Published:Updated:

‘ஹிஜாப்’க்கு தடை; மற்ற மத அடையாளங்களுக்கு?!

ஹிஜாப்
பிரீமியம் ஸ்டோரி
ஹிஜாப்

#Avaludan

‘ஹிஜாப்’க்கு தடை; மற்ற மத அடையாளங்களுக்கு?!

#Avaludan

Published:Updated:
ஹிஜாப்
பிரீமியம் ஸ்டோரி
ஹிஜாப்

உலகம் முதல் உள்ளூர் வரை, பரபரப்பு செய்திகள் குறித்த கருத்துகளை பகிரச் சொல்லி அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய விதிக்கப் பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், `ஹிஜாப் அணிவதற்கு யாரும் தடை விதிக்கவில்லை. அது பற்றி கேள்வி யும் எழுப்பவில்லை. கல்வி நிலையங்களில் அதை அணிவதற்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்துதான் இந்த வழக்கு கேள்வி எழுப்பு கிறது’ என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

கல்வி நிலையங்களில் மாணவர்களிடம் அனுமதிக்கப்படும், மறுக்கப்படும் மத அடை யாளங்கள் குறித்த தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளச் சொல்லி அவள் விகடன் சமூக வலைதளப் பக்கங்களில் வாசகர்களிடம் கேட்டிருந்தோம். அவற்றில் சிறந்தவை இங்கே...

Anbu Bala

கல்வி நிலையங்களில் எல்லா மத அடையாளங் களையும் தடை செய்ய இயலுமா? இயலாது. அப்படி எனில், ஏன் ஒரு பிரிவினரை மட்டும் குற்றம் சொல்ல வேண்டும்?

மார்கழி மாதத்தில் ஐயப்பனுக்கு மாலை போடும் மாணவர்கள் கறுப்பு நிற உடை, துண்டு அணிந்து பள்ளிக்கு வருவார்கள். சீக்கியர்கள் எங்கு சென் றாலும் டர்பனை அகற்ற மாட்டார்கள். மதரஸாக் களிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் தலை யில் தொப்பியுடன்தான் வருவார்கள். அதேபோல் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள். இது என் ஆசிரியை பணி அனுபவத்தில் காலமாகப் பார்த்து வருவது. ஆனால், இதற்கு இப்போது ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று தெரியவில்லை.

Vaira Bala

கல்வி நிலையங்களில் மத அடையாளங்கள் அனுமதிக்கப்படக் கூடாதுதான். ஹிஜாப் அணிந்துகொண்டு பள்ளி வரை வந்து, வகுப்புக்குள் சீருடையுடன் அமரலாம் போன்ற ஏற்பாடுகள் பேசப்பட வேண்டும். மற்ற மத அடையாளங்களுக்கும் அது பின்பற்றப்பட வேண்டும். ஆண்டாண்டுகளாக கல்வி மறுக்கப் பட்ட சிறுபான்மையினப் பெண்கள், ‘ஹிஜாப் அணிந்து வேண்டு மானால் படிக்கப் போ’ என்று அனுப்பப்படும்போது, இதுபோன்ற முடிவுகளால், அவர்கள் படிப்பு பாதிக்கப்பட்டுவிடக் கூடாது.

சின்ன கனி

சீருடையை மறைக்காமல் தலையை மட்டும் மறைக்கும் 'ஹிஜாப்'க்கு அனுமதி அளிக்கலாம். சீக்கியர்கள் தலைப்பாகை அணிந்து பள்ளி, கல்லூரி, ராணுவம் வரை செல்கிறார்கள். ஒரு தரப்பினருக்கு அனுமதி, ஒரு தரப்பினருக்குத் தடை என்பது எப்படி நீதியாகும்?

Amaresan

மத அடையாளம் என்பது, நெற்றியில் இடும் விபூதி, குங்குமம், சந்தனத்தில் தொடங்கி, பூணூல், சாதிக் கயிறு வரை அனைத்துக்கும் பொருந்தும்தானே? எத்தனையோ பள்ளிகளில் அனைத்து மத தெய்வங்களின் படங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன பன்முகத் தன்மையை தன் முகமாக வைத்திருக்கும் ஜனநாயக நாடான இந்தியாவில், மாணவர்கள் மத அடையாளத்தை தவிர்க்க வேண்டும் என்று தடை விதிப்பது சரியா?

‘ஹிஜாப்’க்கு தடை; மற்ற மத அடையாளங்களுக்கு?!

Prem Prem

உங்கள் அரசியலில், படிக்க வந்த மாணவிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள். அவர்களை படிக்க விடுங்கள்.

Durai Sekar

சீருடையின் நோக்கமே, ஏற்றத்தாழ்வுகள், வித்தியாசங் களைக் களைவதுதான். எனவே, கல்வி நிலையங்களில் எல்லா மத அடையாளங்களுக்கும் தடை விதிக்க வேண் டும். குறிப்பாக, அவை அரசியலாகி பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும் என்ற சூழ்நிலையில், அதை நடை முறைப்படுத்துவத்தில் அதிக கவனமும், பாரபட்சமற்றத் தன்மையும் தேவை.

Joseph Ponraj

கல்வி கற்கும் இடங்களில் கல்வி மட்டுமே பாகுபாடின்றி கிடைக்க வேண்டும்.

C K Furn Chinna

மாணவப் பருவத்தில், மதம், சாதி குறித்த வேற்றுமைகள் அவர்கள் மனங்களில் இருந்து களையப்பட்டு, ஒற்று மையே விதைக்கப்பட வேண்டும். ‘அனைவரும் இங்கு சமம், யாரும் எந்த அடையாளத்தையும் வெளிப்படுத்தக் கூடாது’ என்று வலியுறுத்தப்பட வேண்டும். இது, எல்லா மதத்தினருக்கும், சாதியினருக்கும் ஒரேபோல செயல் படுத்தப்பட வேண்டும்.

Abdul Samath Fayaz

இவ்வளவு காலம் எழாத ஹிஜாப் பிரச்னை இப்போது எழக் காரணம் என்ன என்று ஆராய வேண்டும். இப்போது தான் இந்தப் பெண்கள் வெளியே வரவே தொடங்கியிருக் கிறார்கள். ஒரு பெண் கல்வி கற்கும்பொருட்டு வீட்டை விட்டு வெளியேறும்போது, தன் தலையை மறைத்தால், யார் குடிகள் இங்கே மூழ்கிப்போகும் என்ற கேள்வி எழுகிறது. ஹிஜாப் என்றால் வெறும் தலையை மறைப்பது தானே ஒழிய, கறுப்பு அங்கியால் உடல் முழுக்க மறைப்பதல்ல. சீருடை அணிய மாட்டோம் என்றா அடம் பிடிக்கிறார்கள்? தங்களது தலையை மறைக்க அந்தப் பெண்கள் அனுமதி கேட்கிறார்கள், அவ்வளவுதான்.

Velusamy K

அரசுப் பள்ளிகளிலேயே மத விழாக்கள் கொண்டாடப்படும் சூழலில், மாணவிகள் ஹிஜாப் அணிவதை ஏன் கர்நாடக அரசு இந்தளவுக்குத் தொந்தரவு செய்ய வேண்டும்? எல்லா மதங்களிலும், எத்தனையோ மதக் கட்டுப்பாடுகளில் இருந்து பெண்களுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. அதேபோல, மதத்தின் பெயரால் பெண்கள் தங்களை மறைத்துக்கொள்ள அறிவுறுத்தும் வழக்கமும் மாற்றப்பட வேண்டும்தான். ஆனால், அந்த மாற்றத்தை ஏற்படுத்து வதில் தடை, திணிப்பைவிட விழிப்புணர்வே அவசியம்.