Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!

கணவன், மனைவி கவனிக்க!

என் தோழியின் கணவர் சமீபத்தில் மாரடைப்பால் இறந்துவிட்டார். துக்கம் விசாரிக்கச் சென்றபோது என் தோழி பகிர்ந்த விஷயம், அனைத்துக் குடும்பங்களிலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. ‘என் கணவர் என்னிடம் தனக்கு எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு பணம் சேமிப்புக் கணக்கிலும், ஃபிக்ஸட் டெபாசிட்களிலும் உள்ளது, வங்கியில் அடமானம் வைத்த நகைகள் பற்றிய விவரங்கள் மற்றும் பத்திரம் பற்றிய தகவல்கள், அந்த நகை களின் போட்டோக்கள், ஏ.டி.எம் கார்டுகளின் பின் நம்பர்கள், வீட்டில் உள்ள பணம், நகைகள், இன்கம்டாக்ஸ் பற்றிய விவரங்கள் என அனைத்தையும் தெளிவாக ஒரு பென் டிரைவில் சேமித்து என்னிடம் தந்திருந்தார். மேலும், வீட்டில் உள்ள கம்ப்யூட்டரிலும் ஒரு ஃபோல்டரை உருவாக்கி இந்தத் தகவல் களைச் சேமித்து, பாஸ்வேர்டை என்னிடம் பகிர்ந்திருந்தார். அவர் அப்படி செய்யும்போதெல்லாம், ‘ஏன் இதெல்லாம் இப்போ பண்ணுறீங்க?’ என்று சென்ட்டிமென்ட்லாக சங்கடப்பட்டுள்ளேன். ஆனால், இப்போதுதான் தெரிகிறது அதன் அருமை’ என்றார் உளப்பூர்வமாக உணர்ந்து. கணவன் - மனைவி இதுபோன்ற நிதி சார்ந்த தகவல்களை ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்வது அவசியம்.

- பி.ரமணி இளங்கோ, சேலம்-4

அனுபவங்கள் ஆயிரம்!

தெருப் பெண்களின் ஐடியா!

தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் காய்கறிகளின் விலை மிகவும் அதிகமாகிப் போனபோது, அன்றாட வீட்டுச் செலவு கூடிக்கொண்டே போனது. மாலை நேரத்தில் எங்கள் தெருவில் இருக்கும் 10, 15 பெண்கள் ஒன்றாகக் கூடிப் பேசும்போது, காய்கறிகளின் விலைவாசி பிரச்னையும் விவாதத்தில் வந்தது. ‘நீ என்ன காய்கறி வாங்கினாய், என்ன விலை?’ என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த ஐடியா உதித்தது. அதாவது, மொத்த சந்தையில் காய்கறி, தேங்காய், மீன் வகைகளை மொத்த விலைக்கு வாங்கி, எங்களுக்குள் பிரித்துக்கொள்வது. இதனால் கணிசமாகக் காய்கறிச் செலவு குறைந்தது. காய்கறி சந்தைக்குப் போவதற்கும், மீன் ஏலம் எடுக்கும் இடத்துக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டு ஆண் செல்வது என்றும் வகுத்துக்கொண்டோம். வாய்ப்பிருந்தால் உங்கள் தெருவிலும் பின்பற்றலாமே?!

- ஜி.பரமேஸ்வரி, தூத்துக்குடி

அனுபவங்கள் ஆயிரம்!
அனுபவங்கள் ஆயிரம்!

வாடிக்கையாளர்களுக்கு மரியாதை!

பொதுவாக ஹோட்டல், ஜவுளிக்கடை, நகைக் கடைகளில் உள்ள கதவுகளில் ‘இழு’, ‘தள்ளு’ போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருக்கும். எங்கள் ஊரில் உள்ள ஒரு நகைக்கடையில் கண்ணாடி டோரில் ‘தள்ளுங்கள்’, ‘இழுங்கள்’ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. கடை ஓனர், ‘நம் கடைக்கு வரும் ஒவ்வொருவரும் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள். அவர்களுக்கு நாங்கள் கொடுக்கும் மரியாதை இது. இதைப் படிக்கும்போது, உங்களைப்போல பலருக்கும் முகம் மலர்ந்து இப்படி என்னிடம் வந்து விசாரிக்கும்போது கூடுதல் உற்சாகமாகி விடுகிறது’ என்றார். நன்று!

- எஸ்.குமாரி, நாமக்கல்

அனுபவங்கள் ஆயிரம்!

கீரை சமையல்!

திருமணமான புதிதில், எனக்கு சமைக்கத் தெரியாது. கீரையை வேகவைத்து கடைந்து வைக்கச் சொல்லியிருந்தார் மாமியார். உடனே, ‘காய் வேகவைக்கும்போது காய் மூழ்கும்வரை தண்ணீர் ஊற்ற வேண்டும்’ என்ற என் பிறந்த வீட்டின் சமையல் பாடம் நினைவுக்கு வர, கீரை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வேக வைத் தேன்(!). பின்னர் மாமியார் வந்து பார்த்து அதிர்ந்த கதையைச் சொல்லத்தான் வேண்டுமா?! ‘கீரைக்கு லேசா தண்ணி தெளிச்சு மூடிவெச்சு எடுத்தாலே போதும் வெந்துடும்’ என்று பிறகு அவரே கற்றுக் கொடுத் தார். இன்று நான் நன்றாகச் சமைத்தாலும், நான் முதன்முதலாகக் கீரை சமைத்த(!) அந்த நாளை மறக்கவே முடியாது.

- சாரதா பாபு, திருநெல்வேலி

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு! சிறந்த அனுபவத்துக்குச் சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism