Published:Updated:

ஒரே கையெழுத்து... மாறியது ஐந்து கிராம மக்களின் தலையெழுத்து!

பாதிக்கப்பட்ட மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
பாதிக்கப்பட்ட மக்கள்

ஓட்டப் பிடாரம் தாலுகாவுல எங்க தாத்தா பிரம்மநாயகம் பிள்ளைக்கு எட்டு கிராமங்கள்லயும் சேர்த்து மொத்தமா 15,000 ஏக்கர் நிலம் இருப்பதற்கான எல்லா ஆவணங்களும் என்கிட்ட இருக்கு.

ஒரே கையெழுத்து... மாறியது ஐந்து கிராம மக்களின் தலையெழுத்து!

ஓட்டப் பிடாரம் தாலுகாவுல எங்க தாத்தா பிரம்மநாயகம் பிள்ளைக்கு எட்டு கிராமங்கள்லயும் சேர்த்து மொத்தமா 15,000 ஏக்கர் நிலம் இருப்பதற்கான எல்லா ஆவணங்களும் என்கிட்ட இருக்கு.

Published:Updated:
பாதிக்கப்பட்ட மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
பாதிக்கப்பட்ட மக்கள்

ஒரே நபரின் பெயரில், 2,512 ஏக்கர் நிலத்துக்கு பவர் பத்திரம் எழுதப்பட்டிருப்பது, தமிழகத்தையே தடதடக்க வைத்திருக்கிறது!

மே 5-ம் தேதி, தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில்தான் இந்த ‘வரலாற்றுச் சிறப்புமிக்க பத்திரப் பதிவு’ நடைபெற்றுள்ளது. தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி உள்ளிட்ட ஐந்து கிராமங்களுக்குட்பட்ட 2,512 ஏக்கர் நிலமும் ஒரே நபரின் பெயருக்கு பவர் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து முறைகேடாக பவர் பத்திரம் வழங்கிய விசாரணையில், சார்பதிவாளர் மோகன்தாஸ், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஒரே கையெழுத்து... மாறியது ஐந்து கிராம மக்களின் தலையெழுத்து!

இது குறித்துப் பேசும் தெற்கு சிலுக்கன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பேச்சிமுத்து, ‘‘எங்க ஊர்ல இருக்குற அம்மன் கோயில்ல கட்டுமானப் பணி நடக்குது. அதுக்கு நிதிப் பற்றாக்குறையா இருந்ததுனால, கோயிலுக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை வித்து கோயில் வேலையை முடிச்சுடலாம்னு நிலத்தோட வில்லங்கச் சான்று எடுத்தோம். அதுல சொத்து, கோயில் பெயரில் இல்லாம, செந்தில் ஆறுமுகம்கிறவரோட பேர்ல இருந்துச்சு. ரெண்டாவது தடவையும் இ.சி எடுத்துப் பார்த்தோம். கோயில் நிலத்தைச் சுத்தியுள்ள நிலங்கள்லயும் அவர் பேருதான் காட்டுச்சு. பதறிப்போயி, ஊர்ல இருக்குற விவசாயிங்க அவங்கவங்க நிலத்தை இ.சி போட்டுப் பார்த்தாங்க. மொத்த நிலமும் செந்தில் ஆறுமுகம் பேர்லதான் வந்துச்சு. அவரு கோயம்புத்தூரைச் சேர்ந்த அதிதேவ் கிரீன் அக்ரோ பிரைவேட் லிமிடெட்டின் உரிமையாளரான அன்புராஜுங்கிறவர் பெயர்ல பவர் பத்திரம் போட்டுக் கொடுத்திருந்ததையும் அப்பதான் கண்டுபிடிச்சோம்’’ என்றார்.

இந்த விவகாரம் குறித்து செந்தில் ஆறுமுகத்திடம் பேசினோம். “ஓட்டப் பிடாரம் தாலுகாவுல எங்க தாத்தா பிரம்மநாயகம் பிள்ளைக்கு எட்டு கிராமங்கள்லயும் சேர்த்து மொத்தமா 15,000 ஏக்கர் நிலம் இருப்பதற்கான எல்லா ஆவணங்களும் என்கிட்ட இருக்கு. அதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பு நகலும் என்கிட்ட இருக்கு. அதனால, சட்டப்படி அது எங்க குடும்ப நிலம்தான் என்பது குறித்து, தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு போலீ ஸாரிடம் விளக்கம் கொடுத்து, இது தொடர்பான ஆவண நகல்களையும் சமர்ப்பிச்சிருக்கேன்” என்றார் தெம்பாக.

பேச்சிமுத்து, மோகன்தாஸ், செந்தில் ஆறுமுகம்
பேச்சிமுத்து, மோகன்தாஸ், செந்தில் ஆறுமுகம்

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள புதுக்கோட்டை சார்பதிவாளர் மோகன்தாஸ், “செந்தில் ஆறுமுகம் குடும்பத்தினருக்குச் சொந்தமான நிலங்கள் என்பதற்கான ஆவணங்கள், நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் ஆகியவற்றைச் சரிபார்த்தே பவர் பத்திரத்தை பதிவு செய்துகொடுத்தேன். ஆனால், உரிமைப் பரிமாற்றம் நிகழாத நிலங்களுக்கு மட்டும் அளிக்கவேண்டிய பதிவை, தவறுதலாக தற்போது அனுபவத்தில் உள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களின் சர்வே எண்களிலும் செந்தில் ஆறுமுகத்தின் பெயர் பதிவு செய்யப்பட்டுவிட்டது. பதிவு நடைமுறையில் நான் செய்தது தவறுதான்” என்றார் ஒப்புதலாக.

அரசு என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism