லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 49 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி கொண்டாட்டம்
News
புதிர்ப் போட்டி கொண்டாட்டம்

- லத்திகா சுகுமார்

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், இந்த நவயுக தீபாவளி கொண்டாட்டத்தில் நீங்கள் மிஸ் செய்யும் அந்தக்கால தீபாவளி பற்றிய நாஸ்டால்ஜியா விஷயம் ஒன்றை ‘நச்’சென்று சில வரிகளில் பகிருங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

குறுக்கெழுத்துப்புதிர்

இடமிருந்து வலம்

1. பழங்களில் ஒன்று. நோயுற்றவர்களுக்கு இதன் சாறு கொடுப்பார்கள் (6)

5. மணப்பாறை என்றதும் நினைவுக்கு வருவது (4)

9. வீட்டின் பாதுகாப்புக்கு இது அவசியம் (3)

11. பூக்கள் மலர்வதற்கு முன் இப்படி இருக்கும் (4)

13. -------- விழியாள் (3)

வலமிருந்து இடம்

3. வளைக்குள் வாழும். ஐந்து ஜோடி கால்கள்... முதல் ஜோடி கால்கள் மிகப் பெரியவை (3)

7. குதிரை என்பதை இப்படியும் அழைக்கலாம் (3)

8. தோல் கருவிகளில் ஒன்று (3)

10. கோட்டையைச் சுற்றியுள்ள நீர் அரண் (3)

15. காமராஜர் பிறந்த ஊர் (6)

மேலிருந்து கீழ்

1. நடிகையர் திலகம் (5)

2. கப்பல்கள் வந்து நிற்கும் இடம் (5)

3. உடலின் பல பாகங்களில் இருந்து தண்டுவடத்துக்கும் மூளைக்கும் தகவல்களை எடுத்துச் செல்கிறது ------- மண்டலம் (4)

6. மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் காக்கும் (2)

12. இது போனால் சொல் போச்சு (2)

கீழிருந்து மேல்

4. பறவைகளின் வீடு (2)

11. `----- ஓசை' - கல்கியின் நாவல் (2)

13. மோதிரம் (4)

14. சுத்தம் (5)

15. வணிகம் (5)

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 49 - பரிசு ரூ.5,000
புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 49 - பரிசு ரூ.5,000

சரியான விடையுடன்... அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும் ஃபேஷனை பின்பற்றுவதா, டிரெண்ட் பழையது என்றாலும் பிடித்த கிளாஸிக் லுக்கை தேர்வு செய்வதா... உங்கள் விருப்பம் என்ன? - `நச்’ வரிகள் எழுதி ரூ.500 பரிசு பெறும் 10 பேர்...

1. ஆர்.உமா, சென்னை-97

புடவை கட்டிக்கொண்டால் பெண்களுக்கு அழகு கூடும். தலைப்பை பின்வைத்து சீராக மடித்திருந்தால் ஆபீஸுக்கு, ஒற்றை தலைப்பில் பார்ட்டி, திருமண விழாக்களுக்கு, அவசரத்துக்கு வீட்டில் அள்ளிப் போட்ட முந்தானை என்று எப்படி கட்டினாலும் அழகுதான். கூட்டமாக இருக்கும் பெண்கள் மத்தியில் புடவை கட்டிய பெண்தான் எல்லாரையும் ஈர்ப்பாள். அப்டேட்டுக்கு எல்லை இல்லை. புடவையில் இருக்கும் கவர்ச்சி வேறு எந்த உடையிலும் இருக்காது.

2. தி.பேபி சரஸ்வதி, தாரமங்கலம்

நவீன காலத்துக்கேற்ப அப்டேட் ஆகிக்கொண்டிருக்கும் ஃபேஷனைவிட, நமது தட்பவெப்ப சூழல் மற்றும் கலாசாரம், பண்பாடு, உடல்நலத்துக்கேற்ற கிளாஸிக் லுக்தான் எனது விருப்பம்.

3. அனுஜெய், கோயம்புத்தூர்-18

பழைய ஜீன்ஸ்தான். ஆனால், மேலே போட்டுக்கொள்வது நீண்ட குர்தா. இதுவே நான் விரும்புவது.

4. எம்.நிர்மதி, சென்னை-33

அப்டேட் ஆகிக்கொண்டேயிருக்கும் ஃபேஷன்தான்

என் சாய்ஸ். லுக்கை வித்தியாசப்படுத்திக் காட்டுவதில் இருக்கும் ஆனந்தமே தனிதான். ஃபேஷன் லுக் உற்சாகத்தையும் கூடுதல் எனர்ஜியையும் தரும். அன்று முழுவதும் சுறுசுறுப்புடன் வேலை செய்ய துணை செய்யும். பழைமைக்கு ‘பை’... புதுமைக்கு ‘ஹாய்’!

5. எம்.ஹரிணி, தஞ்சாவூர்

உடையைப் பொறுத்தவரை நமது நாட்டுக்கு, பாதுகாப்புக்கு ஏற்ற ஃபேஷனைத் தேர்வு செய்வேன். நகைத்தேர்வில் பழைய டிசைன்கள் மட்டுமே பிடிக்கும். உணவு வகையில் உடல் உபாதை தரும் துரித உணவெனும் ஃபேஷனைத் தவிர்ப்பேன்.

6. வி.ருக்மணி, சென்னை-100

அப்டேட் ஆகிக்கொண்டிருக்கும் ஃபேஷன் ஆடையை விரும்பினாள் என் பெண். ஆனால், சில நாள்களில் அதில் அவளுக்கு விருப்பமில்லாமல் போனது. அந்த உடைகளை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால், பழைய உடைகளை சில நாள்கள் பயன்படுத்திய பிறகும் ஆல்டர் செய்து மாற்றி உபயோகிக்க முடிந்தது. என்னவானாலும் ‘ஓல்டு இஸ் கோல்டு’தான்.

7. என்.சாந்தினி, மதுரை-9

மாற்றம் ஒன்றே மாறாதது. வயதாகிறது என பழைமையை விரும்பினாலும் சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்வது சிறந்தது. பயணங்களுக்கு சுடிதார் ஏற்ற உடை என்பதால் அதை அணிகிறேன். உடம்பு சரியில்லாதபோது, புடவையைவிட வசதியானது என நைட்டியை அணிகிறேன்.

8. எஸ்.சரஸ்வதி, திருச்சி-2

என்னுடைய சாய்ஸ். புதுமையில் பழைமை. என் உடலுக்கும் தோற்றத்துக்கும் கச்சிதமாகப் பொருந்தும்படி சிம்பிளாகவும் ரிச் லுக்காகவும் எடுப்பாகவும் பளிச்சென்றும் அடக்கமாகவும் எடுத்துக்காட்டும் உடைகளுக்கே முன்னுரிமை கொடுப்பேன்.

9. எஸ்.ஞானவள்ளி, திருச்செந்தூர்

அப்டேட் ஃபேஷனோ, பழைய டிரெண்டோ... எதுவானாலும் நமக்குப் பொருத்தமாக, வசதியாக இருந்தால்

‘ஓகே’தான். பொருத்தமில்லாத அப்டேட் ஃபேஷனோ, பழைய டிரெண்டோ எதுவானாலும் ‘நோ’தான்.

10. என்.லதா, சென்னை-125

அப்டேட் ஆகிக்கொண்டேயிருக்கும் ஃபேஷனோ, பழைய கிளாஸிக் லுக்கோ எதுவானாலும் நம் வயது, நிறம், உயரம், உடல் அமைப்புக்கு ஏற்ப இருப்பது மிக அவசியம். எதைப் பின்பற்றினாலும் பிறர் பாராட்டும்படி இருக்க வேண்டும். பிறர் நம்மைப் பார்த்து கேலி செய்யும்படி இருக்கக் கூடாது.