Published:Updated:

2K kids: வனதேவதையின் பரிசு... பழங்கள்!

பழங்கள்
பிரீமியம் ஸ்டோரி
பழங்கள்

ஹ.பரம கல்யாணி

2K kids: வனதேவதையின் பரிசு... பழங்கள்!

ஹ.பரம கல்யாணி

Published:Updated:
பழங்கள்
பிரீமியம் ஸ்டோரி
பழங்கள்

குற்றாலத்தில் சீஸன் மாதங்களில் மட்டுமே கிடைக்கக் கூடிய அரிய பழங்கள் பல உள்ளன. மேலும், கேரளா மற்றும் பிற மலைப்பகுதிகளில் இருந்து வரும் பழங்களும் குற்றாலத்தில் குவிவது வழக்கம். வண்ண வண்ணமாகக் கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காணப்படும் துரியன் பழம், மங்குஸ்தான், ரம்புட்டான், முட்டைப் பழம், நட்சத்திர பழம், டிராகன் பழம், முள் சீத்தா பழம், வால்பேரி போன்ற பழங்களுடன் வழக்கமான மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், சப்போட்டா, பேரிக்காய், ஆப்பிள், பப்பாளி, நாவல் பழங்களும் குற்றால சீஸனில் சக்கைபோடு போடும்.

குற்றாலம் மெயின் அருவி பகுதியில் மூன்று வருடங்களாகப் பழ விற்பனை செய்து வரும் டேவிட், பழ வகைகள் மற்றும் விற்பனை பற்றிப் பகிர்ந்தார்... `‘குற்றால மலைப்பகுதியில விளையுற பிரத்யேகப் பழங்கள், மங்குஸ்தான், ரம்புட் டான். பழங்களோட விளைச்சல் அதிகமா இருந்தா, அந்த வருஷம் விலை குறைவா இருக்கும். விளைச்சல் குறைஞ்சா, விலை அதிகமா இருக்கும். குற்றாலத்துல கிடைக் குற பழங்கள் மருத்துவ குணங்கள் கொண்டவை என்பதால, சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கு வாங்க. சந்நிதி பஜார், மெயின் அருவி, ஐந்தருவி, ஐந்தருவி சாலைனு குற்றாலம் முழுக்க பழ விற்பனை அமோகமாக இருக்கும். குற்றாலம் அருவிகள்ல தண்ணீர் வரத்து ஜோரா இருந்து, குளிக்கத் தடை இல்லாம இருந்தா வியாபாரம் ஓஹோனு இருக்கும். இப்போ கொரோனா சூழலால வியாபாரம் மந்தமாதான் இருக்கு’’ என்றார்.

2K kids: வனதேவதையின் பரிசு... பழங்கள்!

பழங்களும் மருத்துவ குணங்களும்!

குற்றாலத்தில் கிடைக்கும் சீஸனல் பழங்கள் சப்புக்கொட்ட வைக்கும் சுவையுடன் ஆரோக் கிய பலன்களையும் கொடுக்கக்கூடியவை.

மங்குஸ்தான்: குற்றால பழங்களின் ராஜா, மங்குஸ்தான். இது பார்க்க நுங்கு போல இருக்கும். இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அஜீரணக் கோளாறு உள்ளவர்கள், உடல் எடை கூட வேண்டும் என்று விரும்புபவர் களுக்கு ஏற்ற பழம்.

ரம்புட்டான்: குற்றால சீஸனல் பழங்களில் அதிக ஆரோக்கிய பலன்கள் கொண்டது, ரம்புட்டான். ‘ரம்புட்’ என்ற வார்த்தைக்கு மலாய் மொழியில் `முடி' என்று அர்த்தம். இப்பழத்தின் வெளிப்புறம், முடி போன்ற அமைப்பைக் கொண்டுள்ளதால் இந்தப் பெயர். இதில் அதிக நீர்ச்சத்து உள்ளது. சருமத் துக்கு நல்லது.

2K kids: வனதேவதையின் பரிசு... பழங்கள்!

முள் சீத்தா: சிறுநீரகப் பிரச்னைகள், குடல் நோய், சரும நோய்களுக்கு நிவாரணம் அளிக்கக் கூடியது. கேன்சர் நோய்க்கு அரு மருந்தாகத் தற்போது பரிந் துரைக்கப்படுகிறது.

டிராகன் பழம்: இது பார்க்க கள்ளிப்பழம் போல இருக்கும். பார்வைத் திறன் கோளாறு உள்ளவர்களுக்குப் பரிந்துரைக்கத்தக்கது. இதயநோய் உள்ளவர்களுக்கு இது உகந்த பழம். முடி உதிர்வு பிரச்னை உள்ளவர்களுக்கு, கேசத்தின் வேர்க்கால்களைப் பலப்படுத்தி தீர்வு தரும்.

நட்சத்திர பழம்: ‘ஸ்டார் பழம்’ என்று மக்களால் அழைக்கப்படும் இந்தப் பழம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கக்கூடியது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கும். இது புளிப்பு கலந்த இனிப்புச் சுவையுடன் இருக்கும். மேலும், தனித்த வாசனையைக் கொண்டிருக்கும்.

2K kids: வனதேவதையின் பரிசு... பழங்கள்!
2K kids: வனதேவதையின் பரிசு... பழங்கள்!

துரியன் பழம்: மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடியது, துரியன் பழம். பார்ப்பதற்கு பலாப்பழம் போல இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த வல்லது. பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை கோளாறுகளுக்கு நல்ல மருந்து. எலும்புகளுக்கு வலு சேர்க்கும். கருத்தரித்தல் பிரச்னைகளுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.

மலைக்காட்டுப் பழங்கள், ஆரோக்கியப் பெட்டகங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism