Published:Updated:

“13 வயதில் வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன்..!” - ‘ராம்ராஜ் காட்டன்’ கே.ஆர்.நாகராஜன்

கே.ஆர்.நாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
கே.ஆர்.நாகராஜன்

பொருளின் தரத்தை உயர்த்த வேண்டும். பொருள்கள் விற்றுத் தீர்ந்தால், பணத்துடன் அடுத்த ஆர்டரும் கிடைக்கும்!

“13 வயதில் வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன்..!” - ‘ராம்ராஜ் காட்டன்’ கே.ஆர்.நாகராஜன்

பொருளின் தரத்தை உயர்த்த வேண்டும். பொருள்கள் விற்றுத் தீர்ந்தால், பணத்துடன் அடுத்த ஆர்டரும் கிடைக்கும்!

Published:Updated:
கே.ஆர்.நாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
கே.ஆர்.நாகராஜன்
டந்த வாரம் நாணயம் விகடன் ஏற்பாடு செய்திருந்த வெபினார் கூட்டத்தில் பேசினார் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர்.நாகராஜன். ‘பிசினஸில் வாய்ப்புகளைத் தவற விடாதீர்கள்’ என்ற தலைப்பில் அவர் தனது வாழ்க்கை அனுபவங்களை சுவாரஸ்யமாக எடுத்துச் சொன்னார்.

விதை ஊன்றிய திருப்பூர் தொழிலதிபர்!

‘‘எங்கள் குடும்பத்தில் நான்தான் முதல் தலைமுறையாக வியாபாரம் செய்ய வந்தவன். சிறுவயதிலிருந்தே எனக்கு சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டும் என்பது கனவு. நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊருக்கு வாரம்தோறும் திருப்பூரிலிருந்து ஒருவர் வருவார். அவர் காரில் வரும்போது, அந்த கார் பின்னால் நாங்கள் ஓடுவோம். ஒருமுறை அப்படி ஓடும்போது தடுக்கி விழுந்துவிட்டேன். காலில் பலமான அடி. என் அம்மா காலில் கட்டுப் போட்டார். அவர் எப்படி கார் வாங்கினார் என்று என் அம்மாவிடம் கேட்டேன். அவர் வியாபாரம் செய்வதாகச் சொன்னார் அம்மா. என்ன படித்திருக்கிறார் என்று கேட்டேன். மூன்றாவதோ, நான்காவதோ படித்திருப்பார் என்றார் என் அப்பா. ‘பி.ஏ. பி.எட் படித்த என் பள்ளி ஆசிரியர் சைக்கிளில் வந்துபோகிருகிறார். நான்காவது படித்துவிட்டு, இவர் எப்படி காரில் வருகிறார்?’ என்று கேட்டேன். அதற்கு பதிலில்லை. ஆனால், அவரைப்போல நானும் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

“13 வயதில் வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன்..!” - ‘ராம்ராஜ் காட்டன்’ கே.ஆர்.நாகராஜன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

13 வயதில் பத்திரிகை விற்றேன்..!

நான் 9-ம் வகுப்புப் படிக்கும்போது, பள்ளிக் கூடத்துக்குக் கட்டணம் செலுத்த என் அப்பாவால் இயலவில்லை. அப்போது எனது வீட்டுக்கு அருகில் ஒருவர் நியூஸ் ஏஜென்சியை நடத்திவந்தார். அவரிடம் அந்த வியாபாரத்தைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டேன். அதற்குப் பிறகு, பாலமித்ரா பத்திரிகையின் ஆசிரியருக்குக் கடிதம் எழுதி, எந்த டெபாசிட்டும் செலுத்தாமல் புத்தகத்தை விற்கும் ஏஜென்சியைப் பெற்றேன். மாதம்தோறும் 15 ரூபாயைச் சம்பாதிக்கும் வாய்ப்பை அந்த வயதிலேயே உருவாக்கிக் கொண்டேன். இந்த வருமானத்தில் என் பள்ளிக் கட்டணத்தை கட்டினேன். வாய்ப்புகளை எப்போதும் நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொழில் கற்றுக்கொண்டேன்..!

நான் தொழில் செய்வதற்கு முன் எல்லா நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்த பின்னர்தான் தொழில் ஆரம்பித்தேன். தென்னிந்தியாவில் உள்ள அனைத்து வியாபாரிகளின் மனதையும் படித்தேன். நான் வேலை பார்த்த வேட்டி நிறுவனத்தில் உற்பத்தி, மார்க்கெட்டிங் என எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். மார்க்கெட்டிங்க் செய்யும்போது கடினமான சூழல்களை எதிர்கொள்ள நேரிடும். அவற்றையெல்லாம் சரியாக எதிர்கொண்டால் சந்தையில் வெற்றி பெறலாம். இந்தியாவில் உள்ள எல்லா தொழிலதிபர்களும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டவர்களே. ஒவ்வொரு தொழிலபதிரிடமும் உழைப்புடன் நாணயமும் உள்ளன. தொழிலில் வாய்ப்புகளுக்குமுன்னர் நாம் நாணயமாக இருக்க வேண்டும்.

கே.ஆர்.நாகராஜன்
கே.ஆர்.நாகராஜன்

பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு மட்டும் தொழில் செய்தால் வெற்றியடைய முடியாது. எனது தொழிலை ஆரம்பித்தவுடன் நெசவாளர்களுக்கு நல்ல வாழ்வாதாரம் கிடைத்தது. கடைகளுக்கு நல்ல சரக்குக் கிடைத்தது. அதை வாங்கிப் பயன்படுத்தும் மக்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இதுதான் நான் ஜெயிப்பதற்குக் காரணம்.

எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் அனைத் தையும் பயன்படுத்தினேன். தென்னிந்தியா முழுவதும் உள்ள எல்லா ஜவுளிக் கடைகளுக்கும் ஏறி இறங்கியிருக்கிறேன். இதற்கு முழுக் காரணம், நமது மனதில் உள்ள நம்பிக்கைதான். வேட்டித் தொழிலுக்குப் பதிலாக ஏற்றுமதிக்குச் சென்றிருந்தால் நான் இந்தளவுக்கு வந்திருக்க மாட்டேன்’’ என்றவர், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

உங்கள் ஊழியர்களை எப்படி உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்கிறீர்கள்?

‘‘தொழில் செய்ய பணம், பொருள் மற்றும் மனிதசக்தி தேவை. எந்த நிறுவனம் மனித சக்தியை சரியாகப் பயன்படுத்துகிறதோ, அந்த நிறுவனம் வெற்றி பெறும். ஊழியர்களுக்கு நன்கு பயிற்சி கொடுத்து வேலை வாங்கும் திறன் நம்மிடம் இருக்க வேண்டும். ஊரடங்கில் கூட எல்லா மாதங்களும் எங்கள் ஊழியர் களுக்குச் சம்பளம் தந்து, அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம்.’’

பொருள்களை விற்கத் தந்தபின் அதற்கான பணம் சரியாக வரவில்லை. இதை எப்படிச் சரிசெய்வது?

‘‘நாம் தரும் பொருள் விற்பனை ஆகிவிட்டால், கடைக்காரர்கள் பணம் தரத் தயங்க மாட்டார்கள். இதற்கு முதலில் பொருளின் தரத்தை உயர்த்த வேண்டும். நாம் தரும் பொருள்கள் உடனே விற்றுத் தீர்ந்தால், பணத்துடன் அடுத்த ஆர்டரும் கிடைக்கும்.’’

கே.ஆர்.நாகராஜன்
கே.ஆர்.நாகராஜன்

போட்டியாளர்களை எப்படிச் சமாளிக்கலாம்?

‘‘இன்று வேட்டி தயாரிக்கும் பலரும் எங்கள் நிறுவனத் திலிருந்து சென்றவர்களே. நான் யாரையும் போட்டி யாளராக நினைப்பதில்லை. அவர்களை தொழில்ரீதியாக என்னைப் பின்தொடர்பவர் களாகவே கருதுகிறேன்.’’

மாஸ்க் செய்யும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

‘‘மத்திய அரசுக்கு ஆர்டர் எடுத்த ஒரு நிறுவனத்தால் மாஸ்க் தயாரித்துக் கொடுக்க முடியவில்லை. அவர்கள் எங்களைச் செய்து தரச் சொன்னார்கள். உடனே நாங்கள் உலகச் சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளைப் பயன்படுத்தி மாஸ்க் தயாரித்துக் கொடுத்தோம். அதன்பின்னர் நாங்களும் மாஸ்க் தயாரித்து விற்கத் தொடங்கினோம். இன்றுவரை எங்களுக்கு ஆர்டர்கள் வந்து குவிகின்றன.’’

தொழில் செய்ய ஆசை. ஆனால், நம்பிக்கை வர மாட்டேன் என்கிறதே!

‘‘நம்பிக்கை எந்தக் கடையிலும் விற்கப்படுவது இல்லை. நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். உங்களுடைய பலத்தைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள். தொழில் செய்ய மூலதனம், உழைப்பு, அனுபவம் ஆகியவை தேவை. உங்களிடம் என்ன திறன் இருக்கிறதோ, அந்தத் துறையில் முதலீடு செய்து தொழில் ஆரம்பியுங்கள். பின்னர், அதிலிருந்து வரும் அனுபவத்திலிருந்து படிப்படியாக முன்னேறுங்கள்.’’

நேர மேலாண்மையை எப்படிக் கடைப்பிடிக்கிறீர்கள்; தொழிலையும் குடும்பத்தையும் எப்படிக் கவனித்துக் கொள்கிறீர்கள்?

‘‘நான் வேதாத்ரி மகரிஷியிடமிருந்து மனவளக்கலைப் பயிற்சியைப் பெற்றவன். ஒவ்வொரு மனிதனுக்கும் சமுதாயத்திலிருந்து ஆறு பண்புகள் அப்படியே வந்துவிடுகின்றன. அவை பேராசை, கடுங்கோபம், முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை வஞ்சம் மற்றும் கடும்பற்று ஆகும். இவற்றை முறையே சீரான ஆசை, பொறுமை, கற்பு நெறி, சமநோக்கம், மன்னிப்பு மற்றும் ஈகையாக மாற்ற வேண்டும். இதைத்தான் மனவளக் கலையில் சொல்லித்தருகிறார்கள். இந்த நேர்மறையான ஆற்றல்களைச் சீர்செய்தாலே நாம் சிறந்து விளங்கலாம்.’’

உங்களுடைய நிறுவனத்தை எப்போது பங்குச் சந்தையில் பட்டியலிடப் போகிறீர்கள் ?

‘‘இதுவரை எங்களது நிறுவனத்தை குடும்ப நிறுவனமாகத்தான் கொண்டு வந்துள்ளேன். ஆனால், இதைப் பொது நிறுவனமாகக் கொண்டுபோனால்தான் எதிர்காலத்திலும் நிலைக்கும் என்கிறார் என் அடுத்த தலைமுறை யினர். அடுத்த ஐந்து, ஆறு வருடங்களில் பொது நிறுவனமாகக் கொண்டுவர முயற்சி செய்வோம். இதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.’’