Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் ஆயிரம்!

சமீபத்தில் தெரிந்தவரின் புதுமனைப் புகுவிழாவுக்குச் சென்றேன். கீழே வழக்கமான ஹால், கிச்சன், ரூம். மாடியில் இரண்டே அறைகள்.

சிறப்புப் பரிசு தவா

பேருந்து சீண்டல், சமயோசித முடிவு!

ஒருமுறை கும்பகோணம் பேருந்தில் நானும் என் கணவரும் சென்று கொண்டிருந் தோம். எங்களுக்கு பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்த இளம் பெண்ணை, அவரது பின் இருக்கையில் இருந்த இரண்டு ஆண்கள் அவரது இருக்கையில் காலை நீட்டி, கை வைத்து என்று தொந்தரவு செய்து கொண்டிருந் தனர். அவர்கள் குடித்திருந்தால் அவர்களைக் கண்டிப்பது ரகளையில் முடியலாம் என்ப தால், என் கணவரை அந்தப் பெண்ணின் இருக்கையில் அமரவைத்து, அந்தப் பெண்ணை என் அருகில் அமர்த்திக்கொண்டேன். இறங்கும்போது எங்களை அப்பா, அம்மா என்று அழைத்து, ஆயிரம் முறை அவர் நன்றி சொல்லிவிட்டு சென்றது மறக்க முடியாதது.

- வரலக்ஷ்மி முத்துசாமி, சென்னை-37

அனுபவங்கள் ஆயிரம்!

பரிசு ரூ.300/-

ஆலப்போல் வேலப்போல்!

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஓர் அரச மரக்கன்று தானாகவே வளர்ந்து வந்தது. அரச மரம் வீட்டில் வளர்க்கக்கூடிய மரம் அல்ல என்று பலரும் கூறிய தால், அதை அகற்றவும் மன மில்லாமல் வளர்க்கவும் வழி தெரியாமல் தவித்தோம். அப்போது எங்கள் பகுதியில் உள்ள ‘மியாவாக்கி’ என்னும் அடர்வனம் பற்றி கேள்விப் பட்டோம். அந்த அமைப்புடன் தொடர்புகொள்ள, அவர்கள் மறுநாளே எங்கள் இல்லம் வந்து அரச மரக்கன்றை பத்திரமாக எடுத்துச்சென்று அடர்வனத்தில் நட்டு, எங்களுக்கு வாட்ஸ்அப்பில் படமும் அனுப்பினார்கள். எங்கள் அரச மரக்கன்று இப்போது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்வதில் எங்களுக்கு ஏக சந்தோஷம்.

- சியாமளா ராஜகோபால், சென்னை-64

அனுபவங்கள் ஆயிரம்!

பரிசு ரூ.300/-

பட்டாசு நட்பு!

பல ஆண்டுகளுக்கு முன் எங்கள் பக்கத்து வீட்டுக்கு தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, இரண்டு சிறுவர்கள் என ஒரு முஸ்லிம் குடும்பத்தினர் குடிவந்தனர். அவர்களுடன் பழகக்கூடிய சந்தர்ப்பம் வாய்க்க வில்லை. அந்த வருட தீபாவளி யின்போது, என் பையனும் தெருவில் இன்னும் சில சிறுவர் களும் வெடித்த வெடி ஒன்று, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு சிறுவன் முகத்தில் பட்டுவிட்டது. அவனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினோம். ஒரு வாரத்தில் அவன் குணமடைந்தான். ஆனால் அவன் வீட்டில், வெடி வெடித்த சிறுவர்களையோ, அவர்கள் பெற்றோரையோ ஒரு வார்த்தை கூட அவர்கள் கடிந்து சொல்லாததில் வியந்து போனோம். அந்த தீபாவளி நாளில் இருந்து அவர்கள் குடும்பமும் எங்கள் குடும்பமும் நெருங்கியவர்களாகிவிட்டோம். எங்களது தீபாவளி பல காரங்களை அவர்கள் ருசிக்க, அவர்களது ரம்ஜான் பிரியாணியை நாங்கள் ருசிக்க என, அந்த நட்பு இன்றுவரை தொடர்கிறது.

- மாலதி நாராயணன், சென்னை-87

****

பரிசு ரூ.300/-

புலம்புபவர்களுக்கு பாசிட்டிவிட்டி கொடுப்போம்!

அப்போது நாங்கள் பெங்களூரில் இருந்தோம். அங்கு எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் தன் வீட்டில் நடக்கும் விஷயங் களைக் கூறி சுயபச்சாதாபம் அடைவதை வழக்கமாக வைத்திருந்தார். நன்றாகப் படித்து, வேலைபார்த்து, ஓய்வுபெற்ற அவருக்கு அந்த சுயபச்சாதாபம் தேவை இல்லை என்று நான் நினைத்ததால், ‘இது ஒரு பிரச்னையே இல்லை, எல்லாம் கடந்துபோகும்’ என்று பாசிட்டிவ்வாகவே பேசுவேன். அவரும் தலையாட்டிச் செல் வார். தற்போது நாங்கள் ஸ்ரீரங்கம் வந்துவிட்ட பிறகு, அந்தப் பெண் ஒருநாள் தொலைபேசினார். ‘நீங்கள் எப்போதும் என்னிடம், எல்லாம் சரியாகிவிடும் என்று பாசிட்டிவ் வாகச் சொல்வீர்கள். ஆனால், இப்போது எனக்குத் தெரிந்தவர் களிடம் என் பிரச்னைகளைக் கூறினால், ‘ஐயோ பாவம்... உங்களுக்கா இந்தக் கஷ்டம்?’ என்கிறார்கள். அது எனக்கு மேலும் கவலையைத் தருகிறது. அதனால் இப்போது நான் யாரிடமும் புலம்புவதில்லை’ என்றார். அதைக் கேட்க எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

- ஜி.இந்திரா, ஸ்ரீரங்கம்

அனுபவங்கள் ஆயிரம்!

பரிசு ரூ.300

அலுவலக மீட்டிங்கில்... மிக்ஸி!

பல வருடங்களுக்கு முன்பு நடந்தது. அலுவலகத்தில் அன்று காலை ஒரு மீட்டிங் இருந்ததால், அவசர அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தேன். சமையலுக் குத் தேங்காயை மிக்ஸியில் அரைத்துக் கொண்டிருந்தபோது கரன்ட் போய்விட்டது. தேங்காய் இல்லாமலே சமையலை முடித்து விட்டு ஆபீஸ் கிளம்பிவிட்டேன். அலுவலகத்திலும் அன்று கரன்ட் இல்லை. மீட்டிங்கில் இருந்தபோது திடீரென, மிக்ஸி ஸ்விட்ச்சை நான் ஆஃப் செய் யாமல் வந்துவிட்டது நினைவுக்கு வந்தது. அந்த நேரம் பார்த்து அலுவலகத்தில் கரன்ட் வர, பதற்றத்தில் நான் ‘ஆஃப் பண் ணுங்க’ என்று கத்திவிட்டேன். அனைவரும் திகைத்து என்னைப் பார்க்க, அசடு வழிய காரணத்தைச் சொன்னேன். வீடு திரும்பியபோது, கரன்ட் வந்ததும் அம்மா பயத்துடன் மெயின் ஸ்விட்சை  ஆஃப்  செய்த கதையைச் சொன்னார். அதி லிருந்து வெளியே கிளம்பும்போது ஸ்விட்ச்களை செக் செய்வதில் அதிக கவனம் வந்துவிட்டது.

- விஜயலக்ஷ்மி, மதுரை

****

பரிசு ரூ.300

தொலைநோக்குப் பார்வை!

சமீபத்தில் தெரிந்தவரின் புதுமனைப் புகுவிழாவுக்குச் சென்றேன். கீழே வழக்கமான ஹால், கிச்சன், ரூம். மாடியில் இரண்டே அறைகள். அதில் ஓர் அறையில் சின்னதாக சிங்க், குழாய், அதன் மேலே ஆர்.ஓ வாட்டர் ப்யூரிஃபையர் மாட்டப் பட்டிருந்தது. ``எதற்கு?'' என்று கேட்டேன். ``பிள்ளைங்க ரெண்டு பேருக்கும் மாடியிலதான் ரூம். ஒவ்வொரு முறையும் தண் ணீரைக் கீழே வந்து எடுத்துட்டுப் போறது சிரமம். இரவு லேட்டா வந்தா, சாப்பாட்டை மேலே கொண்டு போயிடுவாங்க. சாப் பிட்டதும் பாத்திரங்களை இந்த சிங்க்ல கழுவி வெச்சிடுவாங்க” என்றார். மாடியில் இருக்கும் பிள்ளைகளுக்காக ஏறி, இறங் கும் அம்மாக்கள் இந்த ஏற் பாட்டைப் பின்பற்றலாம்.

- என்.கோமதி, நெல்லை-7

*****

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்...

பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

சிறந்த அனுபவத்துக்குச் சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி:

அனுபவங்கள் ஆயிரம்,

அவள் விகடன்,

757, அண்ணாசாலை,

சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி:

avalvikatan@vikatan.com