Published:Updated:

ஈ.சி.ஆரில் செம்மண் கொள்ளை! - துணைபோகிறதா போலீஸ்?

செம்மண் கொள்ளை
பிரீமியம் ஸ்டோரி
செம்மண் கொள்ளை

இதேபோல கோவளம் முகத்துவாரப் பகுதியில், மழைநீர் கடலுக்குச் செல்லும் இடத்தில் மணல் கொள்ளையும் தொடர்கிறது.

ஈ.சி.ஆரில் செம்மண் கொள்ளை! - துணைபோகிறதா போலீஸ்?

இதேபோல கோவளம் முகத்துவாரப் பகுதியில், மழைநீர் கடலுக்குச் செல்லும் இடத்தில் மணல் கொள்ளையும் தொடர்கிறது.

Published:Updated:
செம்மண் கொள்ளை
பிரீமியம் ஸ்டோரி
செம்மண் கொள்ளை

கிழக்கு கடற்கரை சாலையின் பிடிமானத்துக்காகப் போடப்பட்ட செம்மண்ணைத் திருடுவது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. இந்தக் கொள்ளைக்கு காக்கிகளும் துணைபோவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், கோவளம் அருகே குன்றுக்காடு பகுதியில் சாலையோரத்தில் பிடிமானத்துக்காகப் போடப்பட்டிருக்கும் செம்மண் கிராவலை சிலர் திருடிக்கொண்டிருப்பதாக, செப்டம்பர் 3-ம் தேதி அதிகாலையில், காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து குன்றுக்காடு அரசுப் பள்ளி அருகில் மண் திருட்டில் ஈடுபட்டவர்களைப் பிடித்த போலீஸார், அவர்களிடமிருந்து ஜே.சி.பி இயந்திரம், லாரி, கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

ஈ.சி.ஆரில் செம்மண் கொள்ளை! - துணைபோகிறதா போலீஸ்?

இது குறித்து நம்மிடம் பேசிய அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், ``ஈ.சி.ஆரின் பல்வேறு பகுதிகளிலும், இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை செம்மண் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இந்தக் கும்பல் சாலை யோரம் சாதாரணமாக நிறுத்தியிருப்பதுபோல ஜே.சி.பி-யைக் கொண்டுவந்து நிறுத்துவார்கள். இரவு நேரத்தில், அங்கு லாரியை எடுத்துச் சென்று சாலையோர மண்ணை அதில் அள்ளிப்போட்டு நகருக்குள் கொண்டுவந்துவிடுவார்கள். பெரும்பாலும் அந்தப் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களுக்குக் கப்பம் கட்டிவிட்டுத்தான் இந்த வேலை நடக்கும். குறிப்பாக ஈ.சி.ஆர் பகுதியிலுள்ள ஒரு காவல் நிலையத்துக்குப் புதிதாக விருப்பப்பட்டு பணி மாறுதல் வாங்கிவந்த இன்ஸ்பெக்டர் ஒருவரின் முழு ஒத்துழைப்பில்தான் இங்கு பெரும்பாலான மண் திருட்டு நடந்து கொண்டிருக்கிறது.

திருநாவுக்கரசு
திருநாவுக்கரசு

இதேபோல கோவளம் முகத்துவாரப் பகுதியில், மழைநீர் கடலுக்குச் செல்லும் இடத்தில் மணல் கொள்ளையும் தொடர்கிறது. அந்த மணலில் உப்புத்தன்மை அதிகம் இருப்பதால் கட்டுமானத்துக்குப் பயன்படுத்த முடியாது. எனவே, அதை ஆற்று மணலில் கலப்படம் செய்வதற்காகவே கடத்துகிறார்கள்” என்றனர்.

சுரேஷ்
சுரேஷ்

இந்தக் குற்றச்சாட்டு குறித்து பள்ளிக்கரணை காவல்துறை துணை ஆணையர் ஜோஷ் தங்கையாவிடம் பேசினோம். ``மணல் திருட்டு குறித்து இரவு 2:30 மணியளவில் எனக்குத் தகவல் வந்ததும், கேளம்பாக்கம் பகுதி போலீஸாருக்குத் தெரியப்படுத்தினேன். திருநாவுக்கரசு, சுரேஷ் ஆகியோரைக் கைதுசெய்துள்ளோம். செம்மண் மற்றும் மணல் கொள்ளையைத் தடுக்க கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை காவல்துறையைச் சேர்ந்த யாருக்காவது மணல் திருட்டில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் உறுதியாக.

ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால், மோசமான விபத்துக்கு இதுவே காரணமாகிவிடும்!