Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - பரிசு ரூ.5,000 - 12

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

லத்திகா சுகுமார்

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - பரிசு ரூ.5,000 - 12

லத்திகா சுகுமார்

Published:Updated:
புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்ட இருக்கின்றன. அந்த வரிசையில் இதோ... மீண்டும் குறுக்கெழுத்துப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், உங்களுடைய நீண்டநாள் நிறைவேறா அல்ப ஆசை ஏதாவது... ‘நச்’சென இரண்டே வரிகளில் சொல்லுங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை எழுதும் 10 பேருக்கு தலா 500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

இடமிருந்து வலம்

1. இமயமலைப் பகுதியில் காணப்படும் அரிய உயிரினம். இதன் பெயரில் மீரா ஜாஸ்மின் நடித்த திரைப்படம் ஒன்று உண்டு (6).

8. பறக்க இயலாத பறவைகளில் ஒன்று (2).

10. ஐயனார் தெய்வமாகக் கருதப்படுகிறார் (3).

11. இசைக்கருவிகளில் ஒன்று (3).

12. போனால் சொல் போச்சு (2).

14. இவன் குழல் இசையில் உலகம் மயங்கும் என்பார்கள் (4).

17. சிலப்பதிகாரத்தில் கண்ணகி ஒரு (5).

வலமிருந்து இடம்

2. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ஒன்று. 200 நாடுகளுக்கு மேல் இதில் கலந்துகொள்ளும் (5).

3. ஆஸ்திரேலியா மிகச் சிறிய (4).

6. யானைகள் இதற்காக வேட்டையாடப்படுகின்றன (4).

16. நடனமாடுபவர்கள் இதைக் காலில் அணிவர் (4).

19. பருப்பு சேர்க்கப்படும் உணவுகளில் மணத்துக்காக இதைச் சேர்ப்பார்கள் (6).

மேலிருந்து கீழ்

1. பல வகை பூக்கள் கொண்ட தஞ்சாவூர் புகழ் பெற்றது (5).

2. உளவாளி (4).

9. ரோஜாவில் இது இருக்கும் (2).

13. அடிக்கடி விலை உயரும். உணவில் முக்கியப் பங்கு வகிக்கும் (5).

15. தேங்காய்ப்பாலும் கடலைக்கறியும் இந்த உணவுக்குப் பொருத்தமாக இருக்கும் (4).

கீழிருந்து மேல்

4. தாய்லாந்தின் தலைநகர் (4).

5. கொள்ளக் கூடாது (4).

7. ரோபோ என்பதைத் தமிழில் இப்படி அழைக்கலாம் (5).

12. இந்த மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயன் தரும் (2).

17. இனிப்புகளில் ஒன்று (4).

18. பழங்களில் ஒன்று. கொடியில் காய்க்கும் (4).

19. மின்னலிலிருந்து மின்சக்தி உருவாகிறது என்பதைக் கண்டறிந்தவர் பிராங்க்ளின் (5)

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - பரிசு ரூ.5,000 - 12

புதிர்ப்போட்டி 11 முடிவுகள் அடுத்த இதழில்...