Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 42 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

லத்திகா சுகுமார்

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 42 - பரிசு ரூ.5,000

லத்திகா சுகுமார்

Published:Updated:
புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப்போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், ‘இப்போது மக்கள் ஆடைகளை தேவைக்கும் அதிகமாக வாங்கிக் குவிக்கிறார்களா? உங்கள் வீட்டு அனுபவம்’ குறித்து ‘நச்’ சென்று சில வரிகளில் பகிருங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

குறுக்கெழுத்துப் புதிர்

இடமிருந்து வலம்

1. யானையின் நீண்ட மூக்கு (5)

8. கைகளைச் சிவப்பாக்கும் இலைகள் (4)

13. உள்ளதை உள்ளபடியே இது காட்டும் (4)

வலமிருந்து இடம்

3. கோயில்களிலும் அரண்மனையிலும் வீசப்படும்

விசிறி (4)

5. பூவுக்கும் காய்க்கும் இடைப்பட்ட பருவம் (3)

9. ராமனின் தம்பிகளில் ஒருவர் (4)

11. குஜராத்தில் இருக்கும் உப்புப் பாலைவனம் (3)

15. அறிவுரை என்பதை இப்படியும் அழைக்கலாம் (5)

மேலிருந்து கீழ்

2. உலோகங்களில் ஒன்று. பாத்திரங்கள் செய்யப்படும் (4)

3. நெருப்பில் இதைப் போட்டால் நறுமணம் வீசும் (5)

9. ----- போனால் சொல் போச்சு (2)

10. உடலில் தோன்றும் இதை அடையாளமாகப் பயன் படுத்துவர் (4)

12. மருத்துவரிடம் சென்றால் முதலில் இதைப் பிடித்துப் பார்ப்பார் (2)

கீழிருந்து மேல்

4. ஒற்றுமையே பலமா? (2)

6. பறவைகளில் ஒன்று. மிக உயரமாகப் பறக்கக்கூடிய பெரிய பறவை (4)

7. இந்த நாட்டின் தலைநகரம் கொழும்பு (4)

8. சிகரம் இங்கே இருக்கும் (2)

13. வால் பிளவுபட்ட கரிய நிறப் பறவை (5)

14. திருமணம் முடிந்ததும் பலரும் செல்வது (4)

15. இது இல்லாமல் இட்லி இல்லை (4)

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 42 - பரிசு ரூ.5,000
புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 42 - பரிசு ரூ.5,000

சரியான விடையுடன், பள்ளிக் கட்டணத்தைவிட டியூஷ னுக்கு அதிக கட்டணம் செலுத்தும் காலத்தில் வாழ்கி றோம். அதற்காக மாதம்தோறும் செலவிடும் தொகை, அதனால் ஏற்படும் சிக்கல்கள், பலன்கள் பற்றி... `நச்’ வரிகள் எழுதி ரூ.500 பரிசு பெறும் 10 பேர்...

1. ஜெயாரவி, நியூடெல்லி

குழந்தைகளை டியூஷனுக்கு அனுப்புவது பள்ளி முடிந்த பின்பும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களிடையே உருவாக்குகிறது. அதோடு சிறு வயதிலிருந்தே வீட்டுப் பாடங்களைத் தவறாமல் செய்யும் ஒழுக்கத்தையும் அவர்கள் டியூஷனில் கற்றுக்கொள்கிறார்கள். டியூஷன் போக வேண்டிய கட்டாயம் உள்ள ஒன்பதாம், பத்தாம் வகுப்பு வரும்போது, சிறு வயதில் இருந்தே டியூஷன் செல்லும் பழக்கத்தில் உள்ளவர்களுக்கு இது பெரிதும் உதவும்.

2. ரத்தினம் பானு, சென்னை-15

டியூஷன் நடத்தும் ஆசிரியர்கள் வகுப்பில் சரியாகப் பாடம் நடத்துவதில்லை. எப்போதும் டியூஷன் படிக்கும் மாணவர்கள் தான் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். இதனால் அனைத்து மாணவர்களும் டியூஷன் வகுப்பில் சேர மறைமுக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு மன உளைச்சல் வருமோ என்ற பயத்தில் டியூஷனில் சேர்க்கிறோம். பல பெற்றோர்களுக்கு டியூஷன் கட்டணம் செலுத்த போதுமான பொருளாதார வசதி இல்லை. எனவே, டியூஷன்களைத் தடை செய்து உத்தரவிடுவதே சிறந்த முடிவு.

3. ஆர்.ஸ்வர்ணலதா, வேலூர்-1

வகுப்பில் சரிவர பாடம் நடத்தாமல், டியூஷனில் தனி கவனம் செலுத்தும் ஆசிரியர்கள், கணிசமான தொகையைக் கட்டணமாக வசூலிப்பதுடன், டியூஷன் வராத மாணவர்களுக்கு மன அழுத்தத்தைத் தருவது வேதனைக்குரிய விஷயம்.

4. ஜெய, சேலம்-6

எல்லா பெற்றோர்களும் கல்வியறிவு பெற்றிருப்பதில்லை. அதேபோல் அனைத்துக் குழந்தைகளும் சமமான ஐ-க்யூ கொண்டவர்கள் அல்லர். தாய், தந்தை இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருந்தால் என்ன செய்வது? படிப்பில் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டுமெனில் குழந்தைகளுக்கு டியூஷன்தான் ஒரே வழி.

5. அ.யாழினி பர்வதம், சென்னை-78

ஒவ்வொரு மாணவனிடமும் தனி அக்கறை காட்டும் ஆசிரியர் குறைவு. பத்தோடு பதினொன்றாக டியூஷன் படிப்பதே வேஸ்ட். மாணவன் தன் மீது தானே நம்பிக்கை வைத்தால் வெற்றி எளிதாகும். அதை வீட்டிலேயே பெற்றோர் உணர்த்தி, வழி நடத்தினால் டியூஷன் செலவு மிச்சமாகும்.

6. சுபானுமதி கணேசன், ஏனங்குடி, நாகை.

தனியார் பள்ளிகளில் பள்ளிக் கட்டணம், நன்கொடை அதிகம் செலுத்த வேண்டியுள்ளது. அதற்கு பதில் நம் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து, டியூஷனுக்கு செலவு செய்து நன்கொடை, பள்ளிக் கட்டணத்தை மிச்சப்படுத்தி அரசாங்க சலுகைகளைப் பெறலாம்.

7. கே.எஸ்.சுரபி, சேலம்-5

பள்ளிக் கட்டணத்தைவிட, டியூஷனுக்கு அதிக கட்டணம் செலுத்துவது என்பது தவிர்க்க முடியாத நிலைதான். இதை முன்யோசனையுடன் நடைமுறைப்படுத்தினால் நமக்கும் பலன் உண்டு. படிக்கும் குழந்தைகளுக்கும் பலன் உண்டு. இப்போது நிறைய படித்த இளம் பெண்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருக்கிறார்கள். இது மாதிரி நம் வீட்டின் அருகே உள்ள பெண்களை நம் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தால் அதிக கட்டணம் இல்லாமல் நம் குழந்தைகளுக்கு அருமையான கல்வி கிடைக்கும்.

8. மாலதி நாராயணன், சென்னை-87

அம்மா - அப்பா இருவரும் வேலை பார்க்க வேண்டிய சூழ் நிலையில் நேரமில்லாததால் டியூஷன் மிக மிக அவசியமாகிறது. குழந்தைகளின் எதிர்காலம் முக்கியமாதலால் டியூஷன் அவசியம். டியூஷன்களுக்கு செலவு அதிகம் என்பதால் ஆடம்பர செலவுகளை நிறுத்தி, நல்ல கல்வியை டியூஷன் மூலம் குழந்தைகளுக்குத் தரலாம்.

9. பி.அமுதா (ஆசிரியர்), சேலம்-16

ஒரு நாளின் பெரும் பகுதியைப் பள்ளியிலும் டியூஷனிலும் கழிப்பது மாணவர்களுக்கு மன உளைச்சலையே தரும். விளை யாட்டு, பொழுதுபோக்கு எதுவுமிருக்காது. டியூஷனுக்கு செலவழிப்பதால் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு எகிறிவிடுகிறது. மொத்தத்தில் நேரமும் பணமும் விரயமே.

10. என்.காவ்யா, சென்னை-125

பள்ளியில் கற்றுத்தருவதை நன்றாகக் கவனித்தாலே டியூஷன் தேவையில்லை. எல்லா பாடங்களுக்கும் டியூஷன் அனுப்பாமல் மிக மிக முக்கியமான ஒரு பாடத்துக்கு மட்டும் அனுப்புகிறேன். படிப்பு முக்கியம் என்பதால் யோசித்து செலவு செய்கிறேன். கல்வி என்பதால் சமரசம் செய்துகொள்வதில்லை.