லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

அவள் விகடன் புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 10: பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புதிர்ப் போட்டி

- லத்திகா சுகுமார்

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்ட இருக்கின்றன. அந்த வரிசையில் இதோ... இன்னொரு போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், கடைசியாக நீங்கள் எப்போது மனம்விட்டுச் சிரித்தீர்கள், எதற்கு? ‘நச்’சென இரண்டே வரிகளில் சொல்லுங்கள். சரியான விடையுடன் டிப்ஸ் மற்றும் நச் வரிகளை எழுதும் 10 பேருக்கு தலா 500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

1. எந்தப் பக்கம்?

இந்தப் பேருந்து உங்களுக்கு எந்தப் பக்கம் செல்கிறது? காரணமும் சொல்ல வேண்டும். ஒரு க்ளூ தருகிறோம். இடது பக்கம் அல்லது வலது பக்கம்... இதில் ஒன்றுதான் சரியான விடை!

அவள் விகடன் புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 10: பரிசு ரூ.5,000

2. ஆங்கில வார்த்தை விளையாட்டு

இரண்டு ஆங்கில வார்த்தைகள் தரப்பட்டுள்ளன. இந்த இரண்டுக்கும் தொடர்புடைய மூன்றாவது ஆங்கில வார்த்தையை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். உதாரண மாக EGYPTIAN — MOTHER ... இந்த இரண்டுக்கும் தொடர்புடைய மூன்றாவது வார்த்தை: Mummy.

1. LOCK — PIANO >

2. TREE — CAR >

3. SCHOOL — EYE >

4. RIVER — MONEY >

5. BED — PAPER >

6. ARMY — WATER >

3. எது வட்டம்!

வட்டத்துக்குள் ஒரு வட்டம் போல காட்சியளிப்பது உண்மையிலேயே வட்டம்தானா? அல்லது வரைந்ததில் சிறிது பிழை உள்ளதா?

அவள் விகடன் புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 10: பரிசு ரூ.5,000
அவள் விகடன் புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 10: பரிசு ரூ.5,000

புதிர்ப்போட்டி - 8 முடிவுகள்

ஓட ஓட ஓட தூரம் குறையல

சரியான விடைகள்: 1. அவள் முதலிடம் பிடித்ததாகப் பதில் சொல்லியிருந்தால், `இல்லையே’ என்பதுதான் எங்கள் பதில், இரண்டாவதாக ஓடியவரை அவள் தாண்டினால், அவரின் இடத்தைத்தானே அவளால் பிடிக்க முடியும்? அதனால், அவள் இரண்டாவது இடத்தில்தான் இருப்பாள்!

2. ‘கடைசியிலிருந்து இரண்டாவது இடம்’ என ரொம்பவே யோசித்து பதில் சொல்லியிருந்தால், அதுவும் தவறே. பந்தயத்தில் கடைசியாக ஒருவர் ஓடுகிறார் என்றால், அவருக்குப் பின்னால் யாருமில்லை என்றுதானே அர்த்தம். அப்புறம் அவள் எப்படி அவரை முந்த முடியும்? உங்களைக் குழப்புவதற்கான கேள்வி இது. உங்களுக்கு இப்போது குழப்பமா? தெளிவா!

சரியான விடைகளுடன் லாக்டௌனில் கற்றுக்கொண்ட பாடங்கள் பற்றி ‘நச்’ என்று எழுதி 500 பரிசு பெறும் 10 வாசகிகள்...

1.சாந்தினி நடராஜன், மதுரை-9

சுயநலம் கருதாமல் பொதுநலம் பேணும் உழைப்பாளிகளை மதிக்க காலம் கற்பித்த பாடம்.

2.ஆர்.சுதா, சென்னை-33

சுத்தத்தின் அருமையைப் புரியவைத்த லாக்டெளன், சுற்றத்தினரை ஒருங்கிணைக்கும் பாலமாகவும் அமைந்தது.

3. கே.ஆர்.சாந்தி, மதுரை-1

மூச்சுவிடக் கூட நேரமில்லாமல் தவிர்த்தவர்களுக்கு மூச்சுப் பயிற்சியைக் கற்றுக்கொடுத்த மாஸ்டர்.

4. கி.சரஸ்வதி, ஈரோடு-12

லாக்`down'; மனிதம்`up'.

5. ஸ்ரீலதா, சென்னை-24

இல்லங்களில் பெண்கள்படும் சிரமத்தை ஆண்கள் உணரச் செய்த நாள்கள், ஊரடங்கு நாள்கள்.

6. சுபஸ்ரீ பரத்வாஜ், புனே

சிக்கனம், சேமிப்பு, இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழக் கற்றுக்கொடுத்த காலம்.

7. ஜெ.சியாமளா, சென்னை-92

உலகமே வீடாய் சுருங்கிவிட்ட நவீன யுகத்தில், வீடே உலகமாய் வசிக்க கிடைத்த வாய்ப்பு.

8. ஷர்மிளா ராணி, கோவை-18

செய்ய செய்ய செய்ய வேலை குறையலை... செய்யாமல் இருக்கவும் முடியலை.

9. உமா சேதுராமன், சென்னை-47

முழு அடைப்பு, பல சொந்தங்களின் கதவுகளைத் திறந்தவிட்ட திறவுகோல்.

10. ரம்யா சங்கரநாராயணன், திருச்சி-1

அவசியம் என்று வந்தால் அம்மா `ஹேர்கட்' செய்வார்; அப்பா `கமர்கட்' செய்வார்.