Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!

ஒற்றுமையை ஏற்படுத்திய ஒலி!

எங்கள் வீட்டுக்கு அருகில் ஓய்வுபெற்ற தம்பதி வசிக் கிறார்கள். ஒரு ஞாயிறுக் கிழமை அதிகாலை, அவர்கள் காரில் கிளம்பு வதற்காக டிரைவரை வரவழைத்திருந்தார்கள். அவர் சாவியை ஏதோ மாற்றிப்போட, ஹாரன் சத்தம் நிற்காமல் தொடர்ந்து வர, அக்கம் பக்கத்தினர் அனைவரும் பதறி ஓடிவந்து, ‘ஞாயிற்றுக் கிழமை... கூட கொஞ்ச நேரம் தூங்கலாம்னு நினைச்சா, இப்படி தெருவையே எழுப்பிவிட்டீங்களே’ என்று நொந்துகொண்டனர்.

அப்போது, அவ்வழியாக நடைப்பயிற்சிக்கு வந்த, எங்கள் தெருவில் வசிக்கும் ஓர் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி, கூட்டத்தைப் பார்த்து நடந்ததைக் கேட்டறிந் தார். பின்னர், ‘உண்மையில், இதில் உங்கள் அக்கறை தான் வெளிப்பட்டிருக்கிறது. பக்கத்து வீட்டில் சத்தம் கேட்டால் நமக்கென்ன என்று இருக்காமல் அனைவரும் ஓடிவந்ததுதான் இங்கு ஹைலைட். இதுவரை நாம் அனைவரும் பார்த்துக்கொண்டதுகூட இல்லை.

அனுபவங்கள் ஆயிரம்!

இன்று மாலை நீங்கள் அனைவரும் எங்கள் வீட்டு மாடிக்கு வந்துவிடுங்கள்’ என்றவர், அந்த கெட்-டுகெதரில் அனைவரையும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகச் செய்து, வாட்ஸ்அப் குரூப்பை உருவாக் கினார். அதனால் ஏற்பட்ட நன்மைகள்...

* எங்கள் தெருவில் ஒரு பெண்மணி வீட்டிலேயே சமையல் செய்து கொடுப்பது தெரியவர, வேலைக்குச் செல்லும் பெண்களும், தேவைப்படுபவர்களும் அவ்வப்போது அவரிடம் குரூப்பில் உணவு ஆர்டர் கொடுத்தனர்.

* சில வீடுகளில் உள்ள பெண்களுக்கு, கேட்டரிங்காரர்களுக்குப் காய்கறிகள் நறுக்கிக்கொடுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. ‘வீட்டுல சும்மாதான் இருந்தோம், இப்போ காசு கிடைக்குது’ என்று மகிழ்ந்தனர்.

* வயதான, படித்த 60 வயது முதியவர் அவர். அந்தத் தெருவில், வேலைக்குச் செல்பவர்களுக்கு வரும் கூரியர், பார்சல், லெட்டர்களை வாங்கி வைக்கும் பொறுப் பும், அதற்கு ஒரு தொகையும் அவருக்குக் கொடுக்கப்பட்டது. டெலிவரி சர்வீஸ் காரர்களிடம் நாங்கள் அவர் அலைபேசி எண்ணைக் கொடுத்து விடுவோம்.

* தெருவில் உள்ள மெக்கானிக் ஒருவரின் நம்பர் குரூப்பில் பகிரப்பட, அனைவருக் கும் மிகவும் பயனுள்ளதாகிப்போனது.

* தெருவுக்கு மாதம் ஒருமுறை ஒரு பொது நல மருத்துவரை அழைத்து மருத்துவ ஆலோசனை பெற ஏற்பாடானது.

* ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவர் வீட்டில் அனைவரும் கூடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

இன்னும் பல பயன்பாட்டு அடிப்படையிலான நன்மைகள் கிடைக்க ஆரம்பித்தன. ‘பக்கத்து வீட்டுல யாரு இருக்கானுகூட தெரியாது’ என்பதைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருப்பவர்கள், இதைப் பரிசீலிக்கலாமே?!

- ராஜகுமாரி சுரேந்திரன், சென்னை-125

அனுபவங்கள் ஆயிரம்!

பந்தியில் இட ஒதுக்கீடு!

திருமண நிகழ்ச்சி ஒன்றின் பந்தியில் ஒரு வரிசையில், ‘மூத்த குடிமக்களுக்கு மட்டும்’ என்று எழுதி ஒட்டியிருந்ததோடு, அந்த வரிசையில் வேறு யாரும் அமர்ந்து விடாமல் முதியவர்களை மட்டும் அமரச் செய்யும் பணியிலும் ஒருவர் ஈடுபட்டிருந் தார். அவரிடம் பேசியபோது, ‘சுகர், மூட்டுவலினு பல பிரச்னைகளோட இருக்குற முதியவர்களுக்கு, பந்தியில மத்தவங்களோடு போட்டி போட்டுக் காத்திருந்து இடம்பிடிச்சு சாப்பிடுறது கஷ்டம் இல்லையா... மேலும், மத்த வங்க சீக்கிரம் சாப்பிட்டு எழுந்துடுறபோது இவங்களும் பதற்றமாகி, தர்ம சங்கடத் தோட இலையை மூடுவாங்க. அந்த அசௌகர்யத்தை எல்லாம் தவிர்க்கத் தான் இந்த ஏற்பாடு’ என்றார். நன்று, நன்றி!

- ஆர்.சிவரஞ்சனா, தஞ்சாவூர்

அனுபவங்கள் ஆயிரம்!

பரிசு வாங்குவதற்கு முன்!

கணவரை இழந்த பெண்மணி ஒருவர், தன் மகளுக்குத் திருமணம் நடத்தினார். கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையில் நடத்தியதால், கடனும் வாங்கி யிருந்தார். திருமணத்தன்று வரும் மொய்ப்பணத்தில் அதை அடைத்து விடலாம் என்று திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், மணமகளுக்கு அவரின் நண்பர்கள், தோழிகள் எனப் பலரும் கப் அண்ட் சாசர், கடிகாரம், போட்டோ ஃப்ரேம், மலர்க்கொத்து என்று பரிசளித்திருந்தனர். ஒவ்வொன் றும் ரூ.500, ரூ.1,000 என்று விலை இருக்கும். பணமாகக் கொடுத்

திருந்தால் அந்தக் குடும்பத்துக்கு உதவியாக இருந்திருக்கும். திருமண அழைப்பிதழ் வந்ததும் அந்தக் குடும்ப சூழ்நிலை என்வென்று பார்த்து பணமா, பொருளா, பரிசா என்று முடிவெடுக்கலாமே?

-டி.ஜெயசீலி, கோயம்புத்தூர்-36

அனுபவங்கள் ஆயிரம்!

முத்திரை ஐடியா!

எங்கள் தெருவில் உள்ள ஒரு கடையில் தேங்காய் வாங்கினால், தேங்காயின் குடுமியில் ரப்பர் ஸ்டாம்ப்பால் முத்திரை குத்தித் தருவார்கள். கடைக்காரரிடம் ஏன் என்று கேட்டதற்கு, `இந்தத் தேங்காய் சரியாக இல்லாவிட்டால் கொண்டு வந்து கொடுத்துவிட்டு பதிலாக வேறொரு தேங்காயை வாங்கிச் செல்லுங்கள்' என்றார். அந்த ஐடியாவை அனைவரும் மெச்சினோம். மற்ற கடைக்காரர் களும் பின்பற்றலாமே!

- இந்திராணி தங்கவேல், சென்னை-126

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு! சிறந்த அனுபவத்துக்குச் சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism