Published:Updated:

வாழ்க்கையில நீங்க உணர்ந்த பாடம்..?

வாழ்க்கையில நீங்க உணர்ந்த பாடம்..?
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்க்கையில நீங்க உணர்ந்த பாடம்..?

#Avaludan

‘வாழ்க்கையில நீங்க உணர்ந்த ஒரு பாடத்தை, மத்தவங்களுக்கான அறிவுரையா சொல்லுங்களேன்’ என்று அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். #Avaludan என்ற ஹேஷ்டேக்குடன் வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் சிறந்த கமென்ட்கள் இங்கே...

Durga Sugesh

எந்த ஒரு வேலையையும், ‘இது கஷ்டம்’ என்று முன் முடிவு செய்யாமல், சிறிது முயன்று பார்க்கலாம். எல்லா கஷ்டமான வேலைகளையும் யாரோ ஒருவர் செய்துதானே முடிக்கிறார்?!

Saraswathi Balasubramanian

கணவன், குழந்தை, குடும்பம் என்று அவர்களுக் காகவே வாழ்ந்து, 50 வயதில் திரும்பிப் பார்த்தால், நமக்காக எதையும் செய்யவில்லை என்ற வலிதான் மிச்சம். எனவே, நமக்குப் பிடித்ததையும் செய்து நிறை வான வாழ்க்கை வாழ்வோம்!

Charumathi Vittal

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் அவர்கள் பின்பற்றும் பழக்கங்கள், கொள்கைகள் இருக்கும்.

அது நாம் அறம் என நம்புவதுடன் ஒத்துப்போகவில்லை என்பதற்காக, அவர்களை வித்தியாசமாகப் பார்க்கத் தேவையில்லை. தீர்ப்புகள் இன்றி மனிதர்களை ஏற்றுக்கொள்வோம்!

Revathi Bobby

நல்லா பேசுறாங்கனு நினைச்சு, யார்கிட்டயும் உடனே குளோஸ் ஆகிடாதீங்க. ஒருவரோட உண்மை யான இயல்பை புரிஞ்சுக்கிற கால அவகாசம் நட்பு, உறவு, சக பணியாளர்னு எல்லா ரிலேஷன்ஷிப்லயும் அவசியம்.

Uma Suresh

நம்ம வாழ்க்கையோட முக்கிய முடிவுகள் எல்லாம், நாம சுயமா யோசிச்சு எடுத்ததா இருக்கணும். யார் கையிலும் நாம எடுக்க வேண்டிய முடிவுகளைக் கொடுக்கக் கூடாது. அதேபோல, அந்த முடிவால் ஏற்படும் விளைவுகளுக்கும் நாமதான் பொறுப் பேற்கணும், யாரையும் கைநீட்டக் கூடாது.

Malathi Ponnusamy

முடியாதுனு சொல்ல வேண்டிய இடத்துல, சொல்ல வேண்டியவங்ககிட்ட தைரியமா சொல்லிடுங்க.

Sasikala Ramnatarajan

ரகசியம், உங்களுக்குள் இருக்கும் வரைக்கும் தான் ரகசியம்.

Kamila Farvin

சொந்தக்காரங்க, ஃபிரெண்ட்ஸ்னு நமக்கு பிடிச்ச வங்களோட குறைகளை மறைக்கவோ, அவங்களைக் காப்பாத்த நினைச்சோ நாம கெட்ட பேரு வாங்கிடக் கூடாது. அவரவர் செய்ததை அவரவரே அறுவடை செய்யட்டும்... விட்டுடுங்க!

Radha Narasimhan

எந்த எதிர்ப்பார்ப்புமின்றி நாம் செய்யும் உதவியின் பலன், நாம் தவிக்கும் ஒரு தருணத்தில் திடீரென எதிர்பார்க்காமலே கிடைக்கும்... இது என் அனுபவ உண்மை!

Janaki Paranthaman

நன்கு பழக்கப்பட்ட பெண் ஒருவர், வாடகைக்கு வீடு கேட்டார். நான் ஒரு வீடு பற்றி சொல்லி, `ஆனால் ஹவுஸ் ஓனர் சிடுமூஞ்சி' என்றேன். பரவாயில்லை என்று கூறி, அவர் அந்த வீட்டுக்குக் குடியேறினார். ஹவுஸ் ஓனரிடம், அவரை நான் சிடுமூஞ்சி என்றதை அவர் சொல்லிவிட, அவர் என்னிடம் சண்டைக்கு வர... போதும் போதும் என்றாகிவிட்டது எனக்கு. உதவி கேட்டால் கையைக் காண்பித்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.

Sangeetha Yugendran

நமக்கு அநீதி இழைக்கப்படும்போது, நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் நாம் அடைக்கலம் மற்றும் நீதி தேடுவோம். நமக்காகப் பேச வேண்டும் என்று நாம் தேடும் ஒருவர் நமக்கு யார் என்பதைவிட, அவர் பார்வையில் நாம் யார் என்பதை முதலில் உணர வேண்டும். இல்லையெனில், பிரச்னை பெருகிக்கொண்டேதான் போகும்!

வாழ்க்கையில நீங்க உணர்ந்த பாடம்..?
வாழ்க்கையில நீங்க உணர்ந்த பாடம்..?

Muneeswari Ganesan

எந்தச் சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்காதீர்கள். நிதானமாக இருக்கும்போதே மனமும் எண்ணமும் தெளிவாக இருக்கும். இவை இரண்டும் தெளிவாக இருந்தால் செயலும் தெளிவாக இருக்கும். எத்தகைய கடினமான சூழலையும் எளிதாகக் கடந்துவிட முடியும்.

Rajeswari Swaminadhan

உங்களுடைய பெற்றோருக்கு, நீங்கள் என்ன வெல்லாம் செய்ய நினைக்கிறீர்களோ, தாமதிக்காமல் செய்துவிடுங்கள்.

Krishnamurthy Latha

ஒருவருடன் பேசும்போது நீங்கள் என்ன அர்த்தத்தில் பேசுகிறீர்கள் என்பதைவிட, நீங்கள் கூறுவதை அவர் என்ன அர்த்தத்தில் புரிந்து கொள் கிறார் என்பதைக் கவனித்துப் பேசுங்கள்.

Ushakumari Usha

`இதுல பணம் போடுங்க... பணம் டபுள் ஆகும், நம்பமுடியாத வட்டி கிடைக்கும், ஆறு மாசத்துல லட்சாதிபதி ஆகிடலாம், ரெண்டு வருஷத்துல கோடீஸ்வரர் ஆகிடலாம்'னு சொல்லி புதுசு புதுசா வர்ற விளம்பரங்களை, அந்த மோசடி தொழில்களை நம்பிடவே நம்பிடாதீங்க... நிறைய அனுபவம்.

Srividhya Prasath

ஒருவர் இக்கட்டான நேரத்தில் இருக்கிறார் என்றால், அவருக்கு உங்களாலான உதவியைச் செய்யுங்கள். ஆனால் அதற்காக, அவர்களிடம் மிகவும் உரிமை எடுத்துக்கொண்டு அறிவுரை என்ற பெயரில் அவர்களுக்கு உபதேசம் செய்யாதீர்கள். அது அவர்களுக்குக் குத்திக் காட்டுவதுபோலத் தோன்ற லாம். நட்பும் உறவும் கெட்டுப்போகும். அனுபவித்துச் சொல்கிறேன்.