Published:Updated:

நெல்லை: ரயிலில் மூடப்பட்ட வாசல்; 14 கி.மீ தொங்கியபடி பயணம் - உயிரைக் காப்பாற்றிய ஊழியர்கள்!

ரயில் பயணியின் உயிரைக் காப்பாற்றிய பணியாளர்

ரயில் புறப்பட்டுச் சென்றதால், ஓடும் ரயிலில் கடைசியில் இருந்த கண்காணிப்புப் பெட்டியில் ஏறியிருக்கிறார். அது பூட்டப்பட்டிருந்ததால் தொங்கியபடியே பயணிக்கும் நிலைமை உருவாகியிருக்கிறது.

நெல்லை: ரயிலில் மூடப்பட்ட வாசல்; 14 கி.மீ தொங்கியபடி பயணம் - உயிரைக் காப்பாற்றிய ஊழியர்கள்!

ரயில் புறப்பட்டுச் சென்றதால், ஓடும் ரயிலில் கடைசியில் இருந்த கண்காணிப்புப் பெட்டியில் ஏறியிருக்கிறார். அது பூட்டப்பட்டிருந்ததால் தொங்கியபடியே பயணிக்கும் நிலைமை உருவாகியிருக்கிறது.

Published:Updated:
ரயில் பயணியின் உயிரைக் காப்பாற்றிய பணியாளர்

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புதன்கிழமைதோறும் கொங்கன் ரயில்வே வழியாக, மும்பை தாதருக்கு வாராந்தர விரைவு ரயில் இயக்கப்படுகிறது. கடந்த வாரம் அந்த ரயிலின் பின்பகுதியில் இரு காலிப்பெட்டிகள் சேர்க்கப்பட்டன. அந்தப் பெட்டிகளில் உள்ள குறைகளைச் சரிபார்த்து பராமரிப்பு செய்வதற்காக அவை அனுப்பப்பட்டன.

நெல்லை: ரயிலில் மூடப்பட்ட வாசல்; 14 கி.மீ தொங்கியபடி பயணம் - உயிரைக் காப்பாற்றிய ஊழியர்கள்!

அந்தப் பெட்டிகள் பராமரிப்புக்காக அனுப்பப்பட்டதால் அவற்றை ரயில்வே ஊழியர்கள் பூட்டிவைத்திருந்தனர். இந்த நிலையில், அந்த ரயிலின் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்யவேண்டிய சரவண அருணாச்சலம் என்ற பயணி தாமதமாக ரயில் நிலையத்துக்கு வந்திருக்கிறார். அவர் நடைமேடை உள்ளே நுழைந்ததும் அவர் பயணிக்கவேண்டிய ரயில் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது.

மும்பை செல்லவேண்டிய சரவண அருணாசலம், என்ன செய்வது என்பது புரியாமல் ஓடும் ரயிலின் பின்புறம் ஓடியிருக்கிறார். ரயிலின் கடைசிப் பெட்டியை எட்டிப் பிடித்த அவர் வாசலில் கைப்பிடியைப் பிடித்துத் தொங்கியதும் ரயில் வேகம் எடுத்துவிட்டது. அப்போதுதான் அந்தப் பெட்டி பூட்டப்பட்டிருப்பதை சரவண அருணாசலம் கவனித்து பதறியிருக்கிறார்.

ரயில்
ரயில்

ஆனாலும், அவரால் இறங்கவோ, உள்ளே செல்லவோ முடியாமல் தவித்தபடியே தொங்கியிருக்கிறார். அவரை நெல்லை ரயில் நிலையத்தின் நடைமேடை இறுதிப் பகுதியில் நின்றபடியே, ஓடும் ரயிலில் ஏதும் குறைபாடு இருக்கிறதா எனக் கண்காணிக்கும் ரயில் பெட்டி பராமரிப்புப் பணியாளர்களான ஞானசேகரன், ராமச்சந்திரன் ஆகியோர் பார்த்துவிட்டனர்.

மும்பை விரைவு ரயில் அடுத்ததாக கோவில்பட்டி ரயில் நிலையத்தில்தான் நிற்கும். அதற்கு 65 கி.மீ தூரம் பயணிக்க வேண்டும். அந்தப் பயணியால் அவ்வளவு தூரம் வாசலில் தொங்கியபடி பயணிப்பது ஆபத்தில் முடியும் என்பதை உணர்ந்த பராமரிப்புப் பணியாளர்கள் இருவரும் உடனடியாக நிலைய அதிகாரிக்கும், தங்களின் மேற்பர்வையாளருக்கும் செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர்.

ரயில்வே ஊழியர்களுக்குப் பாராட்டு
ரயில்வே ஊழியர்களுக்குப் பாராட்டு

துரிதமாகச் செயல்பட்ட பராமரிப்பு மேற்பார்வையாளர் பாலமுருகன், ரயிலின் ஓட்டுநர் மற்றும் ரயில் நிலைய மேலாளரைத் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கியிருக்கிறார். உடனடியாக ரயிலை நிறுத்தாவிட்டால் தொங்கிக்கொண்டிருக்கும் பயணி எந்த நேரத்திலும் கீழே விழும் வாய்ப்பு இருப்பதைத் தெரிவித்திருக்கிறார். அதற்குள் அந்த ரயில் 14 கி.மீ தூரம் சென்றுவிட்டது. இருப்பினும் பயணிக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை கவனத்தில்கொண்டு, ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. பின்னர் பயணி சரவண அருணாசலத்தைக் கீழே இறக்கி, ஓடும் ரயிலில் ஏறுவது ஆபத்தானது என அறிவுரை கூறி அவரின் பெட்டியில் அமரச்செய்து அனுப்பிவைத்துள்ளனர்.

ரயில் பயணியின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்துடன் உடனடியாகச் செயல்பட்ட நெல்லை ரயில் நிலையத்தின் ரயில்பெட்டி பராமரிப்பு மேற்பார்வையாளர் பாலமுருகன், ஊழியர்கள் ஞானசேகரன், ராமச்சந்திரன் ஆகியோருக்கு சக ஊழியர்களும் அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்தனர். அவர்களை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் நேரில் அழைத்துப் பாராட்டியதுடன், ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கினார்.