Published:Updated:

போட்டோ தாக்கு

என் ட்வீட்டை மறுபடி நான் படிக்கிறப்ப எனக்கே தலை சுத்திருச்சுப்பா...

பிரீமியம் ஸ்டோரி

வ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

@parveenyunus

எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி மனுஸ்மிருதியில சொன்னதெல்லாம் இவங்களுக்குப் புரியுது... நான் பேசுறது புரியலேன்னு சொல்றாங்களே?

@RahimGazzali

என் ட்வீட்டை மறுபடி நான் படிக்கிறப்ப எனக்கே தலை சுத்திருச்சுப்பா...

@RamAathiNarayen

திடீர்னு யாராவது `மருதநாயகம்’, `சபாஷ் நாயுடு’ எல்லாம் எப்போ வரும்’னு கேட்டா இப்படி தலையில கையைவெச்சுக்கிட வேண்டியதுதான்!

போட்டோ தாக்கு

Follow Us On:
facebook.com/JuniorVikatan
twitter.com/JuniorVikatan

@saravankavi

இது கிராமசபைக் கூட்டம்கிறதை மறந்துட்டு `பிக் பாஸ்’ல பேசுற ஸ்கிரிப்டைப் படிச்சுத் தொலைச்சுட்டு... ஒரே அசிங்கமா போச்சு குமாரு!

@amuduarattai

என்னது... சீமான்கிட்ட அனுமதி கேட்டுத்தான் ‘தெனாலி’ படத்துல நான் நடிச்சேன்னு சீமான் சொல்றாரா!?

@Raja_AnvarTwits

நல்லவேளை... எனக்குப் பின்னால கூட்டம் இருக்கு. இல்லைனா... குஷ்புவுக்கு மீம்ஸ் போட்ட மாதிரி போட்டுருவாங்க!

@absivam

புரியாத மாதிரி மய்யமா ஏதாவது சொல்லிட்டுக் கிளம்பலாம்னு பார்த்தா, பயபுள்ளைக போராட்டத்துல உட்கார வெக்கிறானுங்களே..!

@KLAKSHM14184257

இது, தலைவலி இல்லை... ‘தலை’யா ஆனதால வந்திருக்கிற வலி!

Mujibur Rahman

``தலைவரே, இவ்வளவு பேரும் நம்ம கட்சியில சேர வந்திருக்காங்களா?’’

``அட நீ வேற... வெங்காயத்தைப் பத்தி நான் சொன்னதுக்கு விளக்கம் வேணுமாம்!’’

உதயகுமார் க.இரா.

பேசாமல் நண்பர் ரஜினி மாதிரி `கட்சி ஆரம்பிக்கிறேன்’னு பாவ்லா மட்டும் காட்டியிருக்கலாமோ?

Saraswathy Senthil

கலைஞானியான என்னை அரசியல், ‘கவலை’ஞானி ஆக்கிடும்போலிருக்கே..!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு