Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!
அனுபவங்கள் ஆயிரம்!

மதிப்புக் கூட்டுவோம்!

என் தோழியின் அம்மா வழக்கமாக ரேஷனில் பொருள்கள் வாங்குவார். தன் தேவைக்குக் கொஞ்சம் வைத்துக்கொண்டு மீதியை யாரிடமாவது கொடுத்து விடுவார். அதுபோல் அரிசியை வாங்கி தன் தேவைக்கு மேல் அதிகமாக உள்ளதைப் பணிப்பெண் உள்ளிட்ட சிலரிடம் கொடுக்க, ‘எனக்கு வேண்டாம், நான் வாங்கின அரிசியே நிறைய இருக்கு’ என்று அனைவரும் சொல்ல, அவருக்கு ஒரு யோசனை. நல்ல அரிசி பாதி, ரேஷன் அரிசி பாதி என ஊறவைத்து அரைத்து பதமாக வேகவிட்டு, வெயிலில் வற்றலாகக் காய வைத்துள்ளார். அதைப் பொரித்துப் பார்க்க, சுவை சூப்பர். இப்போது தன் தேவைக்கு மிஞ்சியதை மற்றவர்களுக்கும் கொடுக்க, ஆர்வமாகப் பெற்றுக் கொண்டனர். வீணாகும் பொருள்களை மதிப்புக்கூட்டும் வழிகளைச் சிந்திப்போம்.

- மகாலெஷ்மி சுப்பிரமணியன், காரைக்கால்

அனுபவங்கள் ஆயிரம்!

மொட்டை மாடி... மகிழ்ச்சி இலவசம்!

ஒரு மாலை நேரத்தில் தோழி வீட்டுக்குச் சென்ற போது தன் குடும்பத்தாருடன் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். நான் எதுவும் கேட்காமலே சொன்னாள், `மொட்டை மாடியில் சுகமாகக் காற்று வீசுகிறது. வெளிச்சமும் இருக்கிறது. ஃபேன், லைட் தேவைப்படாததால் மின்சார செலவும் மிச்சமாகிறது. டிவியில் சோக சீரியல்கள் பார்த்து நேரத்தை வீணாக்காமல் குடும் பத்துடன் சில மணி நேரம் கழிப்பது மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது. இருட்டத் தொடங்கும் போது கீழே போய்விடுவோம்’ என்று. பாராட்டிவிட்டு வந்தேன்!

- ஆர்.பத்மபிரியா, திருச்சி-1

அனுபவங்கள் ஆயிரம்!

`மணப்பெண் தேவை’ குமுறல்கள்!

தோழி வீட்டுக்கு வந்திருந்த அவள் உறவுக்காரப் பெண், தன் மகனுக்குப் பெண் பார்ப்பதாகக் கூறினார். `என் மகன் மிகவும் கோபக்காரன். அவனுக்கு எல்லாம் அவன் விருப்பப்படி நடக்க வேண்டும். இல்லையெனில், வீடே ரெண்டுபடும். அதனால் சாந்தமான, பொறுமையான பெண் வேண்டும், ஏழைப்பட்ட பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை. அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த பெண்தான் அடங்கிப் போவாள்’ என்று அவர் சொன்னதைக் கேட்டதும், எனக்குக் கோபம்தான் வந்தது. இப்படியெல்லாம் யோசிக்கும் அவர், தன் மகனிடம் உள்ள முன்கோபத்தைத் தவறு என்று உணரவில்லை. ஏதோ தன் மகனுக்கு அது ஒரு பெரிய தகுதிபோல பேசினாரே தவிர, அந்தக் குணம் மாற வேண்டும் என்ற வருத்தமும் விருப்பமும் கொஞ்சமும் அவரிடம் இல்லை. தன் மகனைப் பொறுத்துப்போகும், சகித்துக்கொள்ளும், திருத்தும் பெண் வேண்டும் என்று தேடும் அம்மாக்களை இன்னும் எத்தனை காலம் பார்க்கப்போகிறோம்?

- ஏ.உமாராணி, தர்மபுரி

அனுபவங்கள் ஆயிரம்!

வித்தியாச விளம்பர நோட்டீஸ்!

நாம் கேட்காமலேயே நம் வீட்டுக்கு செய்தித்தாளுடன் தினமும் விளம்பர நோட்டீஸ்கள் வந்துகொண்டிருக் கின்றன. குப்பை சேர்கிறது. வாசிக்காமலே தூக்கி வீசி விடுகிறோம். இந்த நிலையில் ஒரு விளம்பர நோட்டீஸில், ஒருபக்கம் விளம்பரம், அடுத்தபக்கம் செங்கல்பட்டில் இருந்து கிளம்பும் மின்சார ரயில் களின் நேரம் என இருந்தது. எனவே, அதை பத்திரப்படுத்திக்கொண்டேன். நல்ல ஐடியா!

- கா.நிர்மலா ராஜ், செங்கல்பட்டு

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism