Published:Updated:

ரியல் எஸ்டேட் 2020: சொந்த வீட்டின் முக்கியத்துவத்தை உணரவைத்த கோவிட்-19

ரியல் எஸ்டேட்
பிரீமியம் ஸ்டோரி
News
ரியல் எஸ்டேட்

2021-ல் வீடு விற்பனை உயருமா?

REALESTATE 2020

கொரோனா ஆண்டு என்றே அழைக்கப்படும் 2020, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மிக விரைவாகக் கடந்துவிட்டதாகவே தோன்றுகிறது. இது பல கோணங்களில் பின்னடைவுகளையும், மாற்றங் களையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய பெரிய ஆண்டாகும்.

ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை, கொரோனா தொடங்கிய உடனேயே அது ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளாக சிக்கல்களை எதிர் கொண்ட இந்தத் துறையானது முழுமையான லாக்டெளனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. முழு அடைப்பு மக்களின் அன்றாட வாழ்க்கை முறையை முடக்கியது. எனவே, அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளும், ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு துறைகளும் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகின. கோவிட் 19-ன் ஆரம்பகட்டத்தில், ரியல் எஸ்டேட் தொழிலில் முற்றிலும் குறைவான செயல்பாட்டையே காணமுடிந்தது.

டாக்டர்
ஆர்.குமார், 
நிறுவனர் மற்றும் 
நிர்வாக இயக்குநர், 
நவீன்ஸ் ஹவுஸிங்
டாக்டர் ஆர்.குமார், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், நவீன்ஸ் ஹவுஸிங்

போக்குவரத்து இல்லாததால், கட்டடப் பொருள்கள் கட்டுமான இடங்களில் இல்லாமல் போயிற்று. பொருள்களின் விலைகளும் அதிகரித்தன. அனைத்து முக்கிய நகரங்களில் பெரும் சக்தியாகத் திகழ்ந்த புலம்பெயர்ந்த தொழிலா ளர்கள், தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டியிருந்ததால், கடுமையான மனிதவளப் பற்றாக் குறை ஏற்பட்டது. இவை அனைத்தும் ரியல் எஸ்டேட் துறையைக் கடுமையாகப் பாதித்தன. இந்தத் துறை இரண்டு, மூன்று மாதங்கள் மிக மந்தமாக இருந்தது.

இருப்பினும், லாக்டெளனின் தளர்வு மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையின் செயல்பாடு சிறிது சிறிதாக மீளத்தொடங்கிய பின், ரியல் எஸ்டேட் தொழில் புத்துயிர் பெறத் தொடங்கியது. கோவிட் -19 தொற்றுநோய் ஒருபுறம் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தி யிருந்தாலும், மறுபுறம் வட்டி விகிதங்கள் வேகமாக வீழ்ச்சியடையத் தொடங்கியதால், குடியிருக்க வீடுகள் வாங்கும் திறன் மக்களுக்கு அதிகரித்தது. வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்து 7% மற்றும் அதற்கும் குறைவாக இறங்கியது.

இது மட்டுமன்றி, இந்த லாக்டெளன் காலத்தில், மக்கள் சொந்த வீட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். லாக்டெளன் நேரத்தில் பல்வேறு ஆன்லைன் இணைய தளங்கள் மூலம் வீடுகளைத் தேடினர். வீடு வாங்குபவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, பில்டர்கள் விலைகளைக் கணிசமாகக் குறைத்து 5-10% அல்லது அதற்கு மேற்பட்ட தள்ளுபடியை வழங்கினர்.

ரியல் எஸ்டேட் 2020: சொந்த வீட்டின் முக்கியத்துவத்தை உணரவைத்த கோவிட்-19

இவை அனைத்தும் வீடு வாங்கும் முடிவை எடுக்கத் தேவையான தூண்டுதலை வழங்கியதுடன், வீடு வாங்குபவர்களுக்கு அவர்களின் கனவு வீடுகளை முன்பு எப்போதும் இல்லாத மிகவும் குறைவான செலவில் பெற உதவியது. இதனால் கட்டுமானத்துறை புத்துயிர் பெறத் தொடங்கியது.

கோவிட்-19-க்குப் பிந்தைய விற்பனை, கோவிட்டுக்கு முந்தைய விற்பனையைவிட அதிகம். ஒட்டு மொத்த வீட்டுத் துறையும் நாடு முழுவதும் முன்னேற்றத்தைக் காணத் தொடங்கியுள்ளது. மேலும், 2021-ம் ஆண்டில் வீடு விற்பனை என்பது சிறந்த ஒரு முன்னேற்றத்தைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், 2020-ம் ஆண்டில் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யச் சொன்னதால், வணிக வளாகங்களைப் பொறுத்தவரை கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. வியாபாரத் தளங்கள் செயல்படவே முடியவில்லை,

இருப்பினும், தற்போது அலுவலக லீசிங் பெரும்பாலான நகரங்களில் குறிப்பாக, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் மும்பையில் ஏற்ற நிலையில் உள்ளன. சென்னை அலுவலக ரியல் எஸ்டேட்டும் ஏறுமுகத்தைக் கண்டு வருகிறது. ரியல் எஸ்டேட்டின் எல்லா துறைகளும் 2021-ம் ஆண்டில் நல்ல வளர்ச்சியைப் பெறும் என்று எதிர்பார்க்கலாம்!