Published:Updated:

பரிந்துரை: இந்த வாரம்... மழைக்காலத்தில் வாகனப் பராமரிப்பு

மழைக்காலத்தில் வாகனப் பராமரிப்பு
பிரீமியம் ஸ்டோரி
மழைக்காலத்தில் வாகனப் பராமரிப்பு

‘ஆனந்த விகடன்’ வாசகர்களுக்காக வாரந்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள். இந்த வாரம் மாருதி சுஸூகி டீலரின் கார்ப்பரேட் மேனேஜர் விமல்நாத்.

பரிந்துரை: இந்த வாரம்... மழைக்காலத்தில் வாகனப் பராமரிப்பு

‘ஆனந்த விகடன்’ வாசகர்களுக்காக வாரந்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள். இந்த வாரம் மாருதி சுஸூகி டீலரின் கார்ப்பரேட் மேனேஜர் விமல்நாத்.

Published:Updated:
மழைக்காலத்தில் வாகனப் பராமரிப்பு
பிரீமியம் ஸ்டோரி
மழைக்காலத்தில் வாகனப் பராமரிப்பு

டயர்

வாகனத்தின் டயர்கள் தார்/கான்கிரிட் சாலைகளுக்காக உருவாக்கப்பட்டவை. குறைவான நீர், சாலையில் தேங்கி நின்றால், டயரின் பட்டன் டிசைன், நீரை டயரிலிருந்து தள்ளிவிடும். ஆனால், நீரின் அளவு அதிகமாக இருக்கும்போது, டயரில், நீரின் அழுத்தம் காரணமாக கிரிப் குறைந்துவிடும். இந்தச் சமயங்களில் பிரேக்கைப் பயன்படுத்தாமல் வாகனத்தின் வேகத்தைக் குறைப்பது பாதுகாப்பானது.

டயர் மீது வரிவரியாக இருக்கும் தடம்தான் ட்ரெட். அது தேய்ந்துவிட்டால் ஈரத்தில் வாகனங்கள் அதிகமாக வழுக்கும். 2 ரூபாய் நாணயத்தை ட்ரெட்டில் வைத்துப்பாருங்கள். சிங்கத்தின் பிடரி மறையும்படி இருந்தால் அது நல்ல டயர். சிங்கத்தின் பிடரி தெரிந்தால், டயரை மாற்ற வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரேக்

பெரும்பாலான வாகனங்களில் முன்பக்கம் டிஸ்க் பிரேக்கும் பின்பக்கம் டிரம் பிரேக்கும் இருக்கும். நாம் சகதியில் வாகனம் ஓட்டும்போது சகதி மண் பிரேக் டிரம்முக்குள் சென்றுவிடும்.

விமல்நாத்
விமல்நாத்

காரை பார்க்கிங் பிரேக்கில் அப்படியே நிறுத்திவிட்டால், இந்த மண் காய்ந்து பார்க்கிங் பிரேக்கை ரிலீஸ் செய்வது கஷ்டமாக இருக்கும். இந்தச் சமயங்களில் டயர்களை உதைத்தால் மண் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு, பார்க்கிங் பிரேக்கை சுலபமாக எடுக்கலாம். இதற்குப் பிறகு கீச் சத்தம் அதிகமாக இருக்கும். கவலை வேண்டாம் கொஞ்ச நேரத்தில் அதுவாகவே சரியாகிவிடும்.

டிஸ்க் பிரேக்கில், கேலிப்பர் மற்றும் பிரேக் பேடுகளில் தூசு, நீர் இரண்டும் சேர்ந்து ஒரு மேலடுக்காக மாறி, பிரேக்கின் திறனைக் குறைத்துவிடும். நீர் காய்ந்த பிறகு தானாகவே சரியாகிவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃபாக் பிரச்னை

கார்க் கண்ணாடியில் பனி படர்ந்து, கார் ஓட்டும்போது சாலை தெரியாமல் பிரச்னை கொடுக்கும். டீஃபாகர் உள்ள கார்களில் கவலை இல்லை. சாதாரண ஏசி கார்கள் என்றால் புளோயரை ஆன் செய்துவிட்டு, டேஷ்போர்டு மோடில் போட்டால் ஃபாக் காணாமல் போய் விடும். இல்லையென்றால் ஏசி ரெகுலேட்டரைச் சிவப்பு நிறத்துக்குத் திருப்பி சில நொடிகள் ஓடவிட்டால் உடனே பனி உருகிவிடும். உருகியதும் ஹீட் மோடை உடனே ஆஃப் செய்துவிட வேண்டும்.

எலெக்ட்ரிக்கல்

எலெக்ட்ரிக்கல் சிஸ்டம்தான் மழைக் காலத்தில் மிகப்பெரிய எதிரி. வாகனத்தின் எந்தப் பகுதியிலும் ஒயர்கள் வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் காரை ஐடிலிங்கில் நிறுத்திவிட்டு, ஏ.சி போட்டு நீண்ட நேரம் இருக்கக் கூடாது.

திடீரென வாகனம் நின்றுவிட்டது என்றால் பெரும்பாலும் ஃபியூஸ் அல்லது ஒயரிங் பிரச்னையாகத்தான் இருக்கும். எக்ஸ்ட்ரா ஃபியூஸ் கைவசம் எப்போதும் இருக்கட்டும்.

5W, 10W, 20W என வெவ்வேறு ஃபியூஸ் இருக்கின்றன. 5W ஃபியூஸை வெளியே எடுத்தால் அந்த இடத்தில் 5W ஃபீயூஸைத்தான் பொருத்த வேண்டும். இல்லையென்றால் ஃபியூஸ் இருந்தும் பயன் இல்லை.

வைப்பர்

கார்களில் மழை நேரத்தில் வைப்பர்கள் அத்தியாவசியம். விண்டுஷீல்டில் தண்ணீர் இல்லாமல் வைப்பரை ஆன் செய்யவே கூடாது.

தண்ணீர்

தண்ணீரின் அளவு அதிகரித்து, தண்ணீருக்குள் வாகனம் ஆஃப் ஆகிவிட்டால் மீண்டும் ரீ-ஸ்டார்ட் செய்யாதீர்கள். அப்படி ரீ-ஸ்டார்ட் செய்தால், இன்ஜினின் கனெக்டிங் ராடுகள் உடைந்துவிடும். இது மிகப்பெரிய செலவு வைக்கும் வேலையாகிவிடும். முக்கியமாக கார்களுக்கு. வாகனத்தைத் தள்ளிக்கொண்டே மழை நீர் இல்லாத இடத்துக்குச் சென்று பைக்காக இருந்தால் 15 நிமிடங்கள் கழித்து ஸ்டார்ட் செய்யுங்கள். காராக இருந்தால் உடனே சர்வீஸ் சென்டரைக் கூப்பிடுவது நல்லது.

அதிக தண்ணீருக்குள் சிக்கிக்கொண்டீர்கள். கதவைத் திறந்தால், தண்ணீர் காருக்குள் வந்துவிடும் என்கிற நிலையில் பின்பக்கக் கதவுக் கண்ணாடிகளை உடைத்து வெளியே வரவேண்டும். இந்த நேரத்தில் பவர் விண்டோஸ் பட்டனை இயக்கக் கூடாது. இயக்கினால் ஷார்ட் சர்க்யூட் ஆகலாம்.

கிளட்ச்

சேற்றில் வாகனம் சிக்கிக்கொண்டால் கிளட்சைப் பாதி பிடித்துக்கொண்டு, ஆக்ஸில ரேட்டரை அழுத்தி வாகனத்தை வெளியே எடுக்க முயல்வார்கள். இது தவறான முறை. இப்படியே அரை மணிநேரம் செய்தால் கிளட்ச் பிளேட் தேய்ந்து உடனே மாற்றவேண்டியது வரும். குறைந்தபட்சம் 20,000 செலவு வைக்கும். அதனால், கார்கள் சேற்றில் சிக்கிக்கொண்டால் டயருக்குக் கீழே ஒரு பலகையை வைத்து காரை ஆன்செய்து நகர்த்தி வெளியே எடுக்க வேண்டும். இல்லையென்றால், கயிறு கட்டி இழுத்துவிடலாம்.

- விமல்நாத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism