Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 39 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

லத்திகா சுகுமார்

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 39 - பரிசு ரூ.5,000

லத்திகா சுகுமார்

Published:Updated:
புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், ‘கோயில்களில் வி.ஐ.பி தரிசனம், சிறப்பு தரிசனம் என்கிற பெயரில் கட்டணம் வைத்து கடவுளை தரிசிக்க அனுமதிப்பது குறித்து...’ -

‘நச்’ சென்று சில வரிகளில் பகிருங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

சிறப்புப் பெயர்களைக் கண்டுபிடியுங்கள்!

இங்கே புகழ்பெற்ற எட்டு பேரின் பெயர்கள் இருக்கின்றன. இவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயர்கள் கட்டங்களில் இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக, மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக ஒளிந்திருக்கின்றன. புகழ் பெற்றவர்களுக்குரிய சரியான சிறப்புப் பெயரைக் கண்டுபிடித்து எழுதி அனுப்புங்கள்.

புகழ்பெற்றவர்கள்

1. பாரதிதாசன்

2. ஜோதிராவ் புலே

3. தேசிக விநாயகம் பிள்ளை

4. ஈ.வெ.ராமசாமி

5. சரோஜினி நாயுடு

6. சாவித்திரி

7. உ.வே.சாமிநாதய்யர்

8. பாரதியார்

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 39 - பரிசு ரூ.5,000

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 39 - பரிசு ரூ.5,000

சரியான விடையுடன், ‘பெண்கள் பாலியல் வன்முறை களுக்கு ஆளாகும் செய்திகள் அடிக்கடி வெளியில் வந்த படியே உள்ளன. எச்சரிக்கையாக இருப்பது எப்படி...' - `நச்’ வரிகள் எழுதி ரூ.500 பரிசு பெறும் 10 பேர்...

1. சம்பகலக்ஷ்மி, சென்னை-28

பொது இடங்களில் உரத்த குரலில் பேசக் கூடாது. ஆண்களுக்கு கை குலுக்குவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். உரையாடல் முதல் தொடுதல் வரை ஆண்களின் மன ஓட்டத்தைப் புரிந்துகொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். தனியே வெளியே செல்லும்போது காவலன் செயலியை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

2. பி.சந்திரா, சேலம்-14

எங்கு சென்றாலும் நெருக்கமானவர் யாரிடமாவது தெரிவிக்கவும். இரவில் தனியாகச் செல்ல நேர்ந்தால், ‘கூகுள் மேப்’பை ஆன் செய்துகொள்ள வேண்டும். செல்போனை வெளியில் செல்லும்போது முழு சார்ஜுடன் வைத்துக்கொள்ளவும். முடிந்தால் சார்ஜரும் எடுத்துச் செல்லலாம்.

3. எம்.விநாயக சுந்தரி, மேலகரம், தென்காசி

பெண்கள் முதலில் தைரியத்துடன் வாழ வேண்டும். அப்படி ஓர் ஆணுடன் தவறு நடந்துவிட்டாலும்

உடனே தற்கொலை முடிவுக்குச் செல்லக் கூடாது. வீட்டில் பெற்றோரிடமோ, பெரியவர்களிடமோ விஷயத்தைக் கூறி மன்னிப்பு கேட்டுவிட்டு அவர்களின் உதவியுடன் காவல்துறையை நாட வேண்டும். தவறு செய்தது பெண் மட்டுமல்ல; ஆணும்தானே. ஏன் பெண்கள் மட்டும் தற்கொலை முடிவுக்கு வர வேண்டும்?

4. என்.ரத்னா நாகராஜ், சென்னை-15

கூட்டுப் பாலியல் குற்றங்கள் பெருகியிருக்கும் நிலையில் வலைதளங்களில் முகம் தெரியாத நபருடன் பழகுதல், செல்போனில் போட்டோக்களைப் பகிர்தல் வேண்டாம். ஹேண்ட் பேகில் மணல், மிளகாய்ப்பொடி, சிறு கத்தி வைத்துக்கொள்ளலாம். குழந்தைப் பருவத்திலேயே நீதி, நேர்மை கதைகளை இருபாலருக்கும் உணவுடன் புகட்டலாம்.

5. எம்.வெண்ணிலா, மதுரை-1

பாலியல் வன்கொடுமை எப்படி நடந்தது என்று மீடியாக்களில் வரும் செய்திகளை அறிந்தாலே அதிலிருந்து தப்பிக்கலாம்.

6. எஸ்.மங்கை, குளித்தலை

உடல் வலிமை, மன வலிமையை உணர்ந்துகொள்வது, தேவையானவர்களிடம் மட்டும் பழகுவது, நம்மைப் பற்றி எதையும் வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருப்பது, தேவையின்றி வெளியிடங்களில் அதிக நேரம் சுற்றுவதைத் தவிர்த்தாலே போதும்.

7. கே.லதா, திருநின்றவூர்

பெரும்பாலும் பாலியல் வன்கொடுமைகள் நன்கு பழக்கமான, தெரிந்தவர்கள் மூலமே நடக்கின்றன. எனவே, யாராக இருந்தாலும் முழுவதும் நம்பக் கூடாது. தவறு நடக்க நாமே காரணமாக இருக்க இடம் தரக் கூடாது. தைரியம் வேண்டும். நம்முடைய பயமே கயவர்களுக்கு பலம். மிரட்டல்களுக்குப் பணியக் கூடாது.

8. எம்.வி.கவிதா, சேலம்-3

பெண்கள் தன் கையில் உள்ள அலைபேசியில் காவல் துறை கட்டுப்பாட்டு அறை எண் 100, விபத்து உதவி எண் 181, குழந்தைகள் பாதுகாப்பு 1098 வைத்திருக்க வேண்டும். யாருடன் பழகினாலும் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். குடும்பத்தினருடன் வெளிப்படையாகப் பேசும் பெண்கள் எந்தப் பிரச்னையையும் முளையிலேயே கிள்ளி எறிந்து

விடுவர்.

9. எஸ்.சுகந்தி சுந்தர், திருவாரூர்

பாலியல் சீண்டலுக்கு ஆளாகாமல் இருப்பது ஒரு பெண்ணின் கையில்தான் இருக்கிறது. ஆரம்ப காலத்தில் நெருக்கமாகப் பழகிவிட்டு ஒரு கட்டத்தில் ஆணின் உணர்வுகள் தூண்டப்படும்போது எதிர்ப்பு தெரிவிப்பதாலும் இத்தகைய கொடுமை அரங்கேறு கிறது. அதற்கு இடம் கொடுக்காமல், ஆரம்பத்தில் செய்யும் சின்னச் சின்ன சில்மிஷங்களைத் தவிர்த்தால் ஆணும் ஓர் எல்லைக்குள் அடங்கி, தவறு செய்ய முற்படாமல் தன்னிலை உணர்வான். பெண்கள்

இந்த விஷயத்தில் எச்சரிக்கையோடும் எல்லையோடும் செயல்படுவது அவசியம்.

10. நிர்மலா சிங்காரவேல், தூத்துக்குடி

பெண்கள் அடக்கமாக இருக்க வேண்டும். ஆனால், அடங்கிப் போகக் கூடாது. தேவையில்லாத பேச்சு களுக்கு செவி மடுக்காமலும், ஆண்களின் புகழ்ச்சியில் நிலை தடுமாறாமலும், பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் நேர்கொண்ட பார்வையுடன் வீர நடை போட வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism