Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 22 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

- லத்திகா சுகுமார்

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 22 - பரிசு ரூ.5,000

- லத்திகா சுகுமார்

Published:Updated:
புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், `பெண்ணியம் உங்கள் பார்வையில்...’ என்பதை கட்டமிடப்பட்டிருக்கும் இடத்தில் நச்சென்று இரண்டே வரிகளில் எழுதுங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

கீழே உள்ள 16 கேள்விகளுக்குச் சரியான பதில்களை கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் எழுதுங்கள். பிறகு, சிவப்பு வட்டங்களுக்குள் வரும் எழுத்துகளை ஒழுங்கு படுத்தினால், இந்த சீசனுக்கு ஏற்ற ஒரு வாக்கியம் கிடைக்கும். விடைக்காகக் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் அந்த வாக்கியத்தை எழுதுங்கள்.

கேள்விகள்:

1. சிவன் கோயில்களில் நுழைந்ததும் வீற்றிருப்பது (3)

2. கைகளில் அணியும் ஆபரணம் (4)

3. கொடியில் காய்க்கும் பழம் (4)

4. சொக்கநாதர் இதைத்தான் பரிகளாக மாற்றினார் (2)

5. மெதுவாகச் செல்லும் உயிரினம் (3)

6. மீராவின் கைகளில் இருந்த இசைக்கருவி (4)

7. குழந்தைக்கு விளையாட்டு காட்டும் பொருள் (6)

8. ஒற்றைக் காலில் நிற்கும் பறவை (3)

9. டைட்டானிக் என்பது நீரில் மூழ்கிய ஒரு ......... (4)

10. மூடி இல்லாத சிறு பாத்திரம் (4)

11. ரிக்‌ஷாக்காரன் திரைப்படத்தின் கதாநாயகி (4)

12. பழங்களில் ஒன்று. சமையலுக்குப் பயன்படும் (4)

13. பாலைவனத் தாவரம் (3)

14. கம்பத்தில் பறக்கும் (2)

15. ----- தான் மனிதர்களுக்குச் சிறந்த மருந்து (4)

16. இதற்கு முன் அனைவரும் சமம் (4)

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 22 - பரிசு ரூ.5,000
புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 22 - பரிசு ரூ.5,000

புதிர்ப்போட்டி 20 - விடைகள்

1. புத்திலிபாய்

2. ஸ்வரூப ராணி

3. மாயா தேவி

4. பீமாபாய்

5. இலக்குமி அம்மாள்

6. சின்னத் தாயம்மாள்

சரியான விடையுடன், `கால எந்திரம் கையில் கிடைத்தால் உங்கள் வாழ்க்கையின் எந்தப் பருவத்துக்குச் செல்ல விரும்புவீர்கள்... ஏன்?’ - நச் வரிகள் எழுதி ரூ.500 பரிசு பெறும் 10 பேர்...

1. சு.ராஜேஸ்வரி, சென்னை-23

மறைந்த என் மாமியார் உடன் கழித்த இரண்டு ஆண்டுகளுக்குச் செல்வேன். அவர் என்னுடன் இருந்திருந்தால் என் வாழ்வில் பல கசப்பான சம்பவங்கள் நடந்திருக்காது.

2. ரேவதி சம்பத்குமார், ஈரோடு

1999 முதல் 2013 வரை என் கணவர் டெல்லியில் பணியாற்றிய நாள்களுக்குச் செல்வேன். அந்த 14 வருடங்கள் கிடைத்த நிம்மதிக்கு ஏங்குகிறேன்.

3. எம்.ஜெனோவி பர்னாண்டோ, இடிந்தகரை

வகுப்பில் மாதம்தோறும் ரேங்க் எடுத்து, பரிசாகக் கிடைக்கும் மெடலை எவருக்கும் விட்டுத்தராமல் அந்த ஐந்தாண்டு களுக்குச் செல்வேன்.

4. ரேவதி லிவிங்ஸ்டன், சென்னை-70

திருமணமான புதிதில் பயம், த்ரில்லிங், உற்சாகம், பரவசத்துடன் முதன்முதலாக சென்னையில் கழித்த ரம்மியமான அந்த நாள்களுக்குச் செல்ல விரும்புகிறேன்.

5. எம்.மீனா, தஞ்சாவூர்

தாயின் கருவறையில் இருந்த அந்த 10 மாதங்களுக்குச் செல்ல விரும்புவேன்.

6. ஜி.மகாலெட்சுமி, தூத்துக்குடி

பட்டுப்பாவாடை, இரட்டைச் சடையுடன் துள்ளித் திரிந்த குட்டிப் பெண் பருவத்தைத் திரும்பவும் அனுபவிக்க ஆசை.

7. உமாதேவி, சேலம்-14

சிறுமி பருவத்துக்குச் சென்று என் பாட்டியின் வயலில் கைராசி என்று கூறி முதல் கடலை விதை போட சொல்லிய நாள்களுக்குச் செல்வேன்.

8. எஸ்.சித்ரா, திருநெல்வேலி-1

கால எந்திரத்திடம், ‘செல்ஃபியுடன், டென்ஷன் இல்லாத மத்திமப் பருவத்துக்கு அழைத்துச் செல்’ என்பேன்.

9. கெத்சி ஆக்னஸ், தூத்துக்குடி

கொரோனாவுக்கு முந்தைய காலத்துக்குச் சென்று... மாஸ்க் போடாமல் சுதந்திரமாக ஊரைச் சுற்ற விரும்புவேன்.

10. பிரபா டாக்கர், ஹைதராபாத் பள்ளி இறுதியாண்டு வரை படித்த நான் மேற்கொண்டு படிக்க முடியாமல், கல்லூரிக்குச் செல்லவில்லை. அந்தக் காலத்துக்கு மீண்டும் செல்வேன்.