Published:Updated:

மாணவர்கள் Vs ஆசிரியர்கள்... வாசகர்கள் ரியாக்‌ஷன்ஸ்

மாணவர்கள் Vs ஆசிரியர்கள்
பிரீமியம் ஸ்டோரி
மாணவர்கள் Vs ஆசிரியர்கள்

பள்ளியில் காலை முதல் மாலை வரை பாடம் மட்டுமே நடத்தப்படுவது மாணவர்களுக்குள் ஒரு விரக்தியை ஏற்படுத்தக்கூடும்.

மாணவர்கள் Vs ஆசிரியர்கள்... வாசகர்கள் ரியாக்‌ஷன்ஸ்

பள்ளியில் காலை முதல் மாலை வரை பாடம் மட்டுமே நடத்தப்படுவது மாணவர்களுக்குள் ஒரு விரக்தியை ஏற்படுத்தக்கூடும்.

Published:Updated:
மாணவர்கள் Vs ஆசிரியர்கள்
பிரீமியம் ஸ்டோரி
மாணவர்கள் Vs ஆசிரியர்கள்

பள்ளி மாணவர்கள் சிலரின் ஒழுங்கீன செயல்கள் அவ்வப்போது வெடித்து வெளியில் வருவது உண்டு. அந்த வகையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன் மாணவர்கள் சிலரின் ஒழுங்கீன செயல்கள், வீடியோக்களாக வைரலாயின. இந்த நிலையில், இந்த ஒழுங்கீனங்களைக் களைவது குறித்து பல்வேறு துறைசார் நிபுணர்களுடனான கலந்துரையாடலை கடந்த மாதத்தில் நடத்தியது அவள் விகடன். அதில் முன்வைக்கப்பட்ட கருத்துகளை வைத்து, கடந்த (7.6.2022) இதழில் கட்டுரை வெளியிடப்பட்டதோடு, இதுதொடர்பாக வாசகர்களின் கருத்தையும் கேட்டிருந்தோம். இனி, வாசகர்களிடமிருந்து...

ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் மாணவர்களின் பட்டியல் தயார் செய்து, அந்த மாணவர்களின் குடும்ப சூழலை ஆய்வு செய்ய வேண்டும். இந்தப் பணியைச் செய்து முடிக்க குழு ஒன்றை அரசு நியமிக்க வேண்டும். அந்தக் குழு கொடுக்கும் பரிந்துரையின் அடிப்படையில், அடுத்த கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பே இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்ந்துள்ளனர் என்கிறது புள்ளிவிவரம். அரசுப் பள்ளி களில் மாணவர்களின் எண்ணிக்கை குறையாமலிருக்க, அந்த மாணவர்களின் நன்னடத்தையைக் கண்காணிப்ப துடன், தவறுகளைத் தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - சி.சரவணன், நூலகர் கடத்தூர், தர்மபுரி

மாணவர்கள் Vs ஆசிரியர்கள்... 
வாசகர்கள் ரியாக்‌ஷன்ஸ்

கொரோனாவுக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதே பெரிய விஷயமாக இருக்கிறது. பள்ளியில் காலை முதல் மாலை வரை பாடம் மட்டுமே நடத்தப்படுவது மாணவர்களுக்குள் ஒரு விரக்தியை ஏற்படுத்தக்கூடும். மாணவரின் தனித்திறமையைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். நாட்டுப்புறக் கலைகள், தற்காப்புக் கலைகள், நாடகம், இசை என ஏதோ ஒன்றைக் கற்றுக்கொள்ளும்போது அவர்களின் மனம் ஒருநிலைப்பட்டு ஒழுக்கத்தோடு இருப்பர். - ப்ரியதர்ஷினி, தர்மபுரி

ஆசிரியர்களை மட்டுமே இதற்கு பொறுப்பு சொல்ல முடியாது. சுமார் இரண்டு ஆண்டுகளாக பொறுப்பில்லாமல் சுற்றித்திரிந்த மாணவர்கள் திடீரென பள்ளி வந்தவுடன். தன் தவறுகளை ஆசிரியர் சுட்டிக்காட்டும்போது ஆசிரியர்கள்மீது அவர்களுக்கு கோபமும் ஆத்திரமும் வருகிறது. மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க வேண்டும். அப்போது அவர்களின் பெற்றோர்களும் உடன் இருக்க வேண்டும். எங்கோ நடக்கும் ஒன்றிரண்டு சம்ப வங்களை வைத்து எல்லா மாணவர்களையும் எடை போட வேண்டாம். மாணவர்களை நல்வழிப்படுத்த வேண் டியது ஆசிரியர் - பெற்றோரின் கடமை. - உமாதேவி, பேராசிரியர், திருவண்ணாமலை

திரைப்படங்களில் புகை, குடி உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களை ஹீரோயிசமாகக் காட்டுகின்றனர். இணைய வெளியில் மோசமான எல்லாவற்றையும் அவர்கள் தெரிந்துகொள்வதால் அவர்களின் நடத்தையே மாறிப் போகிறது. பிள்ளைகளைச் செல்லம் கொடுத்து அவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தால் அவர்கள் எதிர்காலமே பாழாகிவிடும். தேவைப்படும் நேரங்களில் கண்டிப்பையும் அன்பையும் சரிசமமாக தர ஆசிரியர்களும் பெற்றோர்களும் பழக வேண்டும். எது சரி, எது தவறு என்பதை பிள்ளைகளுக்குப் புரிய வைக்கும் மாபெரும் கடமை இன்றைய பெற்றோருக் கும் ஆசிரியருக்கும் அதிக அளவில் உள்ளது. - சுபா தியாகராஜன், சேலம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism