Published:Updated:

ரெய்டு வளையத்தில் தொழிலதிபர்கள்! - பூச்சாண்டி காட்டுகிறதா மத்திய அரசு!

தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனம்
பிரீமியம் ஸ்டோரி
தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனம்

தி.மு.க-வினரும், காங்கிரஸாரும் கூறும் குற்றச்சாட்டு வியப்பாக, விநோதமாக, நகைப்புக்குரியதாக இருக்கிறது.

ரெய்டு வளையத்தில் தொழிலதிபர்கள்! - பூச்சாண்டி காட்டுகிறதா மத்திய அரசு!

தி.மு.க-வினரும், காங்கிரஸாரும் கூறும் குற்றச்சாட்டு வியப்பாக, விநோதமாக, நகைப்புக்குரியதாக இருக்கிறது.

Published:Updated:
தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனம்
பிரீமியம் ஸ்டோரி
தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனம்

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘காலணி மற்றும் தோல்பொருள்கள் மாநாடு’ நடைபெற்ற அதே தினத்தன்று, முதல்வரின் நட்பு வட்டத்தைச் சேர்ந்த தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில் ‘ரெய்டு’ நடத்தி அதிரவைத்திருக்கிறது வருமான வரித்துறை!

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தோல்பொருள்கள் ஏற்றுமதியில் கார்ப்பரேட் வணிகம் செய்கின்றன ‘ஃபரிதா’ மற்றும் ‘கே.ஹெச்’ பெருநிறுவனங்கள். வர்த்தகத்துறையில் சாதித்ததற்காக, 2011-ல் ஃபரிதா குழுமத் தலைவர் ரஃபீக் அஹம்மதுவுக்கு ‘பத்ம’ விருது வழங்கப்பட்டது. தென்னிந்திய வர்த்தக தொழிற்சங்கத் தலைவர், வெளிநாட்டு வர்த்தக வாரிய உறுப்பினர், ஆம்பூர் பொருளாதார மேம்பாட்டு அமைப்பின் தலைவர் எனப் பெரும் சாம்ராஜ்ஜியத்தையே கைக்குள் வைத்திருக்கும் ரஃபீக் அஹம்மது, கருணாநிதி காலத்திலிருந்தே தி.மு.க-வுடன் நட்பு பாராட்டிவருபவர். எனவே, இந்த ரெய்டு தி.மு.க-வினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

ரெய்டு வளையத்தில் தொழிலதிபர்கள்! - பூச்சாண்டி காட்டுகிறதா மத்திய அரசு!
ரெய்டு வளையத்தில் தொழிலதிபர்கள்! - பூச்சாண்டி காட்டுகிறதா மத்திய அரசு!

இது குறித்துப் பேசுகிற உள்ளூர் தி.மு.க-வினர், ‘‘ஆம்பூர் மற்றும் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமின்றி, அந்தப் பகுதி உள்ளாட்சித் தேர்தல்களிலும் தி.மு.க சார்பில் யாரை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என்பதைக்கூட ரஃபீக் அஹம்மதுவிடம் கேட்டுத்தான் தி.மு.க தலைமை முடிவு செய்யும். இப்போது ஃபரிதா குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதற்குக் காரணம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் தி.மு.க-வை ஆதரிக்கக் கூடாது என்று மிரட்டுவதற்காகத்தான்’’ என்கிறார்கள்.

இதேபோல கே.ஹெச் நிறுவனமும் உயர் ரகத்தில் தோல்பொருள்களை தயாரித்து, பிரபல பிராண்டுகளுக்கு விற்பனை செய்கிறது. இந்தக் குழுமத்தின் தலைவர் முஹமது ஹாசீம், மறைமுகமாக ராணிப்பேட்டை மாவட்ட அரசியலில் காய்நகர்த்திக் கொண்டிருப்பவர்.

ரஃபீக் அஹம்மது
ரஃபீக் அஹம்மது
வாலாஜா அசேன்
வாலாஜா அசேன்

ரஃபீக் அஹம்மதுஇவரைக் குறிவைத்ததற்கான காரணம் குறித்து, காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான வாலாஜா அசேன் கூறுகையில், ‘‘ராணிப்பேட்டை, மேல்விஷாரம் பகுதிகளில் பா.ஜ.க-வினரால் ஒரு கொடிக்கம்பத்தைக்கூட நட முடியவில்லை. இந்தக் கடுப்பில்தான் கே.ஹெச் குழுமத்துக்குள் மூக்கை நுழைக்கின்றனர். குஜராத்தைப் போன்று இங்கிருக்கும் இஸ்லாமிய முதலாளிகளையும் மிரட்டி அச்சுறுத்துகிறார்கள்’’ என்று கடுகடுத்தார்.

கைத்தறித்துறை அமைச்சர் ராணிப்பேட்டை காந்தியிடம் பேசினோம். ‘‘இரு குழுமங்களின் உரிமையாளர்களும் மதம் கடந்து நல்லது செய்யக்கூடியவர்கள். தொழிலிலும் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. அவர்கள்மீது நடத்தப்படும் இந்த ரெய்டு கேலிக்கூத்தாக இருக்கிறது’’ என்றார்.

கார்த்தியாயினி
கார்த்தியாயினி
காந்தி
காந்தி

பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் கார்த்தியாயினியிடம் கேட்டபோது, ‘‘தி.மு.க-வினரும், காங்கிரஸாரும் கூறும் குற்றச்சாட்டு வியப்பாக, விநோதமாக, நகைப்புக்குரியதாக இருக்கிறது. இரண்டு நிறுவனங்களும் முறையான ஆவணங்களையும், கோப்புகளையும் பராமரித்தால் ரெய்டுக்குப் பயப்படவேண்டியதில்லை. ஏதாவது காரணம் தேட வேண்டும் என்பதற்காக பி.ஜே.பி-யை உள்ளே இழுக்கிறார்கள்’’ என்றார்.