Published:Updated:

அணிலாடும் தமிழகம்... `உண்மையிலேயே முடியல!'

மின்வெட்டுப் பிரச்னை
பிரீமியம் ஸ்டோரி
மின்வெட்டுப் பிரச்னை

#Avaludan

அணிலாடும் தமிழகம்... `உண்மையிலேயே முடியல!'

#Avaludan

Published:Updated:
மின்வெட்டுப் பிரச்னை
பிரீமியம் ஸ்டோரி
மின்வெட்டுப் பிரச்னை

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டுப் பிரச்னையால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தங்கள் பகுதியில் நிலவும் மின்தடை நிலைமை பற்றியும், அதனால் தங்கள் வேலை/தொழிலில் ஏற்படும் இழப்பு பற்றியும், நாட்டின் மின் உற்பத்தியில் மத்திய, மாநில அரசு மீதான கருத்துகள், விமர்சனங்களையும் #Avaludan என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று அவள் விகடன் சமூக வலைதளப் பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...

Michael Suresh

வெயில் தாங்க முடியவில்லை. இப்போது குளிர்சாதனப் பெட்டிகள் வாடகைக்குக் கிடைப்பதால், மக்கள் பலரும் அதை வாங்கி உபயோகிக்க ஆரம்பித்துவிட்டனர். தொழிற்கூடங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தைக் குறைத்தால், பலருக்கும் வேலையில்லா சூழல் உருவாகலாம். என்ன தான் நடக்கப்போகிறதோ பார்ப் போம்.

அணிலாடும் தமிழகம்...
`உண்மையிலேயே முடியல!'
கார்ட்டூன்: உதயராஜன்

Ganesh Sakthi

பத்தாண்டுகளாக இல்லாத மின்வெட்டு, இப்போது மீண்டும். மத்திய, மாநில அரசுகள் தான் இந்தப் பிரச்னையைக் கணித்து முன்னேற் பாடுகளைச் செய்திருக்க வேண்டும்.

Niranjan Kamaraj

நிலக்கரி பிரச்னையால், இந்திய ரயில்வே மே 24 வரை 40 பயணிகள் ரயில்களை ரத்து செய்துள்ளது. மாநிலங்களுக்கு நிலக்கரியை சரக்கு ரயிலில் வேகமாக அனுப்பிவைக்க, இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒரு துறையின் பிரச்னை, எல்லா துறைகளிலும் எதிரொலிப்பது கொடுமை. மேலும், மின் வெட்டால் அரசு மருத்துவமனை சேவைகள் பாதிக்கப்படலாம் என்று வரும் செய்திகளும் கவலை தருகின்றன.

Arul Arul

நான் ஒரு பேக் டெய்லர். காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை எனது வேலை நேரம். இப்போது குறைந்தது 3 - 5 மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது. இதனால் என் முதலாளி, என் சம்பளத்தில் 200 ரூபாயைக் குறைத்து விட்டார். என்னைப் போன்ற எளிய மக்களின் வாழ்வாதாரத்தில் மின்வெட்டு நேரடியாக ஏற்படுத்தும் பாதிப்பு பற்றிக் கவலைப்பட ஆள்பவர்கள், அதிகாரிகள் இருக்கிறார்களா என்ன?

Tamilarasan Mangalraj

மத்திய அரசின் மெத்தன போக்கே மின் வெட்டுக்குக் காரணம். இதில் தமிழக அரசின் துரித செயல்பாடு ஓ.கே.

Gopi

தினமும் மின்வெட்டு ஏற்படுகிறது. போகப் போக மின்வெட்டு நேரம் இன்னும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுவது அச்சத்தைத் தருகிறது. இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில், ஆளும் அரசு மின்வெட்டுப் பிரச்னையை முன்கூட்டியே கணித்து உரிய நடவடிக்கையை மேற்கொள்ளாதது அரசு இயந்திரத்தின் அலட்சியத்தைக் காட்டுகிறது.

Pushpa Kannan

திருநெல்வேலி மாவட்டம் சங்கர நகரில் வசிக்கிறோம். ஒரு மணி நேரத்துக்குள் சுமார் 3, 4 முறை மின்வெட்டு ஏற்படுகிறது.

Sathishkumar Rajendran

மின்வெட்டு ஒருபக்கம், லோ வோல்டேஜ் ஒருபக்கம் என படுத்தி எடுக்கிறது. புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. நம் வரிப் பணத்தால் நமக்கு தடையற்ற மின்சாரம் கூட கொடுக்க முடியாத அரசு இது.

Sas Paulraj

தென் திருச்சி, தீரன் நகரில் கடந்த மூன்று மணி நேரமாக மின்தடை. வியர்வைக்கும் இருளுக்கும் பழகிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை போல.

அம்மாவேல்

மின்தடையை தினமும் ஒரே மாதிரியாக செயல்படுத்தினா லாவது, அதற்குத் தகுந்தது போல நம் வேலைகளைத் திட்ட மிடலாம். எப்போது கரன்ட் போகும், எப்போதும் வரும்... எதுவும் தெரியாது. உண்மை யிலேயே முடியல!

அணிலாடும் தமிழகம்...
`உண்மையிலேயே முடியல!'

Subramanian Manian

நல்லிகவுண்டன்பாளையத்தில் மின் தடையே இல்லை.

Ra Saminathan

30% இயற்கையான தட்டுப் பாடு. 70% செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுத்தப் பட்டுள்ளது. செயற்கை தட்டுப் பாட்டால் அதிகாரிகள், தனியார் மின் உற்பத்தியாளர்கள் மற்றும் பலருக்கு லாபம்.

Baskar

நம் நாட்டைப் பொருத்தவரை, பல பிரச்னைகளுக்கும் ஆளும் அரசு மட்டுமல்ல, முன்னர் ஆட்சியிலிருந்த அரசும் காரண மாக இருக்கும். ஆக மொத்தத்தில், எந்தக் கட்சி, யார் ஆட்சி என் றாலும் நாட்டின் மீது, மக்கள் மீது அவர்களுக்கு இருக்கும் அக்கறை இதுதான் என்பதையே இது காட்டுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism