Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!
அனுபவங்கள் ஆயிரம்!

சூப்பர் மார்க்கெட்தான்போக வேண்டுமா?

தள்ளுவண்டியில் காய் வாங்க, துணிப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பிய மருமகளிடம், ‘பக்கத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் காய், பழங்கள் தள்ளுபடி விலை யில் உள்ளன. அங்கே போய் வாங்கு’ என்றேன். ‘அங்கே ஒவ்வொரு வகை காயையும், தனித்தனி பிளாஸ்டிக் கவரில் போட்டு, எடை போட்டு தர்றாங்க அத்தை. ஏகப்பட்ட மக்காத பிளாஸ்டிக் குப்பை சேருது. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்கு நம்மால செய்யக்கூடியது, துணிப்பை. அப்படியே, தள்ளுவண்டிக் கடையில வாங்கும்போது எளிய மனிதருக்கு உதவின மாதிரியும் இருக்கும்’ என்றாள். திருப்தியாய் தலையசைத்து ஆமோதித்தேன்.

- பழனீஸ்வரி தினகரன், சென்னை-129

அனுபவங்கள் ஆயிரம்!

பில் வாங்கும்போது... இதைச் செய்யுங்கள்!

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். டாக்டர் பரிசோதித்துவிட்டு சில டெஸ்ட்டு களை எடுக்கச் சொன்னார். லேப் மற்றும் ஸ்கேன் ரிப்போர்ட்டுகள் வந்தன. ஒவ்வொன்றிலும் என் பெயரின் ஸ்பெல்லிங் ஒவ்வொரு மாதிரி இருந்தது. அப்போது எனக்கு அது பெரிதாகத் தெரியவில்லை. சிகிச்சை முடித்து பில்லை இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்க்காக அனுப்பியபோது, `ஒவ்வொன்றிலும் பெயர் வெவ்வேறு மாதிரி இருக்கிறது. இப்படி இருந்தால் பணம் பெறுவது கடினம்' என்றார் அந்த அதிகாரி. எனவே, எப்போதும் க்ளெய்ம்க்கான பில்களில் நம் பெயர், விவரங்களை சரியாகக் குறிப்பிட்டு வாங்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன்.

- அனுஸ்ரீ, சேலம்-4

அனுபவங்கள் ஆயிரம்!

கடனோ, கைமாத்தோ... இப்படிச் சொல்லுங்கள்!

என் தோழியும் நானும் அவ்வப்போது பரஸ்பரம் கைமாத் தாகப் பணம் பெற்றுக்கொள்வது வழக்கம். சமீபத்தில் அப்படி அவள் 1,000 ரூபாய் கேட்டபோது, ‘ஒன்றும் அவசரமில்லை, மெதுவாகத் திருப்பித் தந்தால் போதும்’ என்று கூறிக் கொடுத்தேன். அப்போது என் தோழி, ‘யாருக்குக் கடன், கைமாத்துக் கொடுத்தாலும் இந்த வார்த்தையை மட்டும் சொல்லாதே. கடன் வாங்கு பவர்களில் சிலர் அதைத் திருப்பிக் கொடுக்க இழுத்தடிப் பார்கள். இதில் ‘அவசரமில்லை’ என்று வேறு கூறிவிட்டால், அதைத் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு மெத்தனமாக இருந்துவிடுவார்கள். ஆகையால் எப்போது, யாருக்குக் கடன் தந்தாலும், ‘எனக்கும் சற்று சிரமமாகத்தான் உள்ளது. இந்தப் பணத்தை இதற்காக வைத்திருந்தேன்’ என்று சொல்லிக் கொடுப்பதுதான் புத்திசாலித்தனம்’ என்று விளக்கினார்; புரிந்துகொண்டேன்.

- ஆர்.ராதா, கும்பகோணம்

அனுபவங்கள் ஆயிரம்!

வயசானால் என்ன?

என் மருமகளின் பிறந்தவீட்டினர் வந்திருந்தபோது, நான் துணிகளை மடித்து வைத்துவிட்டு, கழுவிய பாத்திரங்களை அடுக்கி வைத்துக்கொண்டு இருந்தேன். பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண், ‘மாமியாருக்கு 80 வயசு இருக்குமே, ஏன் வேலையெல்லாம் தர்றே’ என்று கேட்டார். நான் அவரிடம், ‘என் மருமகள் எனக்கு வேலையெல்லாம் தர்றதில்ல. சும்மா இருந்தா சோம்பல் வந்துரும், வேலை செய்ய முடியாதுனு நம்மளை ஒதுக்கி வெச்ச மாதிரி இருக்கும்னு நான்தான் என்னால முடிஞ்ச சின்னச் சின்ன வேலைகளைச் செய்றேன். இதுல எனக்கும் திருப்தி, மருமகளுக்கும் உதவி’ என்றேன். ஆக்டிவ் ஆக இருக்கும் வயதானவர்களை, வயதைச் சொல்லி வேலை செய்வதிலிருந்து முடக்காமல் இருக்கலாமே... இல்லை யெனில், அந்த முடக்கம் அவர்களது மனதையும் முடக்கும்.

- எஸ்.ராஜம், திருச்சி-6

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு! சிறந்த அனுபவத்துக்குச் சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism