Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!

‘உனக்கு சென்னை பிடிச்சிருக்கா, தோஹா பிடிச்சிருக்கா’ என்று கேட்டேன். சென்னைதான் என்றான்

அனுபவங்கள் ஆயிரம்!

‘உனக்கு சென்னை பிடிச்சிருக்கா, தோஹா பிடிச்சிருக்கா’ என்று கேட்டேன். சென்னைதான் என்றான்

Published:Updated:
அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!

சிறப்புப் பரிசு: தவா

செய்யும் தொழிலே தெய்வம்!

கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால், தனியார் பள்ளியில் பணி செய்து வந்த என் தோழி சிறிதும் தயங்காமல், தன் வீட்டு நடைபாதையிலேயே காய்கறிகள் விற்பனையைத் தொடங்கினார். ‘என்ன டீச்சர் நீங்க போய்...’ என்று பிறர் கேட்டாலும், ‘அதனால என்ன, எல்லாமே உழைப்புதான்’ என்று பாசிட்டிவ் பதில் தந்துவிடுவார். அந்தப் பகுதி மக்கள் அனைவருக்கும் அவர் அறிமுகமானவர் என்பதால் கடையில் வியாபாரம் சூடு பிடித்தது. இப்போது கடையை வாடகை இடத்துக்கு மாற்றி நடத்திவரும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள் ளார். அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ என்று தயங்காமல் சூழ்நிலைக்கேற்ப நம் முடிவுகளை மாற்றிக் கொள்வதுதானே புத்திசாலித்தனம்?!

- உமாதேவி பலராமன், திருவண்ணாமலை

அனுபவங்கள் ஆயிரம்!

ரொக்கப் பரிசு ரூ.300/-
சென்னையா, தோஹாவா..?!

கத்தார் நாட்டின் தோஹா நகரத்தில் வசிக்கும் என் ஏழு வயதுப் பேரன், விடுமுறையில் சென்னைக்கு வந்தபோது, ‘உனக்கு சென்னை பிடிச்சிருக்கா, தோஹா பிடிச்சிருக்கா’ என்று கேட்டேன். சென்னைதான் என்றான். காரணம் கேட்டேன். ‘சென்னையில கிரீன் சிக்னல், ரெட் சிக்னல் ரெண்டிலும் வண்டிகள் போகுது. இங்க சாக்லேட் கவரை எங்க வேணாலும் போடலாம், தோஹால இதெல்லாம் முடியாது’ என்றான்.

- ஈ.சாந்தலட்சுமி, சென்னை-92

****

ரொக்கப் பரிசு ரூ.300/-
என்னா ஒரு டெக்னிக்கு!

என் உறவினர் ஒருவர், திருமண மண்டப பந்தியில் சாப்பிட அமரும் முன்னர், கேட்டரிங் நபரைப் பார்த்து, ‘அடுத்த மாசம் எங்க வீட்டுல ஒரு விசேஷம் இருக்கு...’ என்று கூறி அவரது விசிட்டிங் கார்டை வாங்கிக்கொண்டார். பின்னர் அவர் சாப்பிட அமர்ந்தபோது, கவனிப்பு அமோகமாக இருந்தது. அவர் இலையில் போதும் போதும் எனும்வரை பதார்த்தங்களை வைத்துக்கொண்டே இருந்தனர் கேட்டரிங் ஆட்கள், அவரிடம் ஆர்டர் பெற்றுவிடும் முனைப்புடன். உறவினரோ, கண்ணடித்த படி அனைத்தையும் ருசித்தார்.

- வி.லூசி, தூத்துக்குடி

அனுபவங்கள் ஆயிரம்!

ரொக்கப் பரிசு ரூ.300/-
ஆன்லைன் டெலிவரியா?!

எங்கள் குடும்ப நண்பரின் மகளுக்குச் சில நாள்களாக ஏதோ ஒரு நம்பரில் இருந்து அழைப்பு, குறுஞ்செய்திகள் வந்திருக்கின்றன. தொடர்ந்து வீட்டுக்கு மொட்டைக் கடுதாசியும் வர ஆரம்பிக்க, எப்படியோ அந்த நபரைக் கண்டுபிடித்து விட்டார்கள். விசாரித்தபோது, அவன் பக்கத்துத் தெருவில் வசிக்கும் ஒரு கல்லூரிப் பையன். இந்தப் பெண் ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்த ஏதோ ஒரு பார்சல் கவர் தெருவில் வீசப் பட்டு, அது அவன் கைக்குக் கிடைக்க, அதிலிருந்த அவளது மொபைல் எண், முகவரியை வைத்து அவளைச் சீண்டி விளையாடியிருக்கிறான். அவனைக் கண்டித்து அனுப்பினார்கள். ஆன்லைன் டெலிவரி வரும்போது அந்த கவரில் நம் விலாசம், மொபைல் எண் எல்லாம் இருக்கும் என்பதால் அதைக் கிழித்து டிஸ்போஸ் செய்ய வேண்டியது அவசியம்.

- ஆர்.பிருந்தா இரமணி, மதுரை - 9

****

ரொக்கப் பரிசு ரூ.300/-
பெரியோர்கள் மனதில் வையுங்கள்!

சமீபத்தில் என் மாமனாருக்கு ஒரு போன் வந்தது. அது ஒரு விளம்பர அழைப்பு என்பதால் அவர் கோபமாகப் பேசிவிட்டு வைத்துவிட்டார். அதைக் கவனித்துக்கொண்டிருந்த என் ஏழு வயது மகன் மாமனாரிடம், ‘யார் போன் பண்ணினா தாத்தா, ஆயாவா?’ என்று கேட்டான் (அப்போது என் மாமியார் வெளியே போயிருந்தார்). ‘இல்ல...’ என்று அவர் சொல்ல, ‘இல்ல நீங்க பாட்டிகிட்டதானே எப்பவும் இப்படிக் கோபமா பேசுவீங்க’ என்று சொல்ல, மாமனாருக்குச் சுட்டதுபோல இருந்தது.

- பி.கல்பனா, பாபநாசம்

அனுபவங்கள் ஆயிரம்!

ரொக்கப் பரிசு ரூ.300/-
குழந்தை பிறந்ததும் விடுதலை!

நான் கர்ப்பமாக இருந்தபோது, பக்கத்து வீட்டில் வசித்த ஆன்ட்டி ஒரு நாள் தன் வீட்டில் செய்த பட்சணங்களை எனக்குக் கொண்டு வந்து தந்தார். டேஸ்ட் சுமாராகவே இருந்தது. மறுநாள் அவர்கள் பலகாரம் தந்த பாத்திரத்தை என் கணவரிடம் கொடுத்து ‘தேங்க்ஸ்’ சொல்லிவிட்டு வரச் சொன்னேன். என் கணவர் எக்ஸ்ட்ராவாக, ‘செம டேஸ்ட்’ என்று சொல்ல, அதி லிருந்து எது செய்தாலும் எனக்குக் கொடுத்துவிட ஆரம்பித்தார். நான் உணவை வீணாக்கக் கூடாது என்பதால், வேறு வழியில்லாமல் சிரமப்பட்டு சாப்பிடுவேன். கணவரோ, ஏதாவது சொல்லி என்று தப்பித்துவிடுவார். ஒருவழியாகக் குழந்தை பிறந்த பின்னர்தான் ஆன்ட்டியிடமிருந்து விடுதலை கிடைத்தது.

- எம்.ஐ.ரமீஸத் பேகம், நாகர்கோவில்

உங்களது சுவாரஸ்யமானஅனுபவங்களை எழுதி அனுப்புங்கள்...
பிரசுரமாகும் அனுபவங்களுக்குக்காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!
சிறந்த அனுபவத்துக்குச் சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி

அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன்,757, அண்ணாசாலை, சென்னை-600002.

மின்னஞ்சல் முகவரி:

avalvikatan@vikatan.com