முதலீட்டில் காப்பியடிப்பது ஆபத்து!

நான் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறேன். வயது 53. என்னுடன் பணிபுரியும் இளைஞர் ஒருவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்துவருகிறார். என் நண்பர்கள் சிலரும் பங்குச் சந்தையில் முதலீடு செய்துவருகிறார்கள். எனக்கும் ஆசை வரவே, அந்த இளைஞரிடம் சொன்னேன். அவரோ, “மகள் திருமணம், மகன் படிப்பு என உங்களுக்கான தேவைகள் குறுகியகாலத்தில் இருப்பதால் ரிஸ்க் எடுக்க வேண்டாம்” என்றார். அவர் பொறாமையில் சொல்கிறார் என நினைத்து, இன்னொரு நண்பர் மூலம் ஃபிக்ஸட் டெபாசிட்டிலிருந்த ரூ.5 லட்சத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்தேன். எதிர்பாராமல் சந்தை இறக்கம் காண, பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. பங்கு முதலீட்டில் அடுத்தவர்களை காப்பியடிக்கக் கூடாது. அவரவர் சூழல், வயது, தேவைக்கேற்ப முதலீடு செய்வதுதான் சரி என்பதை தாமதமாகப் புரிந்துகொண்டேன்.

- சங்கர் கிருஷ்ணன், நாமக்கல்

கூடுதல் வருமானத்துக்கு வழிவகுத்த நட்பு!

என் நண்பன் எந்தக் கூட்டத்துக்கு, நிகழ்ச்சிக்குப் போனாலும் அங்கு வரும் நிபுணர்கள், பிசினஸ்மேன்களிடம் பேசி நட்பாகிவிடுவான். நான் அவனிடம், `இதெல்லாம் எதுக்கு?’ என்று கேட்பேன். அவன் சிரித்துக்கொண்டே சென்றுவிடுவான். சில நாள்களுக்கு முன்னர் அவனைச் சந்தித்தபோது, பல்வேறு நிறுவனங்களுக்குத் தேவையான மார்க்கெட்டிங் மற்றும் புரொமோஷன் வேலைகளை பார்ட்டைம் வேலையாகச் செய்து மாதம் ரூ.30,000 கூடுதலாகச் சம்பாதிப்பதாகச் சொன்னான். பல ஆண்டுகளாக பிசினஸ்மேன்களிடம் ஏற்படுத்திக்கொண்ட நட்புதான் இந்த பார்ட்டைம் வேலைக்கு உதவியது என்றும் சொன்னான். எனக்கு நிஜமாகவே ஆச்சர்யமாக இருந்தது.

- கணேசன், சென்னை-49

மறதி தந்த நஷ்டம்!

ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வரும்போது சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருள்கள் வாங்கிவருவது என் வழக்கம். இரண்டு நாள்களுக்கு முன்னர் சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தேன். என் பேக்கை வெளியில் வைத்து டோக்கன் பெற்றுக்கொண்டு சென்றேன். பொருள்களை வாங்கிக்கொண்ட நான், என் பேக்கை மறந்து அங்கேயே விட்டுவிட்டேன். வீட்டுக்குப் போனதும்தான் பேக் நினைவுக்கு வந்தது. திரும்பச் சென்று பார்த்தபோது கடையை அடைத்திருந்தார்கள். அடுத்த நாள் சென்று என் பேக்கை வாங்கினேன். ஆனால், அதில் வைத்திருந்த ஆபீஸ் லேப்டாப் காணாமல் போயிருந்தது. கடையில் கேட்டபோது, ‘எங்களுக்குத் தெரியாது; லேப்டாப் வைத்திருந்தீர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?’ என்று கேட்டார்கள். டோக்கன் போடும் வாட்ச்மேன்மீது எனக்கு சந்தேகம். அதைக் கேட்டுக்கொள்ள கடை உரிமையாளர் தயாராக இல்லை. என் மறதியால் ரூ.60,000 மதிப்புள்ள லேப்டாப் பறிபோய்விட்டது.

- ஜெயராஜ், திருவள்ளூர்

ஆன்லைனில் பொருள்... அவசரம் வேண்டாமே!

பொதுவாக, பணம் கொடுக்கல் வாங்கலில் உஷாராக இருக்க வேண்டும். அதுவும் ஆன்லைனில் பணம் செலுத்தும்போது கூடுதல் கவனம் தேவை. என் அப்பா ஆன்லைன் தளம் ஒன்றில் வீட்டுக்குத் தேவையான பொருள் ஒன்றை வாங்கினார். எங்கேயோ கிளம்பும் அவசரத்தில் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தியிருந்தார். பொருள் டெலிவரி செய்யப்பட்டபோதுதான் அவர் இரண்டு பொருள்களுக்குப் பணம் செலுத்தியிருந்தது அவருக்குத் தெரியவந்தது. அந்தக் குறிப்பிட்ட தளத்தில் பொருளை ரிட்டர்ன் செய்யவும் முடியாது என்பது பிறகுதான் தெரிந்தது. வேறு வழியில்லாமல் இரண்டு பொருள்களில் ஒன்றைப் பரணியில் போட்டு வைக்க வேண்டியதாகிவிட்டது.

- குரு மூர்த்தி, சேலம்-1

நெரிசலில் பறிபோன பர்ஸ்!

தினமும் நான் பஸ்ஸில்தான் ஆபீஸுக்குச் சென்று வருகிறேன். அன்று தாமதமாக வீட்டிலிருந்து கிளம்பினேன். அன்றைக்கு பஸ்ஸில் நல்ல கூட்டம். அலுவலகம் செல்ல வேண்டிய அவசரத்தில் சிரமப்பட்டு ஏறி, படிக்கட்டில் நின்றபடியே சென்றேன். நான் இறங்கும் இடம் வந்தபோது, யதேச்சையாக பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்த நான் அதிர்ந்துபோனேன். என் பர்ஸைக் காணவில்லை. பஸ்ஸை நிறுத்தி தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. கடந்த நிறுத்தங்களில் இறங்கிய யாரோதான் எடுத்துப் போயிருப்பார்கள் என்று தோன்றியது. பர்ஸிலிருந்த பணம் ரூ.5,000 போனது; கூடவே டெபிட் கார்டு, கிரெடிட் கார்டும் தொலைந்துபோயிருந்தன. குறிப்பிட்ட சில நிறுத்தங்களுக்கு இடையில்தான் இப்படி நடப்பதாக மற்ற பயணிகள் பேசிக்கொண்டனர். இப்போதெல்லாம் தவிர்க்க இயலாமல் கூட்டம் நிறைந்த பஸ்ஸில் ஏறினாலும், பர்ஸை பேக்கினுள் பத்திரமான ஓர் இடத்தில் வைத்துவிடுகிறேன்.

- ராம்குமார், கோவை-3

நிதி தொடர்பான உங்கள் அனுபவங்களை finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.