Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

பேருந்துப் பயணத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
பேருந்துப் பயணத்தில்...

என் தம்பி மகளுக்குத் திருமணமானபோது, புதுமணத் தம்பதியை எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தோம்.

அனுபவங்கள் ஆயிரம்!

என் தம்பி மகளுக்குத் திருமணமானபோது, புதுமணத் தம்பதியை எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தோம்.

Published:Updated:
பேருந்துப் பயணத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
பேருந்துப் பயணத்தில்...
அனுபவங்கள் ஆயிரம்!

பரிசு கொடுக்கும்போது...

என் உறவினர் வீட்டுத் திருமணத்தில் மணமக்களுக்கு வந்த பரிசுப் பொருள்களை, திருமணம் முடிந்த பின்னர் எடுத்து அடுக்கிவைத்துக் கொண்டிருந்தோம். டின்னர் செட், வீட்டு அலங்காரப் பொருள்கள், கலைப்பொருள்கள், கடிகாரம் என்று ஏகப்பட்ட பொருள்கள். ஆனால் சில பார்சலில் மட்டுமே, ‘கண்ணாடிப் பொருள், கவனமாகக் கையாளவும்’ என்று அட்டையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. சில கண்ணாடிப் பொருள்களில் அப்படி எந்தக் குறிப்பும் இல்லாமல் கிஃப்ட் பேப்பர் சுற்றப்பட்டிருந்ததால், திருமண வீட்டில் அதை மேடையிலிருந்து தூக்கி அறை யில், அறையிலிருந்து தூக்கி வாகனத்தில் என்று வைத்த தில் சில உடைந்துவிட்டிருந்தன. எனவே, விசேஷங்களில் இதுபோன்ற உடையக்கூடிய பரிசுப் பொருள்களைத் தவிர்க்கலாம் அல்லது அதை அட்டையில் குறிப்பிட்டுக் கொடுக்கலாம்!

- இந்திராணி தங்கவேல், சென்னை-126

அனுபவங்கள் ஆயிரம்!

விருந்துக்கு அழைக்கும்போது...

என் தம்பி மகளுக்குத் திருமணமானபோது, புதுமணத் தம்பதியை எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தோம். என் கணவர், அவர்களுக்கு என்னென்ன பிடிக்கும் என்பதை போன் செய்து கேட்டுவிட்டு சமைக்கலாம் என்றார். நானோ, ‘அதெப்படி அவங்ககிட்டயே போய் கேக்குறது, எல்லாத்தையும் சமைச்சிடுவோம்...’ என்று தயங்கினேன். ‘அவங்களுக்குப் பிடிச்சதை கேட்டு சமைச்சா அவங்க நல்லா சாப்பிடுவாங்க, பிடிக்காத உணவை சமைச்சு வீணாகாம இருக்கும், உனக்கும் சமையல் நேரம் மிச்சமாகும்’ என்றார். நானும் போன் செய்து அவர்களுக்குப் பிடித்த உணவுகள் பற்றி கேட்க, ஆரம்பத்தில் தயங்கினாலும் பின்னர் தெளிவாகவும், உரிமையுடனும் தங்களது ஃபேவரைட் உணவுகளைச் சொன்னார்கள். விருந்தும் நிறைவாக முடிந்தது. அவர்கள் தந்த பாராட்டுகளை கணவருக்குச் சேர்த்தேன்!

- பிரேமா நாகராஜன், பிச்சாண்டார்கோவில்

*****

கொரோனா ஐடி கார்டு!

மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் கேட்கப்படுவதால், என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு ஸ்டூடியோவுக்குச் சென்று, என் கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஐடி கார்டு போல செய்துகொடுக்க இயலுமா என்று கேட்டேன். அவர்களும் ரெடி செய்து கொடுக்க, இப்போது எங்கு சென்றாலும் அதை எடுத்துச் செல்வது சுலபமாக இருக் கிறது. ‘கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால்தான் அனுமதி’ என்று  சொல்லப்பட்ட ஒரு பொது நிகழ்ச்சியில் நான் என் ஐடி கார்டை எடுத்துக் காட்ட, ‘அட நல்ல ஐடியாவா இருக்கே’ என்று வாயிற்காவலர் அதை மற்றவர்களுக்கும் காட்டினார். இந்த ஐடியா உங்களுக்கும் உதவலாம் தோழிகளே!

- பொ.பாலாஜிகணேஷ், சிதம்பரம்

அனுபவங்கள் ஆயிரம்!

டிஜிட்டல் இந்தியாவா இது..?

சமீபத்தில் ஒரு தொகையை ஃபிக்ஸட் டெபாசிட் செய்வதற்காக அரசுடைமையாக்கப்பட்ட ஒரு வங்கிக் கிளைக்குச் சென்றிருந்தேன். அங்கு ‘நெட் பிராப்ளம்’ என்று கூறி நெடுநேரம் காக்க வைத்தனர். ஒருவழியாக அந்தப் பிரச்னை சரியானபோது, பிரின்டர் வேலை செய்ய வில்லை என்று கூறி ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான பத்திரத்தை கையால் எழுதிக் கொடுத்தனர். அதேபோல, மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை ஒன்றுக்கு இதே சேவைக்காகச் சென்றபோது அங்கேயும் இதே நிலை தான். மத்திய அரசு ‘டிஜிட்டல் இந்தியா’ என்று மார்தட்டிக்கொண்டிருக்க, ஆனால் டிஜிட்டலில் முன்னோடி யாக இருக்க வேண்டிய வங்கித்துறையோ இப்படி டெக்னிக்கலாக பின்தங்கி வாடிக்கையாளர்களைப் படுத்தியெடுப்பது என்ன நியாயம்?!

- ஷோபா மலர், மூவானூர்

அனுபவங்கள் ஆயிரம்!

பேருந்துப் பயணத்தில்...

ஒருமுறை நானும் என் சகோதரியும் இரவுப் பயணத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு அரசுப் பேருந்தில் சென்றோம். பஸ்ஸில் ஏறியபோது, எங்களுடன் ஏறிய பெண் பேருந்தின் நம்பர் ப்ளேட்டை தன் மொபைலில் புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஏன்... என்று கேட்டோம் அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன். ‘வழியில் டீக்கடை, டாய்லெட் எனப் பேருந்தை நிறுத்தும்போது, அங்கே பல பேருந்துகள் நிற்கும். மீண்டும் ஏறும்போது நாம் வந்த பேருந்து எது என்று தடுமாறலாம். நம்பர் தெரிந்திருந்தால் செக் செய்துவிட்டு ஏறிவிடலாமே... அதனால்தான்’ என்றார். நானும், என் சகோதரியும்கூட இப்போதெல்லாம் இரவுப் பயண பேருந்து எண்ணைக் குறித்துக்கொள்கிறோம்.

- என்.உஷாதேவி, மதுரை-9