Published:Updated:

“இப்ப நிம்மதியா இருக்கேன்!”

செம்பருத்தி

என்னை இத்தனை பேருக்குப் பிடிச்சிருக்குன்னு நினைக்க சந்தோஷமா இருக்கு. பெத்த அம்மா, அப்பா மாதிரி எல்லாரும் உதவியிருக்காங்க.

“இப்ப நிம்மதியா இருக்கேன்!”

என்னை இத்தனை பேருக்குப் பிடிச்சிருக்குன்னு நினைக்க சந்தோஷமா இருக்கு. பெத்த அம்மா, அப்பா மாதிரி எல்லாரும் உதவியிருக்காங்க.

Published:Updated:
செம்பருத்தி

ஆனந்த விகடன் 27-07-2022 தேதியிட்ட இதழில் `அம்மா என் முகம் பார்க்க பயந்தாங்க - இது செம்பருத்தி அக்காவின் கதை!' என்கிற தலைப்பில் செம்பருத்தி என்பவரைப் பற்றிய கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு பல வாசகர்கள் இவருக்கு உதவி செய்துள்ளனர்.

செம்பருத்தியுடைய வங்கிக் கணக்கிற்கு நேரடியாக விகடன் வாசகர்கள் பணம் செலுத்தி உதவினர். அவருக்கு இதுவரையில் 1,79,700 ரூபாய் உதவித் தொகையாகக் கிடைத்திருக்கிறது.

‘‘என் அக்கவுன்ட்ல 200 ரூபாய்தான் பணம் வச்சிருந்தேன். திடீர்னு ஒருநாள் அக்கவுன்ட்ல 5,500 ரூபாய் கிரெடிட் ஆச்சு. நமக்கு யார் இவ்வளவு ரூபாய் அனுப்பியிருப்பாங்க, நமக்கெல்லாம் யார் உதவுவாங்கன்னு எண்ணம் ஓடிட்டே இருந்துச்சு. அன்னைக்கு நைட் முழுக்க தூங்கவே இல்லை’' என்ற செம்பருத்தி, தொடர்ந்தார்.

“இப்ப நிம்மதியா இருக்கேன்!”

‘‘கூடப் பொறந்தவங்ககூட எனக்கு ஒரு ரூபாய் கொடுத்து உதவல. முகம் தெரியாத யார் யாரோ, நான் நல்லா இருக்கணும்னு நினைச்சு மனசார உதவி பண்றாங்கன்னு நினைக்கும்போது ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு. ஆனந்த விகடன் வாசகர்கள் எனக்கு உதவினதால இப்ப நிம்மதியா இருக்கேன். 2020-ல் இருந்து சாப்பாட்டுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கேன். ஒருவேளைதான் சாப்பிடுவேன். இன்னைக்கு நிம்மதியா சாப்பிடுறேன்னா அதுக்கு விகடன் வாசகர்களே காரணம்!

என்னை இத்தனை பேருக்குப் பிடிச்சிருக்குன்னு நினைக்க சந்தோஷமா இருக்கு. பெத்த அம்மா, அப்பா மாதிரி எல்லாரும் உதவி யிருக்காங்க. அவங்க கொடுத்த பணத்தில் என் கடனை அடைச் சிட்டு நிம்மதியா சாப்பிடுறேன். கிண்டல் பண்ணுனவங்க, அசிங்கப்படுத்தினவங்க எல்லாரும் ‘ஆனந்த விகடனில் உங்க வீடியோ பார்த்தேன்’னு சொல்லி என் முகத்தைப் பார்த்துப் பேசுறாங்க. எனக்கு அது புதுத் தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கு.

“இப்ப நிம்மதியா இருக்கேன்!”

மீதமுள்ள பணத்தை வைத்து ஆட்டோ வாங்கி வாடகைக்கு விட்டு அதை வச்சுப் பொழப்பைப் பார்த்துக்கலாம். அப்படி இல்லைன்னா வீடு ஒத்திக்குப் போகலாம் என்கிற திட்டத்தில் இருக்கிறேன். எனக்காக உதவி பண்ணின எல்லாருக்கும் என் மனப்பூர்வமான நன்றியைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்’’ என நெகிழ்ந்தார்.