Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!
அனுபவங்கள் ஆயிரம்!

வெளியூர், விசேஷம், பிளவுஸ்!

திருமணம், காதுகுத்து என வெளியூரில் நடக்கும் விசேஷங்களுக்குக் கிளம்பும்போது, பட்டுப்புடவை, அதற்கான காஸ்ட்லி பிளவுஸ்/டிசைனர் பிளவுஸ்கள் என எடுத்து வைப்பவர்கள், பிளவுஸை ஒருமுறை போட்டுப் பார்த்துவிட்டு, டைட், லூஸ் அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள். சமீபத்தில், ஒரு திருமணத்துக்கு வெளியூரில் இருந்து வந்திருந்த உறவுக்காரப் பெண், திருமண நாளன்று காலை பிளவுஸ் போடும்போதுதான் தெரிந்தது, அது அணிய முடியாத அளவுக்கு மிகவும் டைட்டாக இருந்தது. தையலைப் பிரிக்க நேரமும் இல்லை என்பதால், தான் எடுத்து வந்திருந்த மற்றொரு சாதாரண, புடவையின் நிறத்துக்கு சற்றேறக்குறைய பொருந்தும் பிளவுஸை அணிந்து புலம்பிய வாறே கிளம்பினார். எனவே, விசேஷங்களுக்கு அணிய விருக்கும் பிளவுஸை ஒருமுறை முன்னரே அணிந்து பார்த்துவிடுவது நல்லது.

- எம்.வசந்தா, சென்னை-64

அனுபவங்கள் ஆயிரம்!

பிளான் பண்ணி பண்ணணும்!

சமீபத்தில் என் தோழியும், அவள் கணவரும் தங்கள் மகனின் திருமண அழைப்பிதழைக் கொடுக்க வந்திருந்தபோது, ‘சில வீடுகளில் நாம் பத்திரிகை கொடுக்கச் செல்லும்போது அவர்கள் வீட்டில் இருக்க மாட்டார்கள்... அதுதான் கஷ்டம்’ என்றோம். அப்போது தோழி, பையில் இருந்து ஒரு சின்ன கார்டை எடுத்துக் காட்டினாள். அதில், ‘நாங்கள் பத்திரிகை வைத்து அழைக்க உங்கள் வீட்டுக்கு வந்தோம். ஆனால், வீட்டில் தாங்கள் இல்லாததால் சந்திக்க இயலவில்லை. எனவே, இதை நேரில் கொடுத்ததாக எண்ணி பெற்றுக்

கொண்டு, நேரில் வந்து எங்கள் பிள்ளைகளை வாழ்த்தி ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்’ என்று இருந்தது. அந்த கார்டை பத்திரிகையுடன் ஸ்டேப்ளர் செய்து வீட்டின் போஸ்டல் பாக்ஸ் அல்லது கதவுக்கு அருகில் வைத்து விட்டு வருவதாகக் கூறினர். நன்று!

- தி.வள்ளி, திருநெல்வேலி-11

அனுபவங்கள் ஆயிரம்!

சொல்லாததைச் சொல்வோம்!

தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றார் என் நண்பரின் அப்பா. அவரின் பணி ஓய்வு பாராட்டு நிகழ்ச்சியில், விருந்தினர் வரிசையில் இருந்து ஒருவர் எழுந்து, ‘நான் பேச அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டார். மைக் கொடுக்கப்பட்டது. ‘அய்யாவை பற்றி எனக்குத் தெரியும். அவர் எந்தெந்த வேலைகளுக்கு எவ்வளவு லஞ்சம் கேட்பார் என்றும் தெரியும்’ என்று ஆரம்பித்து, அந்தப் பட்டியலை சொல்ல ஆரம்பிக்க, அங்கே கூடியிருந்தவர்களில் 70% பேர் சிரித்தார்கள்; 30% பேர் அதிர்ச்சி ஆனார்கள். அவர் சுருக்கமாகப் பேசிவிட்டு அமர, என் நண்பர் அவரிடம் சென்று, ‘யார் நீங்கள், ஏன் இப்படி யெல்லாம் பேசுகிறீர்கள்?’ என்று கோபப்பட்டார். ‘ஒருமுறை உங்கள் அப்பாவுக்கு, என் ரத்தத்தை விற்று லஞ்சம் கொடுத்திருக்கிறேன். வெளியே, இவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா என்று பார்த்ததும், அவர் வாங்கும் லஞ்சம் பற்றி சொல்ல வேண்டும் என்றுதான் உள்ளே வந்தேன். என்னை அடித்தாலும் அடித்துக்கொள்ளுங்கள்’ என்று அவர் சொல்ல, நண்பரை, ‘நீ போய் நிகழ்ச்சியை கவனி’ என்று அனுப்பிவிட்டு, அவரிடம் நான் பேசினேன். ‘கவனித்தீர்களா சார்... நான் பேசியபோது பலரும் சிரிக்கத்தான் செய்தார்கள். காலமெல்லாம் லஞ்சம் வாங்கியர் அவர்; ஓய்வு பெறும் நாளிலாவது அது பற்றி நான் பேசியது என் மனதிலிருந்த கனம் விலகியதுபோல் உள்ளது’ என்றவரை, ‘சரி சாப்பிட வாருங்கள்’ என்று அழைத்தேன். ‘என்னை மாதிரி ரத்தம் விற்று, கடன் வாங்கி என்று யார் யாரோ கொடுத்த லஞ்சப் பணத்தில் போடும் சாப்பாடு சார் இது, எனக்கு வேண்டாம்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார். லஞ்சம் வாங்குபவர்களும், அவர்களின் குடும்பமும்... கவனிக்க!

- பொ.பாலாஜிகணேஷ், சிதம்பரம்

அனுபவங்கள் ஆயிரம்!

இனிப்பை தனியாகக் கொடுங்கள்!

சமீபத்தில் சென்றிருந்த ஒரு திருமண விழாவில் உணவுப் பந்தியின்போது இனிப்பை இலையில் பரிமாறாமல், அதைத் தாம்பூலம் கொடுக்கும்போது பீடாவுடன் சேர்த்து சிறிய கவரில் போட்டுக் கொடுத்தார்கள். இன்னொரு திருமணத்தில், இலையில் வைக்கும் போதே அதை ஒரு சிறிய கவரில் போட்டு வைத்தனர். இப்படிச் செய்யும்போது, இனிப்பு சாப்பிடாதவர்கள் அதைப் பந்தியிலேயே வீணாக் காமல் எடுத்துச் செல்வதைப் பார்த்தேன். மற்றவர்களும் இதைப் பின்பற்றலாமே!

- இந்திராணி தங்கவேல், சென்னை-126

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு! சிறந்த அனுபவத்துக்குச் சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism