Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 41 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

- லத்திகா சுகுமார்

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 41 - பரிசு ரூ.5,000

- லத்திகா சுகுமார்

Published:Updated:
புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப்போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், ‘பக்கத்து வீட்டு வாழை, தென்னை போன்றவை, உங்கள் வீட்டுப் பக்கம் வளர்ந்து நிற்கும்போது வரும் பிரச்னைகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?’ - ‘நச்’ சென்று சில வரிகளில் பகிருங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

முக்கோணப்போட்டி

கீழே 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான சரியான பதில்களைக் கண்டுபிடித்து, முக்கோணத் தில் நிரப்புங்கள்.

கேள்விகள்...

1. 60 ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் (10)

2. சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் இது ஏற்படுகிறது (9)

3. நீலகிரி மாவட்டத்தின் தலைநகரம் (8)

4. காய்களில் ஒன்று. பல்வேறு வண்ணங்களிலும் அளவுகளிலும் காணப்படுகிறது. குழம்பு, கூட்டு, பொரியல், பச்சடி என்று எந்தவிதமாகவும் இதைப் பயன்படுத்தலாம். (7)

5. கடலில் வாழும் மிகப் பெரிய பாலூட்டி (6)

6. ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட ராணி (5)

7. வீடு கட்ட இது அவசியம் (4)

8. உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்களும் இதில் உண்டு (3)

9. பறக்க இயலாத பறவைகளில் ஒன்று. (2)

10. கண்ணுக்கு இது அழகு (1)

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 41 - பரிசு ரூ.5,000
புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 41 - பரிசு ரூ.5,000

சரியான விடையுடன், ‘கோயில்களில் வி.ஐ.பி தரிசனம், சிறப்பு தரிசனம் என்கிற பெயரில் கட்டணம் வைத்து கடவுளைத் தரிசிக்க அனுமதிப்பது குறித்து...’ - `நச்’ வரிகள் எழுதி ரூ.500 பரிசு பெறும் 10 பேர்...

1. இரா.அமிர்தவர்ஷினி, புதுச்சேரி-1: சில கோயில்களில் கட்டணம் செலுத்தாமல் கடவுளை வணங்க வேண்டுமென்றால் மிகத் தொலைவில் நின்றுதான் வணங்க வேண்டும். கருவறையில் இருக்கும் கடவுள் உருவம்கூட சரியாகத் தெரியாது. இப்படி வேறுபாடு காட்டுவது எந்த முறையில் சரி? எல்லா பக்தர்களும் கடவுளின் அருகில் சென்று வழிபட வகை செய்ய வேண்டும். கோயிலுக்கு வருவாய் தேவை யென்றால் அதை வேறு வகையில் ஈடு செய்யலாம்.

2. என்.ரத்னா நாகராஜ், சென்னை-15: ஆலயங்களுக்குள் அனைவரும் சமம். பதவி, பணம் எல்லாம் கோயிலுக்கு வெளியே இருக்கட்டும். அங்கே கடவுள் மட்டுமே வி.ஐ.பி. கால் கடுக்க நடந்துவந்து, வரிசையில் நின்று, அடுத்தது நாம்தான் என்று நினைக்கும்போது, வி.ஐ.பி வரிசையில் வருபவர்களை நமக்கு முன் அனுமதிக்கும்போது ஏற்படும் கோபம் சொல்ல முடியாதது. அடுத்து, சிறப்பு தரிசனம் என்னும் கட்டண வசூல் ஒருவகை பகிரங்க லஞ்சமே. அதனால் சாதாரண நாள்களில் கோயில்களுக்குச் சென்று அருகில் இருந்து கடவுளை நிதானமாக தரிசித்து வரலாம். அவர் அப்படியேதான் இருப்பார்.

3. அனிதா நரசிம்மராஜ், மதுரை-20: மனத்தூய்மையோடு வீட்டில், அருகில் உள்ள சிறிய ஆலயங்களில் இறைவனை வேண்டி தரிசனம் செய்து, கட்டண மன உளைச்சலைத் தவிர்த்து முழுமையான இறையருளைப் பெறலாம்.

4. கே.தமிழரசி, சென்னை-116: இலவச தரிசனத்தில் நான் மிக மிக மெதுவாக நகரும்போது வி.ஐ.பி மற்றும் சிறப்பு தரிசனத்தில் பலர் வேகமாக உள்ளே செல்லும்போது எனக்குள் கோபம், விரக்தி, இயலாமை, எரிச்சல் ஏற்படுவது உண்மை. கோயிலுக்கு வெளியேதான் ஏற்றத்தாழ்வுகள் என்றால் சாமி தரிசனத்திலுமா... கூடாது!

5. கனகம் பொன்னுசாமி, கோயம்புத்தூர்-36: சிறப்பு தரிசனம் மூலம் வரும் வருமானத்தைக் கோயிலின் தூய்மைப்பணிக்கும் ஊழியர்களுக்கு ஊதியமாகவும் செலவிடலாம். ஆனால், வி.ஐ.பி தரிசனம் என்று சொல்லிக் கொண்டு பலருடன் தடபுடலாக நுழைந்து பக்தர்களின் தரிசனத்துக்கு இடைஞ்சல் தருவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

6. இலக்கியா, சென்னை-24: ஒரே நாடு, ஒரே ரேஷன் என்பது போல ஒரே தரிசனம் எனக் கொண்டு வர வேண்டும். பல மணி நேரம் காத்திருந்துதான் சாமி தரிசனம் செய்ய முடியுமென்றால் அப்படிப்பட்ட இலவச தரிசனத்தின் மூலம் நான் போக மாட்டேன். கோயிலுக்கு வெளியே இருந்தே இறைவனை கும்பிட்டுக்கொள்வேன். சிறப்பு தரிசனம் போன்றவற்றால் கோயிலின் புனிதமே கெடுகிறது.

7. ஏ.இந்திராகாந்தி, கோயம்புத்தூர்-25: கோயில்களில் கட்டண தரிசனத்தைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், கோயில் ஊழியர்கள் பொது தரிசனத்தில் நிற்பவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து அடிக்கும் பகல் கொள்ளையைத் தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

8. கே.விஷ்மிதா, திருநின்றவூர்: மிகவும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு அவர்களின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்கலாம். அதுதான் நியாயம், மனிதாபிமானம். மற்றபடி இந்த சிறப்பு தரிசனங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. பணம், புகழ், அந்தஸ்து, அதிகாரம் இருந்தால் உடனே கடவுளின் அருள் கிடைத்துவிடாது.

9. லோ.மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி: மேலோட்டமாகப் பார்த்தால் இது தவறாகத் தோன்றலாம். ஆனால், ஆழமாக யோசித்தால் கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருப்பணிகள் ஏராளமாக உள்ளன மற்றும் அன்னதானம், பக்தர்களுக்கான வசதிகள் செய்ய இந்த வகை கட்டணங்கள் உதவுமே. மாற்றி யோசிப்போம்.

10. சுகந்தி ராமச்சந்திரன், திண்டுக்கல்: பிரபஞ்சத்தின் அத்தனை இயக்கங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளின் தன்மையை அதிர்வுகளால் உணரலாம். இதயத்தின் ஆழத்தில் கண்கள் மூடி தியானம் மூலம் உணரும் நான், வியாபாரமாகிவிட்ட கோயில்களுக்குச் செல்வதில்லை. கல்விபோல் கோயில்களும் வியாபாரமாகி விட்டன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism