Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!

நல்ல கூட்டம். என் இருக்கைக்கு முன்னால் ஒரு நடுத்தர வயதுப் பெண் நிற்க, அவரைச் சுற்றி மூன்று பெண்கள் நெருக்கியடித்து நின்றுகொண்டிருந்தார்கள்.

அனுபவங்கள் ஆயிரம்!

நல்ல கூட்டம். என் இருக்கைக்கு முன்னால் ஒரு நடுத்தர வயதுப் பெண் நிற்க, அவரைச் சுற்றி மூன்று பெண்கள் நெருக்கியடித்து நின்றுகொண்டிருந்தார்கள்.

Published:Updated:
அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!

பரிசு ரூ.300 | நானும் போலீஸ்தான்!

சில மாதங்களுக்கு முன் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தேன். எனக்கு முன் சீட்டில் அமர்ந்திருந்த ‘குடிமகன்' ஒருவர் கெட்ட வார்த்தைகளைக் கொட்டிக்கொண்டே வந்தார். கண்டக்டரும் சக பயணி களும் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. பொறுத்துப் பார்த்த நான் எழுந்து அவர் முன் சென்று, ‘பக்கத்து ஸ்டேஷன் கான்ஸ்டபிள் நான்... வாய மூடுறியா, உள்ளே தூக்கி வைக்கட்டுமா...’ என்று மிரட்டியதும் ‘கப்சிப்’ ஆகிவிட்டார். ஆனால், நான் போலீஸ் இல்லை என்பது அங்கு என்னைத் தவிர யாருக்கும் தெரியாது!

- வசந்தி மதிவாணன், அரூர்

சிறப்புப் பரிசு தவா | அந்த மூன்று பெண்கள்!

சமீபத்தில் டவுன் பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தேன். நல்ல கூட்டம். என் இருக்கைக்கு முன்னால் ஒரு நடுத்தர வயதுப் பெண் நிற்க, அவரைச் சுற்றி மூன்று பெண்கள் நெருக்கியடித்து நின்றுகொண்டிருந்தார்கள். முன்பக்கம் இடம் காலியானாலும் மற்றவர்களை நகரச் சொல்லிவிட்டு, அவர்கள் மூவர் மட்டும் அந்தப் பெண்ணை விட்டு அகலவேயில்லை. எனக்கு ஏதோ தப்பாகத் தோன்ற, அவர்களைக் கூர்மையாகக் கவனித்தேன். அந்த மூன்று பெண்களில் ஒருவர், மின்னல் வேகத்தில் அந்தப் பெண்ணின் ஹேண்ட் பேக்கை திறந்து பர்ஸை எடுத்து, தனக்குப் பின்னால் நின்ற பெண்ணிடம் கொடுக்க, அவர் தன் ஜாக்கெட்டுக் குள் திணித்துக்கொண்டார். மூன்றாவது பெண், அந்த நடுத்தர வயதுப் பெண்ணிடம் ஏதோ பேச்சுக்கொடுத்து அவர் கவனத்தை திருப்பிக்கொண்டிருந்தார். இதுவரை பொது இடங்களில் சத்தம் போட்டுப் பேசிக்கூடப் பழக்க மில்லாத நான், ‘திருடி... திருடி... வண்டிய நிறுத்துங்க’ என்று சத்தம் போட்டதும், அந்த மூவர் கூட்டம் சிக்கிக் கொண்டது. பர்ஸை மீட்டதுடன், அவர்களை போலீஸ் ஸ்டேஷனிலும் ஒப்படைத்தோம். எனக்குள் இத்துணை துணிச்சலா என்று நானே உணர்ந்துகொண்ட தினம் அன்று!

- எம்.அனீஸ் பாத்திமா, நாகர்கோவில்

பரிசு ரூ.300 | எப்போதும் விழிப்புடன் இருப்போம்!  

சிதம்பரத்தில் ஒரு பெட்ரோல் பங்கில் என் டூவீலருக்கு பெட்ரோல் போடப் போனேன். அப்போது, பெட்ரோல் பங்க் ஊழியர் ஆயிலை 50 மில்லி குவளையில் எடுத்து, அதை 200 மில்லி குவளையில் ஊற்றி பிறகு என் வண்டி டேங்கில் ஊற்ற வந்தார். நான் தடுத்து, ‘50 மில்லி ஆயிலை ஒரு குவளையில இருந்து இன்னொரு குவளைக்கு மாற்றும்போது 10 மில்லி அதிலேயே தங்கிடும். இன்னொரு குவளையில மாற்றும்போது 10 மில்லி அதுல தங்கிடும். ஆக மொத்தம் 30 மில்லி ஆயில்தான் கிடைக்கும்’ என்று குரலை உயர்த்த, உடனே சரியாக ஆயில் போட்டார்கள்.

- கவிதா பாலாஜி கணேஷ், சிதம்பரம்

அனுபவங்கள் ஆயிரம்!

பரிசு ரூ.300 | வெடிக்கும் முன் யோசியுங்கள்!

ஒரு திருமணத்துக்காக சென்றிருந்த போது, மாப்பிள்ளை அழைப்புக்கு மண்டப வாசலில் பட்டாசு வெடித் தனர். சிறிது நேரத்தில் முடிந்துவிடும் என்று பார்த்தால், பெண் வீட்டார் பகட்டுக்காக 10,000 வெடி வாங்கி வைத்திருந்தது பிறகுதான் தெரிந் தது. வாகனங்கள் ஜாம் ஆகி நிற்க, இடைவிடாத வெடிச் சத்தத்தில் முதியவர்கள் பதற்றமாக, குழந்தை களும் மிரண்டு போயிருந்தனர். வெடிப்புகையால் மூச்சுத் திணறியவர் களும் பலர். நம் கொண்டாட்டங்கள் பிறருக்குத் தொந்தரவாக இருக்கும் என்றால், அதைத் தவிர்க்கப் பழக வேண்டும் என்பது அவசியம்.

- மு.ரினோஜ் முபாரக், வாளாடி, திருச்சி

அனுபவங்கள் ஆயிரம்!

பரிசு ரூ.300 | அரை மணி நேர உப்புமா!

எனக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்தபோது, முதன்முறை யாக கிச்சனுக்குள் நுழைந்த என் மகன், ‘உப்புமா எப்படி செய்றதுனு சொல்லுமா சமைக்கிறேன்’ என்றான். நான் சொன்னபடி தாளித்து, வெங் காயம் வதக்கி, தண்ணீர், ரவையைச் சேர்த்துக் கிளறியவன், அரை மணி நேரம் கழித்து என்னிடம் வந்து, ‘அம்மா தண்ணீரும் ரவையும் அப்படியே இருக்கு’ என்றான். நான் மெதுவாகச் சென்று பார்த்தபோது, சிலிண் டர் தீர்ந்திருந்தது. கணவர் வந்ததும் உப்புமா காமெடியைச் சொல்லிச் சொல்லிச் சிரித்தோம்.

- சுப்புலெட்சுமி சந்திரமௌலி, சென்னை-91

அனுபவங்கள் ஆயிரம்!

பரிசு ரூ.300 | நம்பினார் ஏமாற்றப்படுவர்!

மிக்ஸி ரிப்பேர் ஆகிவிட்டது. பக்கத்து எலெக்ட்ரிக்கல் கடை யில், சரிசெய்ய 500 ரூபாய் ஆகும் என்றனர். எனக்குத் தெரிந்த ஒரு எலெக்ட்ரீஷியனிடம் கேட்டபோது 400 ரூபாய் ஆகும் என்றார். மூன் றாவதாக ஒரு கடையில் விசாரித்த போது 200 ரூபாய் வாங்கிக் கொண்டு வேலையைக் கச்சித மாக முடித்துக் கொடுத்தார். எனவே, எந்தப் பொருள் ரிப்பேர் ஆனாலும், ஒரு கடைக்கு நாலு கடை விசாரித்தால் நம் பணம் காப்பாற்றப்படும் என்பது நிஜம்.

- வெற்றிச்செல்வி வடுகநாதன், வேதாரண்யம்

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!சிறந்த அனுபவத்துக்குச் சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி:
அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன்,757, அண்ணாசாலை, சென்னை-600002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.comஉங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்...

பிரசுரமாகும் அனுபவங்களுக்குக்காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

சிறந்த அனுபவத்துக்குச் சிறப்புப் பரிசு!