என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

புதிர்ப்போட்டி - 9 முடிவுகள்

புதிர்ப்போட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புதிர்ப்போட்டி

பாதாளச் சாக்கடை துளை சதுரமாக இருந்தால் அதன் மூடியும் சதுரமாகவே இருக்கும்.

விடைகள்:

1. நான் யார் தெரியுமா?

தேங்காய் என்று நினைத்தீர்களா? முட்டை என்பதே சரியான விடை.

2. ஏன் இப்படி?

பாதாளச் சாக்கடை துளை சதுரமாக இருந்தால் அதன் மூடியும் சதுரமாகவே இருக்கும். அப்படி இருந்தால் விபத்து, அழுத்தம் அல்லது ஏதோவொரு காரணத்தால் அந்த மூடி நகர நேரிட்டால், குறுக்காக துளையின் வழியே விழுந்துவிடும். அதனால்தான் வட்டமான மூடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வட்டமான துளையில் அதே அளவுள்ள வட்ட மூடியைப் பொருத்தினால் அது குறுக்காகப் போனாலும்கூட குழிக்கு உள்ளே விழாது. அதனால்தான் பாதாளச் சாக்கடை திறப்புகளும் மூடிகளும் வட்ட வடிவமாக இருக்கின்றன.

3. எப்படி இப்படி இருக்க முடியும்?

விபத்தில் காயமடைந்த பையனுக்கு அந்த டாக்டர், அம்மா. நாம் பொதுவாகவே உயர் பொறுப்புகளில் ஆண்களை மட்டுமே பொருத்திப் பார்ப்பதால் ஏற்படுகிற குழப்பம் இது. ஆகவே, எந்த விஷயத்திலும் முன் முடிவுகள் கூடாது.

சரியான விடையுடன் ஃபேமிலி பாட்டு மாதிரி உங்க ஃபேமிலி ஸ்பெஷல் பாரம்பர்ய டிப்ஸை ‘நச்’சென இரண்டே வரிகள் எழுதி ரூ.500 பரிசு பெறும் 10 பேர்...

1. ரம்யா முத்துசாமி, ஈரோடு.

கடலைமாவு, எலுமிச்சைப் பழச்சாறு, தயிர், மஞ்சள்தூள் கலந்து முகத்துக்குப் பூசி வர, ஃபேஷியல் தராத பொலிவும் இளமையும் நிச்சயம்.

2.  மல்லிகா குரு, சென்னை-33

விரலி மஞ்சள் உணவில் இருந்தால், வா என்றாலும் வராது கொரோனா. அதே போல சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை; சொக்கனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை.

3. மாயா கிருஷ்ணமுராரி, சென்னை-115

பாலைக் காய்ச்சியும், தயிரைக் கடைந்தும் சாப்பிடுவதுதான் நல்லது.

4. என்.கோமதி, நெல்லை-7

வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல்... சூட்டைத் தணித்து ஆரோக்கியம் தரும்.

5. ராஜலட்சுமி தர், சென்னை-28

மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து, வாசலில் கோலமிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டு, ஓஸோன் சுவாசித்து உடல் - மன ஆரோக்கியம் பேணுவோம்.

6. எஸ்.மகேஸ்வரி, வந்தவாசி.

சிறுநீர் எரிச்சல், சிறுநீர் அடைப்பு போன்ற பிரச்னைகளுக்கு உளுந்து ஊறிய நீரைப் பருகினால் நிவாரணம் கிடைக்கும். சுக்கு, பனை வெல்லம் துணையுடன் உளுந்து சேர்த்து களியாகக் கிளறி சாப்பிட்டால் உடலுக்கு பலமுண்டாகும்.

7. சாந்தி மனோகர், தஞ்சாவூர்.

கருஞ்சீரகத்தை நன்றாக அரைத்துப் பொடித்து, அதில் ஒரு தேக்கரண்டியைத் தேனில் குழைத்து, 10 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவது மாதவிடாய் தொடர்பான இம்சைகளை மட்டுப்படுத்தும்.

8. என்.மணிமேகலை, திருச்சி.

தூதுவளை இலைகளைத் துவையலாகச் செய்யும்போது, சிறிதளவு அன்னாசிப்பூப்பொடி சேர்த்தால், சோர்ந்திருக்கும் மூச்சுக்குழாய் உற்சாகமடையும்.

9. மலர்விழி பழனி, கன்னியாகுமரி.

கடுகை அரைத்து அரிசி மாவுடன் சேர்த்து, நீர்விட்டு களிபோல கிளறி, துணியில் தடவி மார்பின் மீது பற்றுப்போட, இருமலின் தீவிரம் குறைந்து சுவாசம் எளிமையாகும்.

10. ஆர்.சாந்தி, செங்கல்பட்டு.

சித்தரத்தையை நெருப்பில் சுட்டுச் சாம்பலாக்கி, அதைத் தேனில் குழைத்து, அதன் உரைப்பு நாவிலும் தொண்டையிலும் படும்படி சாப் பிட்டால், தொண்டைக் கரகரப்பு நீங்கும்.