Published:Updated:

திருடனாக மாறிய போலீஸ்! - ராமநாதபுரம் ரவுசு

ராமநாதபுரம் காவல்நிலையம்
பிரீமியம் ஸ்டோரி
ராமநாதபுரம் காவல்நிலையம்

காணாமல்போன ஒரு செல்போனின் ஐ.எம்.இ.ஐ நம்பரைக் கண்காணித்தபோது, அது ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் பயன்படுத்தப்பட்டுவருவது தெரிந்தது.

திருடனாக மாறிய போலீஸ்! - ராமநாதபுரம் ரவுசு

காணாமல்போன ஒரு செல்போனின் ஐ.எம்.இ.ஐ நம்பரைக் கண்காணித்தபோது, அது ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் பயன்படுத்தப்பட்டுவருவது தெரிந்தது.

Published:Updated:
ராமநாதபுரம் காவல்நிலையம்
பிரீமியம் ஸ்டோரி
ராமநாதபுரம் காவல்நிலையம்

உயிரிழந்த காவலரின் செல்போனை சக காவலர்களே திருடி விற்பனை செய்திருக்கும் சம்பவம், ராமநாதபுரம் காவல்துறைக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

ராமநாதபுரம் ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றிய அசோக்குமார் என்பவர் கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கு கேணிக்கரை போலீஸ் வசமிருந்து, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தங்களிடம் இருந்த வழக்கின் ஆவணங்கள் அனைத்தையும் சி.பி.சி.ஐ.டி-யிடம் ஒப்படைத்தனர் கேணிக்கரை போலீஸார். அப்போது, அசோக்குமார் பயன்படுத்திய இரு செல்போன்கள் மற்றும் அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் நகை மாயமாகியிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கேணிக்கரை போலீஸாரிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் பலமுறை கேட்டும் முறையான பதில் இல்லாததால், சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியுடன் விசாரணை நடத்தினார்கள்.

திருடனாக மாறிய போலீஸ்! - ராமநாதபுரம் ரவுசு

காணாமல்போன ஒரு செல்போனின் ஐ.எம்.இ.ஐ நம்பரைக் கண்காணித்தபோது, அது ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் பயன்படுத்தப்பட்டுவருவது தெரிந்தது. அந்த போனை வைத்திருந்தவரைப் பிடித்து விசாரித்த போது, வசந்தம் நகரிலுள்ள பழைய செல்போன் விற்கும் கடையில் அதை வாங்கியதாகத் தெரிவித்தார். கடை உரிமையாளர் ரமேஷ் என்பவரோ, ‘கேணிக்கரை காவல் நிலைய எழுத்தர் சுரேஷ், ஏட்டு கமலக்கண்ணன் ஆகியோர் இரு செல்போன் களைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். அடிக்கடி இதுபோல பழைய செல்போன்களை என்னிடம் விற்பார்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

இது குறித்து அங்கு பணியாற்றும் போலீஸார் சிலரிடம் பேசினோம். ‘‘எழுத்தர் சுரேஷ், ஏற்கெனவே 2016-ல் ஒரு வழக்கில் கைப்பற்றப்பட்ட நகைகளில் ஒன்றைத் திருடியபோது கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறார். ஆனாலும் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சில வருடங்களுக்கு முன்பு சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கள்ளத் துப்பாக்கிகளுடன் பிடிபட்டபோது, அவருக்கு உதவியதாக சுரேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சில தினங்களுக்கு முன்புகூட, மணல் கொள்ளையில் பிடிபட்ட குற்றவாளிகளையும் தப்பவிட்டிருக்கிறார் அந்த சுரேஷ்’’ என்று வரலாறு சொல்கிறார்கள்.

சுரேஷ்
சுரேஷ்
கமலக்கண்ணன்
கமலக்கண்ணன்
தங்கதுரை
தங்கதுரை

குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் கேட்க எழுத்தர் சுரேஷைத் தொடர்புகொண்டபோது, செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. மாவட்ட எஸ்.பி தங்கதுரையிடம் பேசினோம். ‘‘வழக்கின் ஆவணமான செல்போன் திருடப்பட்டது தொடர்பாக எழுத்தர் சுரேஷ், ஏட்டு கமலக்கண்ணன் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கி றார்கள். நம்பிக்கை மோசடிப் பிரிவின் கீழ் வழக்கும் பதிந்திருக்கிறோம். நிறைய குற்றச்சாட்டுகள் இருப்பதால், சுரேஷிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. குற்றச்சாட்டுகள் உறுதியானால், நடவடிக்கை இன்னும் கடுமையாக இருக்கும்” என்றார்.

கறுப்பு ஆடுகளின் யூனிஃபார்மைக் கழற்றுமா காவல்துறை?