Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்

கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக்

கேள்வி-பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்
மாருதி சுஸூகி XL6
மாருதி சுஸூகி XL6

மாருதி சுஸூகி XL6 எப்படி இருக்கிறது?

-வசீகரன், பண்ணைவிளை.

‘எர்டிகாவின் டிசைன் வழக்கமாக இருக்கிறது - இதில் 6 சீட் ஆப்ஷன் இல்லையே?’ என்பவர்களுக்கான பதில்தான் XL6. ப்ரீமியம் தயாரிப்பாக பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் இது, எதிர்பார்த்தபடியே க்ராஸ்ஓவர்/எஸ்யூவி டிசைன் அம்சங்கள், LED ஹெட்லைட்ஸ், Leatherette சீட்கள், க்ரூஸ் கன்ட்ரோல் - ரிவர்ஸ் கேமரா - Suzuki Connect போன்ற வசதிகள் - கறுப்பு நிற கேபின் - 6 சீட்கள் (Captain Seats) ஆகிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

எர்டிகாவுடன் ஒப்பிடும்போது, இதில் டீசல் ஆப்ஷன் இல்லாதது மைனஸ். ஆனால் BS-6 பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருப்பது வரவேற்கத்தக்கது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நான் ஸ்கோடா ரேபிட் 1.5 TDI Ambition Plus மாடலை வைத்திருக்கிறேன். அது 1 லட்சம் கி.மீ ஓடியிருக்கிறது. அந்த நிறுவன சர்வீஸ் சென்டர்களில் பராமரிக்கப்பட்ட இந்த காரைத் தற்போது விற்றுவிட விரும்புகிறேன். இதை டீலர்களிடம் கொடுக்கலாமா அல்லது ஆன்லைனில் போட்டுவிடலாமா?

- ஜெ.எம்.பாக்கியராஜ், திருநெல்வேலி.

நீங்கள் புதிதாகக் கார் வாங்கும் முடிவில் இருந்தால், அந்த டீலரிலேயே காரை எக்ஸ்சேஞ்ஜில் விற்றுவிடலாம். ஒருவேளை அது ஸ்கோடா டீலராகவே இருந்தால், உங்களுக்கு வழக்கமாகக் கிடைக்கும் தள்ளுபடிகளுடன், Exchange Offer மற்றும் Loyalty Bonus கூடுதலாகக் கிடைக்கும். ஆனால், பொதுவாகவே டீலர்களில் காரைக் குறைவான விலையில்தான் எக்ஸ்சேஞ்ஜ்-க்கு எடுப்பார்கள் என்றாலும், Paper Work தெளிவாக இருக்கும் என்பது ஆறுதல். வலைதளங்கள் வாயிலாக காரை விற்பனை செய்யும்போது அதிக விலைக்குச் செல்லக்கூடிய சாத்தியம் இருந்தாலும், Paper Work காரணமாக அலைச்சல் ஏற்படலாம்.

பெட்ரோல்/டீசல்
பெட்ரோல்/டீசல்

சாதாரண பெட்ரோல்/டீசல், ப்ரீமியம் பெட்ரோல்/டீசல்... இவற்றில் எது சிறந்தது?

-சம்பத்,தூத்துக்குடி.

வழக்கமான ‘Unleaded’ பெட்ரோல் மற்றும் ‘Low Sulphur’ டீசலைவிட, சுமார் 3 ரூபாய் அதிக விலையில் கிடைக்கக்கூடிய ப்ரீமியம் பெட்ரோல் மற்றும் டீசலில், அடிட்டீவ்ஸ் எனப்படும் ரசாயனம் கலக்கப்படுகிறது. இது இன்ஜின் இயங்கும்போது உள்ளே ஏற்படும் உராய்வைக் கட்டுப்படுத்துவதுடன், வால்வுகள் - கம்பஷன் சேம்பர் - ஃப்யூல் இன்ஜெக்டரில் ஏற்பட்டுள்ள Carbon Deposit-களைச் சுத்தப்படுத்திவிடும்.

எனவே இன்ஜின் சீராக இயங்கவும், தொடர்ச்சியாக நல்ல பிக்-அப் கிடைக்கவும் வழிவகுக்கிறது. இதனால் முன்பைவிட சற்று அதிக மைலேஜையும், குறைவான புகையையும் இன்ஜின் வெளிப்படுத்தும். இந்தியன் ஆயில் - எக்ஸ்ட்ரா ப்ரீமியம்/எக்ஸ்ட்ரா மைல், பாரத் பெட்ரோலியம் - ஸ்பீடு/ஹை ஸ்பீடு, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் - பவர்/டர்போஜெட், ஷெல் - வி-பவர் பெட்ரோல்/டீசல் எனவும் அழைக்கப்படுகின்றன.

மஹிந்திரா TUV 300
மஹிந்திரா TUV 300

நான் மஹிந்திரா TUV 300 காரை வாங்க முடிவெடுத்துள்ளேன். அதில் எப்போதாவது நெடுந்தூரப் பயணங்கள் மேற்கொள்ளலாமா? இது கொடுக்கும் காசுக்கேற்ற ஆப்ஷனா?

- மொஹமது இலியாஸ், இமெயில்.

நீங்கள் தற்போது பயன்படுத்தும் வாகனம், பட்ஜெட், பெட்ரோல்/டீசல் போன்ற விபரங்களைத் தெரிவிக்கவில்லை. இருப்பினும் TUV3OO பற்றிக் கேட்பதால், உங்களுக்கு காம்பேக்ட் எஸ்யூவி பிடிக்கும் எனத் தோன்றுகிறது. பொலேரோவின் அடுத்த தலைமுறை வெர்ஷனாகப் பொசிஷன் செய்யப்பட்ட இது, எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

ஆனால் உறுதியான கட்டுமானம் (லேடர் ஃப்ரேம்), சொகுசான இடவசதி (நடுவரிசை இருக்கைகள்), போதுமான வசதிகள் (டச் ஸ்க்ரீன், அலாய் வீல்கள்), மனநிறைவைத் தரும் பர்ஃபாமன்ஸ் (100bhp பவர்) என ஆல்ரவுண்டராக அசத்துகிறது. ஆனால் அதிக எடை - குறைவான மைலேஜ் - பாதுகாப்பற்ற கடைசி வரிசை இருக்கை (சீட் பெல்ட் மிஸ்ஸிங்) - தீர்மானமற்ற ரீசேல் மதிப்பு - கொஞ்சம் அதிக விலை எனச் சில மைனஸ்களையும் கொண்டிருக்கிறது. எனவே TUV3OO காரை, ஒருமுறை டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு முடிவெடுக்கவும். ஏறக்குறைய இதே விலையில் கிடைக்கக்கூடிய மோனோகாக் சேஸி உடனான காம்பேக்ட் எஸ்யூவிகளையும் நீங்கள் பார்க்கலாம்.

ஹீரோவின் கிளாமர் பைக்
ஹீரோவின் கிளாமர் பைக்

குறைவான பராமரிப்புச் செலவுகள் - போதுமான வசதிகள் - அதிக மைலேஜ் தரக்கூடிய பைக் வாங்க ஆசைப்படுகிறேன். எனக்கு ஹீரோவின் கிளாமர் பைக் (பழைய லுக்கில் இருப்பது) பிடித்திருக்கிறது. எனது தேர்வு சரியா?

-சதீஷ், சென்னை.

‘சூப்பர் ஸ்ப்ளெண்டர் பார்க்க மிகவும் கம்யூட்டர் பைக் போலக் காட்சியளிக்கிறது’ எனப் பேச்சு எழுந்ததால், அதன் மாடர்ன் வெர்ஷனாக ஹீரோ கொண்டு வந்ததுதான் கிளாமர். பெயருக்கேற்றபடி பைக் ஸ்டைலாக இருந்தாலும், டெக்னிக்கலாக இது சூப்பர் ஸ்ப்ளெண்டர்தான். எனவே, வசதிகள் மனநிறைவைத் தந்தாலும், பர்ஃபாமன்ஸ் விஷயத்தில் இது ஓகே ரகம்தான்.

மைலேஜ் மற்றும் பராமரிப்புச் செலவுகள் விஷயத்தில் பைக் பெரிதாகக் கையைக் கடிக்காது. ஆனால் இதன் விற்பனை நிறுத்தப்பட்டு, தற்போது ஹீரோவின் சொந்த Semi Vertical 125சிசி இன்ஜினுடனே கிளாமர் கிடைக்கிறது. எனவே, இந்த பைக்கை நீங்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துவிட்டு முடிவெடுங்கள். ஷைன் 125 SP அல்லது டிஸ்கவர் 125 ஆகிய பைக்குகளையும் நீங்கள் பரிசீலிக்கலாம்.

மஹிந்திரா மராத்ஸோ
மஹிந்திரா மராத்ஸோ

மஹிந்திரா மராத்ஸோ அல்லது மாருதி சுஸூகி எர்டிகா ஆகிய இரண்டில் எது பெஸ்ட் 7 சீட்டர்?

-மணிபாலா, இமெயில்.

உங்கள் தேவைகளை நீங்கள் சொல்லாவிட்டாலும், எம்பிவி ஆப்ஷன்களால் அதனை உணர்த்திவிட்டீர்கள். எனவே பெட்ரோல் எம்பிவி வேண்டுமென்றால் எர்டிகாவையும், டீசல் எம்பிவி என்றால் மராத்ஸோவையும் நீங்கள் தேர்வு செய்யலாம். இரண்டிலுமே இருப்பது 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்தான் என்றாலும், மராத்ஸோ அதிக பவர் (123bhp) - எடை (1,680 கிலோ) - விலையைக் கொண்டிருக்கிறது.

எனவே, எடை குறைவான (1,235 கிலோ) மற்றும் குறைந்த விலையுள்ள எர்டிகா, அதிக மைலேஜையும் வசதிகளையும் தரலாம். ஆனால் Global NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் எர்டிகா 3 ஸ்டாரையும், மஹிந்திரா 4 ஸ்டாரையும் வாங்கியதை நினைவில் கொள்ளவும். எனவே, இரு கார்களையும் டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு முடிவெடுக்கவும்.

மிட்சுபிஷி லேன்ஸர் டீசல் கார்
மிட்சுபிஷி லேன்ஸர் டீசல் கார்

நான் மிட்சுபிஷி லேன்ஸர் டீசல் காரை வைத்திருக்கிறேன். அது 1,20,000 கிமீ ஓடியிருக்கிறது. நான் தற்போது காரின் இன்ஜினுக்கு கார்பன் க்ளீனிங் மற்றும் சிந்தடிக் ஆயில் ஆகியவற்றைப் பயன்படுத்தும் முடிவில் இருக்கிறேன். எனது காருக்கு சிந்தடிக் ஆயில் ஊற்றினால், 10,000 கிமீ வரை ஆயில் மாற்ற வேண்டியதில்லை என நண்பர் கூறுகிறார். இது உண்மையா?.

- ஜெயஷண்முகன், ஈரோடு.

இன்ஜின் Head - சிலிண்டர் Area, அதனைச் சுற்றியுள்ள இதர பாகங்களில் படிந்திருக்கும் Deposit-களை நீக்குவதுதான் கார்பன் க்ளீனிங். இந்தியாவில் இது இன்னும் பரவலாக அறியப்படவில்லை. எனவே, அனுபவம் வாய்ந்த டெக்னீஷியன்கள்தான் இதில் கை வைக்க வேண்டும். இழந்த ஆற்றலை இன்ஜின் மீண்டும் பெறுவதுடன், அது முன்பைவிட அதிக மைலேஜையும் - குறைந்த காற்று மாசையும் தரும். இதனால் இன்ஜின் பாகங்களின் ஆயுளும் கூடும் என்பது ப்ளஸ். உங்கள் இன்ஜின் அதிக கி.மீ ஓடியிருப்பதுடன், பழைய வகை இன்ஜினாக இருப்பதாலும், சிந்தடிக் ஆயில் பயன்படுத்துவது நல்ல முடிவாக இருக்காது.

இது Base ஆயிலுடன் அதிகமான ரசாயனங்கள் கலந்து செய்யப்பட்டது என்பதால், அது வழக்கமான ஆயில்களைவிட அதிக ஆயுளைக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்ஜினுக்குள்ளே இருக்கும் Deposit-களுடன் இணைபுரிவதற்கான சாத்தியம் இருக்கிறது.

எனவே, அதற்குப் பதிலாக, ஆயில் மாற்றுவதற்கு முன்பு அதில் Engine Oil Flush-ஐ ஊற்றிவிடவும். பிறகு 5-10 நிமிடங்கள் வரை இன்ஜினை ஐடிலிங்கில் ஓட விடவும். பிறகு ஆயிலை இறக்கிவிட்டு, புதிய மினரல் ஆயிலுடன் ஆயில் அடீட்டிவ்ஸைச் சேர்த்துவிடவும். ஒருவேளை செமி சிந்தடிக் ஆயில் ஊற்றினால், ஆயில் அடீட்டிவ்ஸைப் பயன்படுத்தக்கூடாது.

இந்த கார்பன் க்ளீனிங் - Engine Oil Flush - Engine Oil Additives ஆகியவற்றை, ஒருசேர செய்துவிட வேண்டாம். கார்பன் க்ளீனிங்கைவிட, Engine Oil Flush & Engine Oil Additives-ன் விலை குறைவு என்பதால், முதலில் நீங்கள் இதையே பயன்படுத்திப் பார்க்கலாம். அது உங்களுக்குத் திருப்தி தராத பட்சத்தில், கார்பன் க்ளீனிங்கைச் செய்யலாம்; ப்ரீமியம் எரிபொருள்களையும் பரிசீலிக்கலாம்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com