ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

@RavindranRasu
அன்புமணி: அப்பா... கொஞ்சம் தள்ளி நிக்குறீங்களா, நான் வாரிசு அரசியலை எதிர்த்து ஓர் அறிக்கை விட்டுட்டு வர்றேன்!
@parveenyunus
ராமதாஸ்: கையைக் கொடுக்கணுமா எதுக்கு?
அன்புமணி: என்னைத் தலைவராக்கிட்டா நம்ம கட்சி ஜெயிச்சுடும்னு நெனைக்கிறீங்களே... அந்தக் குழந்தை மனசைப் பாராட்டத்தான்!
@h_umarfarook
அன்புமணி: `ஜெய் பீம்’ பார்த்து ரெண்டு நாள் தூக்கம் போச்சுன்னு ஸ்டாலின் சொல்லியிருக்காருப்பா.
ராமதாஸ்: நமக்கும்தான் தூக்கம் போச்சு. நாம என்ன அவரை மாதிரி சொல்லிக்கிட்டா இருக்கோம்!
@IamUzhavan
ராமதாஸ்: `நாடாளுமன்ற அனுபவத்தை எழுதிக் கொடு, புத்தகமா போடலாம்’னு சொன்னேன். நடுவுல நடுவுல நிறைய பக்கம் காலியாவே இருக்கே ஏம்ப்பா?
அன்புமணி: அது ஆப்சென்ட் ஆன நாள்கள் ஐயா!
@chennappan10
ராமதாஸ்: `விக்ரம்’ படத்துலதான் எந்தச் சர்ச்சையுமே இல்லையே... அப்புறம் எதுக்குப் படத்தை எதிர்த்து கேஸ் போடலாம்னு சொல்றே..?
அன்புமணி: பா.ம.க-வுக்குப் பாதகமா ஏன் எந்த சீனும் வைக்கலைன்னு கேட்டு கேஸ் போடலாம்ப்பா..!
Ravikumar Krishnasamy
அன்புமணி: தலைவர் ஆக்கிட்டீங்க... இந்த மக்களுக்கு நான் என்ன செய்யணும்?
ராமதாஸ்: நான் என்ன செய்தேனோ, அதையே நீயும் செய்யணும்.
அன்புமணி: அப்போ, நானும் சும்மாதான் இருக்கணுமா?
Ambai Deva
அ: கட்சிக்கு ஏதாவது நிதி கொடுங்கப்பா... கட்சித் தலைவரா கேட்குறேன்!
ரா: சூர்யாவிடம் கேட்டிருந்த அந்த அஞ்சு கோடி கிடைச்சா அதை அப்படியே எடுத்துக்கோ தம்பி!
B T Prakash
அன்புமணி: ஐயா... அப்படியே அந்த கஜானா சாவியையும் கொடுத்துட்டா... தெம்புமணியா ஆகிடுவேன்!
Vaira Bala
அன்புமணி: எதைவெச்சு என்னைத் தலைவராக்கினீங்க டாடி?
ராமதாஸ்: ஊருக்கு நாலே நாலு பேரைவெச்சுக்கிட்டு அண்ணாமலையே இந்தப் போடு போடும்போது, உன்னால முடியாதா?!
M Peter Francisca
அன்புமணி: ‘போட்டோ தாக்கு’ பகுதியில நாம அடிக்கடி வர்றோம். இதுவே பா.ம.க-வுக்குக் கிடைத்த வெற்றிதானே!
Enos Ibrahim
ராமதாஸ்: சென்னையில் ஒரு வார்டுல ரெண்டு ஓட்டுதான் வாங்கியிருக்கோம்!
அன்புமணி: ஆமாம்பா... எனக்கே அந்த ரெண்டு பேரையும் பார்க்கணும்போல இருக்கு!
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.
Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan