதிர்

இடமிருந்து வலம்

1. வண்டி நகர்வதற்கு இது அவசியம் (5)

4. உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் ----- இல்லை (4)

10. பழங்களில் ஒன்று. குளிர்ப்பிரதேசத்தில் விளையக் கூடியது (4)

வலமிருந்து இடம்

3. கோவலனின் மனைவி (4)

9. வயலும் வயல் சார்ந்த இடமும் (4)

12. கசப்புச் சுவையுடைய இதன் மஞ்சள் நிற விதைகள் மருத்துவக்குணம் மிக்கவை. உணவிலும் பயன்படுத்தி வருகிறோம். இதன் கீரையும் சத்து மிக்கது (5)

மேலிருந்து கீழ்

1. காலின் அணியும் ஆபரணம் (4)

2. மாடுகளை இதில் பூட்டி, நிலத்தை உழுவார்கள் (4)

3. மண்ணால் செய்யப்பட்ட வாத்தியம் (3)

5. சூரியனைச் சுற்றும் கோள்களில் ஒன்று. இந்தக் கோளைச் சுற்றி வளையங்களும் உண்டு (2)

7. தண்ணீரில் இந்த விதைகளைச் சேர்த்துப் பருகுவது நல்லது (4)

9. நேருவுக்கு இந்திரா -------- (3)

கீழிருந்து மேல்

4. நீளமான ஓர் உடை (3)

6. இசை கேட்டால் ------ மறந்து போகும் (4)

8. ---- அதை உடை (2)

10. விழுதுகள் உள்ள மரம் (3)

11. நெருப்பில் வாட்டிச் செய்யும் உணவு (4)

12. வாய் சிவக்க வைக்கும் இலை (4)

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 40 - பரிசு ரூ.5,000
புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 40 - பரிசு ரூ.5,000

சரியான விடையுடன், ‘நகரப்பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லை. இது எந்த அளவுக்குப் பலன் தருகிறது. உங்கள் சொந்த அனுபவமாகவும் இருக்கலாம்.’ - `நச்’ வரிகள் எழுதி ரூ.500 பரிசு பெறும் 10 பேர்...

1. உமாராணி, தர்மபுரி

ஃபேன்சி ஸ்டோர், துணிக்கடைகளில் வேலைக்குச் செல்பவர்களுக்கு இது வரப்பிரசாதம். அவர்கள் வாங்கும் சம்பளத்தில் ஒரு பகுதி பஸ்ஸுக்கே செலவாகிவிடும். தற்போது அந்தப் பணம் மிச்சமாவதால் அத்தியாவசிய செலவுகளுக்குப் பயன்படுகிறது.

2. எம்.நம்ரிதா, சேலம்-15

தனியார் பள்ளியில் சொற்ப சம்பளத்தில் பணியில் இருக்கிறேன். கொரோனாவுக்குப் பின்பு அது மேலும் குறைந்த நிலையில் என்னைப் போன்றவர்களுக்கு, கட்டணமில்லா பேருந்து மூலம் மாதம் ரூ.1,000 வரை மிச்சமாகிறது.

3. அபூர்வம், திருவள்ளூர்

என் தந்தைக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சையளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஆறு மாதங்களாக நாளொன்றுக்கு குறைந்தது இரண்டு முறை வீட்டிலிருந்து மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டியிருந்தது. இந்த நாள்களில் நகரப் பேருந்தில் கட்டணமில்லாமல் சென்றது மிகவும் உதவியாக இருந்தது.

4. ராகினி தனசேகர், மதுரை-12

நான் பணியாற்றும் அலுவலகத்துக்கு இரண்டு பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டும். தற்போது கட்டணமில்லாமல் பயணம் செய்ததில் மிச்சப்படுத்திய தொகை 6,000 ரூபாய். இது குழந்தைகளின் கல்விச் செலவுக்கு உதவும்.

5. இலக்கியா, சென்னை-24

இலவசம் என்பதால் பேருந்தில் டிக்கெட்டைப் பெறும்போது ஆண்களின் ஏளனம் தெரியும். அப்போது கொஞ்சம் தர்மசங்கடமாக இருக்கும். ஆனால், பணம் மிச்சமாகிறது என்பதால் அதைப் பொருட்படுத்துவது இல்லை. இப்போது பழகிவிட்டது.

6. பி.ஆனந்தி, சேலம்-3

கட்டணம் செலுத்திப் போய்க்கொண்டிருந்தபோது வொயிட் போர்டு பேருந்துகளில் ஓரளவுதான் கூட்டம் இருக்கும். இப்போது கட்டணமில்லா பேருந்தாகி விட்டதால் பயணம் செய்ய முடியாதபடி கூட்டம். இதனால் மனம்நொந்து வேதனையுடன் அதிக கட்டணத்தில் பச்சை போர்டுகளில் பயணம் செய்கிறேன்.

7. கவிதா பாலாஜி, சிதம்பரம்.

கட்டணம் இல்லாமல் பயணிப்பது நெருடலாகவே உள்ளது. நடத்துநர் ஓசி டிக்கெட் என்பதுபோல் கிழித்து கையில் திணிக்கிறார். இந்த நிலை மாற வேண்டும்.

8. பி.ஜானகி, கோவை-36

கட்டணமில்லா பேருந்தின் வருகைக்காகக் காத்திருக் கும் நேரம் அதிகம். சாதாரணமான பெண்கள் போய் வர ஓகே. பணிக்குச் செல்லும் பெண்களுக்கு சரிப்பட்டு வராது.

9. சுகந்தாராம், சென்னை-59

‘கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம்’ என்ற பழமொழிக்கு உதாரணமாக இந்தக் கட்டணமில்லா பேருந்துகளைக் கூறலாம். அவசரமாக ஓரிடத்துக்குப் போகவோ, குறிப்பிட்ட நேரத்தில் செல்லவோ முடிவதில்லை. கட்டணப் பேருந்தில்தான் போக வேண்டியுள்ளது.

10. ஐ.பியூலா, திருமங்கலம், மதுரை

விஷம்போல் ஏறிய விலைவாசியில்... மகளிருக்குக் கிடைத்த மகத்தான வரப்பிரசாதம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism