Published:Updated:

தொழிலில் வெற்றி பெற நிறைய படியுங்கள்!

Rehan yar khan
பிரீமியம் ஸ்டோரி
Rehan yar khan

ரெஹான் யர் கான் அட்வைஸ்

தொழிலில் வெற்றி பெற நிறைய படியுங்கள்!

ரெஹான் யர் கான் அட்வைஸ்

Published:Updated:
Rehan yar khan
பிரீமியம் ஸ்டோரி
Rehan yar khan

ரெஹான் யர் கான் (Rehan yar khan) - இந்தியத் தொழில் உலகில் மிக முக்கியமான பெயர். தொழிலதிபராகப் பயணத்தைத் தொடங்கி, குறுகியகாலத்தில் வெற்றிகரமான முதலீட்டாளராக மிளிர்ந்தவர். `ஓரியோஸ் வென்ச்சர் பார்ட்னர்ஸ்’ என்ற இந்தியாவின் முக்கிய நிதி முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர். ஓலா கேப்ஸ், துருவா, பார்ம்ஈஸி என இந்தியாவின் மில்லியன் டாலர் பிராண்டுகளில் முதலீடு வெற்றி கண்டவர்.

Rehan yar khan
Rehan yar khan

எழுத்தாளர் என்பது ரெஹானின் புதிய அடையாளம். இரண்டாண்டு உழைப்பில், ‘Make Your Own Luck’ என்ற புத்தகத்தை நண்பருடன் இணைந்து எழுதி வெளியிட்டிருக்கிறார். அதிர்ஷ்டத்தை அடிமையாக்கி வெற்றி பெறுவதற்கான ஏழு முக்கியப் படிகளைச் சொல்கிறது இந்தப் புத்தகம். இந்தப் புத்தகம் குறித்த விவாதத்தை ஏற்பாடு செய்திருந்தது சென்னை இன்டர்நேஷனல் சென்டர். இந்த விவாதத்தில் கலந்துகொள்ள மும்பையிலிருந்து சென்னை வந்திருந்த ரெஹானைச் சந்தித்துப் பேசினோம். அவர் நமக்களித்த பேட்டி இனி...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொழிலதிபர், முதலீட்டாளர், எழுத்தாளர் - இந்த மூன்று முகங்களில் எது உங்களை அதிக உற்சாகப்படுத்துகிறது?

‘‘மூன்றும்தான், ஆனால், அண்மைக்காலமாக எனக்குள் இருக்கும் எழுத்தாளரை அதிகம் ரசிக்கிறேன். ஏனெனில், ஓர் எழுத்தாளனாக என் அனுபவங்களைப் பலருடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது.’’

1990-களில் உங்கள் பயணத்தை ஒரு தொழில்முனைவோராகத் தொடங்கியபோது நீங்கள் பெற்ற அனுபவம் என்ன?

‘‘ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்வதில் நமக்குத் தேவை ஆர்வம் என்பதும், எதைச் செய்வதாக இருந்தாலும் நம்மிடம் முன்தயாரிப்பு இருக்க வேண்டியது முக்கியம் என்பதும் நான் அனுபவரீதியாகக் கற்றுக்கொண்ட விஷயங்கள். இன்றுகூட ஒரு நிறுவனத்துக்கு நேர்காணலுக்குச் செல்பவர்கள் குறைந்தபட்சம் அந்த நிறுவனத்தைப் பற்றிக்கூட அறிந்து வைத்திருப்பதில்லை. இது ஒருவரின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய தடை என்பதை நான் கற்றுக்கொண்டேன்.’’

make your own luck
make your own luck

தொழில்முனைவோருக்கு நீங்கள் கொடுக்கும் மிக முக்கியமான அறிவுரை என்ன?

‘‘ ‘பிறருக்கு உதவுங்கள்.’ தொழில் உலகில் மிகவும் குறைத்து மதிப்பிடப்படும் பண்பாக இதை நான் பார்க்கிறேன். தொழில் வெற்றி என்பது சுற்றி இருப்பவர்கள் உங்கள்மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் சார்ந்தது. ஒருவருக்கு உதவினால்தான் அது காலப்போக்கில் உங்கள் மீதான நன்மதிப்பாக மாறும். வெறும் உதவி செய்யும் நோக்கில்தான், துருவா நிறுவனத்தில் முதலீடு செய்தேன். இன்று துருவா என் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக இருக்கிறது.’’

‘Make Your Own Luck’- என்பது உங்கள் புத்தகத்தின் தலைப்பு. அதிர்ஷ்டம் என்பதை எப்படி வரையறை செய்கிறீர்கள் ?

‘‘அதிர்ஷ்டம் என்பதை நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு காரணியாகவே நாம் பார்க்கப் பழகியிருக்கிறோம். அது 10% மட்டுமே உண்மையாக இருக்க முடியும். ஆனால், 90% நம் தொடர் செயல்பாடுகளின், நாம் எடுக்கும் முடிவுகளின் வெளிப்பாடே அதிர்ஷ்டம்.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
Rehan yar khan
Rehan yar khan

தொழில்முனைவோருக்கு வாசிப்புப் பழக்கம் எவ்வளவு முக்கியமானது என நினைக்கிறீர்கள்?

‘‘என் வாழ்வில் ஒவ்வொருமுறை மிகப்பெரிய சவாலை நான் சந்திக்கும்போதும், எனக்கு பெரும் தடைகள் ஏற்படும்போதும் வாசிப்புப் பழக்கம் மட்டுமே என்னைக் காப்பாற்றியிருக்கிறது. ஏனெனில், வாசிப்பதன் மூலம் மட்டும்தான் கற்றல் சாத்தியமாகிறது. கூகுள் சர்ச் இன்ஜின் ஆப்டிமைசேஷன் (SEO) முதல் சரியான நபரை வேலைக்கு எடுப்பது வரை நான் அனைத்தையும் கற்றுக்கொண்டது வாசிப்பால்தான். கற்றுக்கொள்வதைக் கல்லூரியோடு நிறுத்திக்கொள்வது தவறு.’’

வெற்றிக்கான மந்திரத்தை ஒரே வரியில் சொல்வதென்றால் எப்படிச் சொல்வீர்கள்?

‘‘நிறைய படியுங்கள்.’’

இணையத்தில் உங்களுக்கான அறிமுகத்துக்கு முன்னதாகவே, `புதிய தொழில் யோசனைகளை வரவேற்கிறோம்’ என உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கிறீர்கள். உங்களுக்கு வரும் அத்தனை மின்னஞ்சலையும் படிக்கிறீர்களா?

‘‘நிச்சயமாக. நான் மட்டுமல்ல, எங்கள் நிறுவனத்தில் புதிய தொழில் யோசனைகளை அலசவும் ஆராயவும் 30 பேர்கொண்ட குழு இருக்கிறது. எங்களுக்கு வரும் அத்தனை யோசனைகளையும் ஆய்வுசெய்கிறோம். கடந்த வருடம் மட்டும் 3,000-க்கும் மேற்பட்ட தொழில் முன்மொழிதல்களை அலசி, அவற்றில் சுமார் 1,000 பேரை நேரில் சந்தித்துப் பேசினோம். முதலில் அவர்கள் எங்கள் நிறுவனத்தின் விதிகளுக்கும் புரிந்துணர்வுக்கும் பொருந்துபவர்களாக இருந்தனர். கூடுதலாக அவர்களிடம் நல்ல டீம், அவர்களின் தொழில் யோசனைக்குப் பெரிய மார்க்கெட் இருப்பதாக நாங்கள் நினைத்தோம். எனவே, அவர்கள் ஏழு பேரிடமிருந்து வந்த தொழில் முன்மொழிதல்களை ஏற்று முதலீடு செய்தோம்.’’

இந்தியாவில் பொருளாதாரச் சரிவு இருக்கும் நிலையில், புதிய தொழில் தொடங்குவதைப் (Entrepreneurship) பொறுத்தவரை நம் எதிர்காலம் எப்படி இருக்கும்?

‘‘சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகள் வலிமையான பொருளாதாரம் கொண்டவை. ஆனால், அங்கெல்லாம் புதிய தொழில்கள் தொடங்கப் படுவதே இல்லை. ஏனெனில், அந்த நாடுகளின் சந்தை மிகவும் சிறியது. 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் சந்தைத் தேவை மிக அதிகம் என்பதால், இங்கு புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Rehan yar khan
Rehan yar khan

மோடியின் ‘ஸ்டார்ட்அப் இந்தியா’ பற்றி...?

‘‘இது மிகவும் வரவேற்கத்தக்கது. ஒருவேளை இந்தக் கொள்கை முடிவுகளால் நேரடியாக எந்தப் பலனும் இல்லை என்று வைத்துக் கொண்டால்கூட, ஸ்டார்ட்அப் முயற்சிகளுக்கு இவர்கள் தரும் இந்த அங்கீகாரமே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதே நேரம், அனுமதி இல்லாத புத்தாக்க முயற்சிகளை (Permissionless Innovation) ஊக்குவிக்க வேண்டியது அவசியம்.’’

‘‘வென்ச்சர் கேப்பிட்டல் நிதி என்பதை எல்லாவிதமான துறைகளிலும் பயன்படுத்த முடியாது!’’

எதிர்காலத்தில் வென்ச்சர் கேப்பிட்டல் (Venture Capital) நிதி முதலீடுகள் எந்தெந்தத் துறைகளில் அதிகரிக்கும்?

‘‘வென்ச்சர் கேப்பிட்டல் என்பதை எல்லா விதமான துறைகளிலும் பயன்படுத்த முடியாது, உதாரணமாக, நெடுஞ்சாலை அமைப்பது போன்ற பெரும் கட்டமைப்புப் பணிகளுக்கோ, ஆய்வுப் பணிகளுக்கோ இந்த முதலீட்டு வகை பொருந்தாது. பெரிய கட்டுமானங்கள் தேவைப்படாத, நேரடிச் செயல் அணுகுமுறை அதிகம்கொண்ட `அஸெட் லைட்’ (Asset Light) எனப்படும் குறைவான சொத்து மதிப்போடு செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த வகை முதலீடுகள் பொருந்தும். அவை மக்களின் தேவையை, மனநிலையைப் பொறுத்து தொடர்ந்து மாறும் தன்மைகொண்டவை.’’

ஒரு தொழில்முனைவோர், வென்ச்சர் கேப்பிட்டல் (Venture Capital) நிறுவனங்களிடமிருந்து நிதி முதலீட்டைப் பெற எந்த வகையான முன்தயாரிப்பைச் செய்ய வேண்டும் ?

‘‘தொழில்முனைவோராக ஒருவர் பயணத்தைத் தொடங்கும்போது, அவருடன் பயணிக்கும் துணை யார் என்பதே ஒருவர் கவனிக்கத் தவறும் முக்கியமான விஷயம். சிறந்த தொழில் வெற்றிக்கு ஒரு நல்ல தொழில் கூட்டணி அமைய வேண்டியது மிக அவசியம். ஒத்த கருத்துகள்கொண்ட இருவர் அல்லது மூவர் ஒரு புதிய தொழில் யோசனையோடு எங்களை அணுகும்போது, அந்தக்குழுமீது நாங்கள் கொள்ளும் நம்பிக்கை, எங்களை அவர்கள் தொழிலுக்கு முதலீடு செய்ய வைக்கும். அதுதான் சிறந்த தொடக்கம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism