ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

@Kirachand4
கார்த்தி சிதம்பரம்: நம்ம கட்சியினர் வேலையே செய்யறதில்லைன்னு திருநாவுக்கரசர் சொல்லியிருக்காரேப்பா?
ப.சிதம்பரம்: நீ எப்பவும் நெட்ஃபிளிக்ஸ்ல படம் பார்த்துக்கிட்டே இருக்குறதைவெச்சுதான் சொல்லியிருப்பாரோ என்னவோ?!
@LAKSHMANAN_KL
ப.சிதம்பரம்: அடுத்து நம்ம ரெண்டு பேரையும் விசாரிக்கிறதுக்கு கமிஷன் வரும்னு நினைக்கிறேன் மை சன்..!
கார்த்தி சிதம்பரம்: ஐ... ஜாலி... விசாரிக்கிறதுக்கும் ‘கமிஷன்’ வருமா டாடி..?!
@saravankavi
ப.சிதம்பரம்: கூட்டணியிலதான் இருக்கோம்னு ஒருமுறை நினைவுபடுத்திடு!
கார்த்தி சிதம்பரம்: என்னப்பா பண்ணணும்?
ப.சிதம்பரம்: `நெஞ்சுக்கு நீதி’ படத்தைப் பார்த்துடு...
கார்த்தி சிதம்பரம்: அது இன்னும் நெட்ஃப்ளிக்ஸ்ல வரலையேப்பா..!
@balasubramni1
ப.சி: மாவட்டம்வாரியா கணக்கெடுத்துப் பார்த்தேன். என்னப்பா இவ்வளவு குறைவா தொண்டர்கள் இருக்காங்க?!
கா.சி: மாவட்டம்வாரியா கோஷ்டிகளைக் கணக்கெடுத்துப் பாரு... அதிகமா இருப்பாங்க!
@h_umarfarook
ப.சி: நம்ம கட்சியை வளர்க்க ஏதாவது ஐடியா சொல்லு!
கா.சி: ரெய்டு வரும்போது தொண்டர்களுக்கு டிபன், மீல்ஸ் தரலாமா?
ப.சி: தாராளமா தரலாம்... ஆனா தொண்டர்களுக்கு எங்க போறது?
@kayathaisathya
கா.சி மைண்ட் வாய்ஸ்: கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நமது ஆதரவாளர்கள் யாரையும் காணோமே..!
@balasubramni1
ப.சி: தனிக்குடித்தனம் போயிடு கார்த்தி...
கா.சி: ஏன் டாடி?
ப.சி: இனிமேல் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்தான் பதவியாம். உனக்குப் பதவி வாங்கணும்ல!
@parveenyunus
ப.சிதம்பரம் (மைண்ட் வாய்ஸ்): ஊர்ல பத்துப் பதினஞ்சு புள்ளை பெத்தவன்லாம் சந்தோஷமா இருக்கான்... ஒரே ஒரு புள்ளையைப் பெத்துட்டு நான் படுற அவஸ்தை இருக்கே... ஐயய்யய்யோ!
@amuduarattai
கார்த்தி சிதம்பரம்: ரெய்டு நடக்குறப்ப நம்ம வீட்டுக்கு வரும் தொண்டர்களுக்குச் சாப்பாடெல்லாம் போட முடியாது டாடி. வேணும்னா ஒரு திரையைக் கட்டி, அதில் நெட்ஃபிளிக்ஸுலருந்து படம் போட்டுக் காட்டலாம்!
Enos Ibrahim
ப.சி: யோவ்... யாருய்யா அது? ‘நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்’ பாட்டைப் போட்டு வெறுப்பேத்துறது?
Ulaganathan Packiam
இங்கு சலுகை விலையில் விசா வாங்கித் தரப்படும்!
Ravikumar Krishnasamy
கார்த்தி: டாடி... `வாரிசு அரசியலை ஒழிப்போம்’னு பா.ஜ.க-வில் சொல்றாங்களே?
ப.சி: அப்போ, அங்கே போய் சேர்ந்து, பா.ஜ.க-வையே அழிச்சிரு!
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.
Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan