Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 38 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

- லத்திகா சுகுமார்

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 38 - பரிசு ரூ.5,000

- லத்திகா சுகுமார்

Published:Updated:
புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், ‘நகரப்பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லை.

இது எந்த அளவுக்குப் பலன் தருகிறது. உங்கள் சொந்த அனுபவமாகவும் இருக்கலாம்’ -

‘நச்’சென்று சில வரிகளில் பகிருங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 38 - பரிசு ரூ.5,000

இடமிருந்து வலம்

1. வெப்பத்தைத் தணிக்க நறுமணம் மிக்க இதைப் பூசிக்கொள்வார்கள் (5)

7. நோன்பின்போது உண்ணாமல் ---- இருப்பார்கள் (4)

10. தேர் என்பதை இப்படியும் அழைக்கலாம் (3)

12. ரயிலை விட்டு கீழே இறங்கும் இடம்(4)

வலமிருந்து இடம்

3. பனை மரத்திலிருந்து கிடைக்கும் பானம் (4)

5. மன்னர்கள் ----- வளர்த்து, வரம் கேட்பதாகச் சொல்வார்கள் (3)

8. மனிதர்களுக்குக் குறைந்தது 6 மணி நேரம் இது அவசியம் (4)

14. கோடை வெயிலுக்கு இதமான பழம்(5)

மேலிருந்து கீழ்

1. இரைச்சல் (4)

2. ஆபரணங்கள் செய்யக்கூடிய உலோகங்களில் ஒன்று (4)

3. சின்னக்குழிகளில் மாவை ஊற்றி, சுட்டெடுக்கும் சிற்றுண்டி (5)

8. அந்தக் காலத்தில் புறாவைத் ---- விடுவார்கள் (2)

9. கைகளைச் சிவக்க வைக்கும் இலை (4)

11. புதிருக்கு இதைக் கண்டுபிடிக்க வேண்டும் (2)

கீழிருந்து மேல்

4. தாவரங்கள் இதன் மூலம் நீரை உறிஞ்சும் (2)

6. புளித்தண்ணீர், வெல்லம், ஏலக்காய் போட்டு தயாரிக்கும் பானம் (4)

7. அர்ஜுனன் இந்த வித்தையில் சிறந்தவன் (2)

12. ஒன்பது உணர்ச்சிகள் (5)

13. கொழுக்கட்டைக்குள் வைக்கும் பொருள் (4)

14. யானையின் பற்கள் (4)

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 38 - பரிசு ரூ.5,000
புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 38 - பரிசு ரூ.5,000

சரியான விடையுடன், ‘சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்க உங்கள் வீட்டில் பின்பற்றும் கூல் டிப்ஸ் ஒன்றை பகிருங்கள்' - `நச்’ வரிகள் எழுதி ரூ.500 பரிசு பெறும் 10 பேர்...

1. என்.கோமதி, நெல்லை-7

தினசரி காலை ஒரு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் வெந்தயப் பொடி போட்டு கலக்கிக் குடித்துவிடுவதால், பகலில் வெப்பத்தின் தாக்கத்துக்கு தடா போட முடிகிறது.

2. என்.ரத்னா நாகராஜ், சென்னை-15

முதல் நாள் இரவே கேழ்வரகு கூழை செய்து வைத்து விடுவேன். மறுநாள் காலை அதில் கெட்டியான தயிர், நீராகாரத்தில் இருக்கும் நீர், கல் உப்பு போட்டு நன்கு கரைத்து அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து கலந்து புதினா துவையலுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடும் பழக்கம் இருப்பதால் கோடை முழுவதும் ஜில் அண்ட் கூல்தான்.

3. டி.மணிமேகலை, திருவாரூர்

வாரமிருமுறை நெல்லி, பாசிப்பயறு, வெந்தயம் மூன்றையும் ஊறவைத்து நைசாக அரைத்து, தலையில் தடவி ஊறவிட்டு குளிப்பதால் உடல்சூடு குறைவதுடன், கோடை வெப்பம் அதிகம் தாக்காது.

4. ஆர்.சிவரஞ்சனா, தஞ்சாவூர்

கோடைக்காலத்தில் மொட்டை மாடியில் தற்காலிகமாக தென்னங்கீற்றில் பந்தல் அமைத்துக்கொள்வோம். இதனால் வீட்டுக்குள் வெப்பம் தாக்குவதில்லை.

5. ஆர்.சுதா, சென்னை-33

தொப்புள் பகுதியைச் சுற்றிலும் கண் இமைகளில் மேற்புறம் மற்றும் பாதங்களின் அடியிலும் விளக் கெண்ணெய் தேய்த்துக்கொள்வோம். இது கோடையில் ஏற்படும் அதிக உஷ்ணத்தைத் தணிக்கிறது. வயிற்று வலி போன்ற உபாதை ஏற்படாமலும் தடுக்கிறது.

6. ப.சங்கமித்ரா, கோயம்புத்தூர்-25

எனக்குத் தெரிந்து பாட்டி, அம்மா காலத்திலிருந்து எங்கள் வீட்டில் கோடைக்காலத்து காலை ஆகாரம், இரவு தண்ணீர் ஊற்றிவைத்த பழைய சோறும், தொட்டுக்கொள்ள சுண்டக்குழம்பும், சின்ன வெங்காய மும்தான். நாள் முழுவதும் கோடை வெப்பத்தைத் தணித்து, உடம்பைக் குளிர்ச்சியாக்கும் சக்தி இதற்கு உண்டு.

7. அனு, சேலம்-4

வெட்டி வேர், விளாமிச்சை வேர், வெந்தயம், பச்சைப் பயறு, கோரைக்கிழங்கு, பூலான்கிழங்கு, கார்போக அரிசி, சந்தனம், வில்வ இலைகள் ஆகியவற்றை

சம அளவு (தலா 50 கிராம்) எடுத்து நிழலில் காய வைத்து பொடி செய்து வைத்துக்கொள்வோம். இதைக் கோடையில் நாள்தோறும் சோப்புக்கு பதிலாகக் குளிப்பதற்குப் பயன்படுத்துவோம்.

8. எஸ்.கெளரி மீனாட்சி, மதுரை - 19

சாயங்கால நேரத்தில் மொட்டை மாடியிலும், வாசலிலும் நீர் தெளித்தால், இரவு நேரத்தில் வெட்கை தெரியாது.

9. கீதா வீரப்பன், காஞ்சிபுரம்.

நொறுக்குத்தீனிகளை ஓரங்கட்டிவிட்டு நுங்கு, தர் பூசணி, வெள்ளரி போன்றவற்றை சாப்பிட்டும், காபி, டீ போன்ற பானங்களைக் குறைத்துக்கொண்டு இளநீர், நீர்மோர் ஆகியவற்றைக் குடித்தும் கோடையை சமாளித்து விடுவோம்.

10. இலக்கியா, சென்னை-24

எங்கள் வீட்டில் பால்கனி, வராண்டா, ஜன்னல்கள், வரவேற்பறை போன்ற இடங்களில் சிறிய அளவிலான குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கிறோம். இதனால் உஷ்ணம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. எங்கள் வீடு மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism