தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி கொண்டாட்டம்
News
புதிர்ப் போட்டி கொண்டாட்டம்

எட்டாம் வகுப்பு படித்தபோது என் பாட்டி, கடலைக் காய் நல்ல விளைச்சல் கண்டதால் பட்டுப்பாவாடை எடுத்தார்கள்.

புதிர்ப்போட்டி-48 விடைகள்...

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - பரிசு ரூ.5,000

சரியான விடையுடன்... இன்று வருடம் முழுவதும் ஆடைகள் வாங்குகிறோம். தீபாவளிக்கு மட்டுமே புத்தாடை வாங்கிக்கொடுக்கப்பட்ட காலத்தில், உங் களுக்கு மிகப் பிடித்ததாக அமைந்த ஒரு தீபாவளி ஆடை பற்றி... `நச்’ வரிகள் எழுதி ரூ.500 பரிசு பெறும் 10 பேர்...

1. என்.ரம்யா, பெங்களூரு-40: தீபாவளிக்கு வெளி நாட்டில் இருந்து வந்த உறவினர் அழகான ரோஸ் நிற கவுன் பரிசளித்தார். அந்த உடுத்திக்கொண்டு, ஃபாரின் டிரஸ் என்ற பீற்றலோடு (அப்போதெல்லாம் வெளிநாட்டு உடைக்கு தனி மவுசு) சிங்கப்பூர் சீமாட்டியாக வலம் வந்தேன். பி-கு: அது நம்ம ஊர் டிரஸ்தான் என்று பல வருடங்களுக்குப் பின்புதான் எனக்குத் தெரிய வந்தது.

2. எ.சுகுணா, சேலம்-3: ‘பூவே பூச்சூடவா’ படம் வெளியான நேரம். அதில் நதியா அணிந்திருந்த மஞ்சள் நிற சுடிதார் போல் தீபாவளிக்கு டிரஸ் வேண்டும் என அடம்பிடித்து பல கடைகள் ஏறி, இறங்கி வாங்கினோம். பிறகென்ன? ‘பட்டாசு சுட்டுச்சுட்டுப் போடட்டுமா...’ என நதியா ஸ்டைலில் அந்த தீபாவளியை ஜமாய்ச்சிட்டோம்ல.

3. ஆர்.ஜெயந்தி, உடுமலைப்பேட்டை: விடிந்தால் தீபாவளி... இரவு 11 மணிக்கு டெய்லரிடம் துணியை வாங்கிய பிறகுதான் கடையைப் பூட்டினார். மறுநாள் விடியற்காலை குளித்துவிட்டு வந்து ஆசையாகத் துணியைப் பிரித்துப் பார்த்தால், அது என் னுடையதல்ல. ஆனால், அளவு சரியாக இருந்தது. வேறு வழியில்லாமல் அணிந்த ஆடைதான் இன்றும் எனக்குப் பிடித்தமானது.

4. எம். ஜெனோவி பர்னாண்டோ, இடிந்தகரை: எங்கள் குடும்பம் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் ஏழ்மையில் திணறிய காலம் அது. எங்கள் நிலையறிந்த அம்மாவின் சிநேகிதியான, பக்கத்து வீட்டு அத்தை, 10 வயது சிறுமியான எனக்கு, உள்ளன்போடு வாங்கித் தந்த தீபாவளி ஆடையை இன்றுவரை நினைத்துக் கொள்வேன்.

5. ஆ.ஜெயந்தி, சேலம்: பாவாடை தாவணி மட்டுமே சீருடையாகவும், தீபாவளி புத்தாடையாகவும் வாங்கிக் கொடுத்த பெற்றோரிடம் சல்வார் கமீஸ் வாங்கித் தரச் சொல்லி கண்ணீர் மல்க கெஞ்சியும் ம்ஹூம்... பலனில்லை. பிஎட் முடித்து தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைக்குச் சேர்ந்து கிடைத்த முதல் சம்பளத்தில் தோழியோடு கடைக்குச் சென்று (தைரியமாக) வாங்கிய நீல நிற சல்வார் கமீஸ் இன்றுவரை என் நினைவில் நிற்கிறது.

6. எஸ்.பி.சுசீலாதேவி, சென்னை-43: 1961-62-ம் ஆண்டு ‘பாலும் பழமும்’ திரைப்படம் வெளியாகி அமோகமாக ஓடிக்கொண்டிருந்த காலகட்டம். அந்தத் தாக்கத்தில் ‘பாலும் பழமும்’ ஸ்டைல் என்ற பெயரில் கட்டம்போட்ட பாவாடை, புடவைகள் விற்பனையும் களை கட்டியது. என் வகுப்புத் தோழி தீபாவளிக்கு அந்தப் பாவாடையை வாங்கி இருப்பதைச் சொல்ல எனக்கும் ஆசை வந்தது. ஆனால், எங்கள் அப்பாவிடம் கேட்க பயந்து, தயங்கிக்கொண்டிருக்க... அவரே அதை வாங்கிக் கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார்.

7. டி.உமாதேவி, சேலம்-14: எட்டாம் வகுப்பு படித்தபோது என் பாட்டி, கடலைக் காய் நல்ல விளைச்சல் கண்டதால் பட்டுப்பாவாடை எடுத்தார்கள். மயில் கழுத்து நிறத்தில் ஜரிகை புட்டா போட்ட பாடி பாவாடை, பின்னர் அதை நாடா பாவாடை யாக்கி கல்லூரி வரை மஞ்சள் நிற தாவணியுடன் அணிந்து மகிழ்ந்தேன்.

8. லெட்சுமி நாகராஜன், மதுரை-17: தீபாவளிக்கு எடுத்த புடவையைக் கட்டியபடி ‘காதல் கோட்டை’ படம் பார்க்கச் சென்றோம். ஒரு பாடல் காட்சியில் தேவயானி நான் உடுத்திய அதே புடவையோடு நடித்திருப்பார். படம் முடிந்ததும் வெளியே வந்தபோது பெண்கள் பலர் ஆச்சர்யமாக என்னைப் பார்த்ததை மறக்க முடியாது.

9. ஜெயலட்சுமி.பி., சேலம்-15: என் தந்தை கூலிக்கு பட்டுத்தறி நெய்து கொண் டிருந்த காலம் அது. வருமானம் மிக மிகக் குறைவு. 17-வது வயதில் என்னுடைய மனதைப் புரிந்துகொண்ட என் தந்தை அவரே நெய்த பட்டுப் பாவாடை, சட்டையைக் கொடுத்தார். மாம்பழ நிறத்தில் மெரூன் பார்டர். 1987-ம் ஆண்டு பட்டுப் பாவாடை, சட்டை போட்ட தீபாவளி, என் வாழ்வில் பொன்னான நாள்.

10. ஜுலி டிமல், சென்னை-5: 1970 தீபாவளியின்போது எடுத்த பிரின்ட்டடு கைத்தறி புடவையின் விலை 38 ரூபாய். ரோஸ் கலரில் ரோஜாப் பூக்கள் போட்ட மிகவும் மிருதுவான புடவை. தீபாவளி அன்று கட்டினேன். பின்னர் அடிக்கடி கட்டினேன். இப்படி ஏழு வருடங்கள் பயன்படுத்தினேன். பின் அரை தாவணியாகவும், குழந்தை தொட்டிலைச் சுற்றிப் போட்டு கொசு, குளிர் குழந் தையை அண்டாமல் பாதுகாக்கவும் பின்னர் முகம், கைகளைத் துடைக்கவுமாக பல வடிவங்களில் அந்தப் புடவையைப் பயன்படுத்தினேன்.