Published:Updated:

தனிமையோடு வாழப் பழகுங்கள்!

தனிமையோடு வாழப் பழகுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
தனிமையோடு வாழப் பழகுங்கள்!

ரிலாக்ஸ் ப்ளீஸ்

தனிமையோடு வாழப் பழகுங்கள்!

ரிலாக்ஸ் ப்ளீஸ்

Published:Updated:
தனிமையோடு வாழப் பழகுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
தனிமையோடு வாழப் பழகுங்கள்!
கொரோனா நமக்குக் கொடுத்த கொடைகளுள் ஒன்று ‘தனிமை’. தனிமை இனிமை தருமா, தராதா என்ற பகுப்பாய்வை எல்லாம் விட்டுத்தள்ளுங்கள். இனி, கொரோனவோடு வாழப் பழகுகிறோமோ, இல்லையோ... தனிமையோடு வாழப் பழகியே ஆக வேண்டும்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்றைய ஆண்ட்ராய்டு யுகத்தில் நமக்கு ஏற்படும் தனிமை உணர்வு தவிர்க்க இயலாதது. எனினும், ‘தனிமை’ பற்றிய நமது பார்வையை மாற்றுவதன் மூலம் அதை இனிமையாக்கலாம் என்கிறார்கள் உளவியல் ஆலோசகர்கள். தனிமை என்றாலே கொடுமை என்று உருவகத்திலிருந்து வெளியேற உளவியல் ஆலோசகர் வசந்தி பாபு தரும் வழிகாட்டுதல்கள் இதோ உங்களுக்காக...

தனிமை ஏன் ஏற்படுகிறது..?

இந்தக் கேள்விக்கான பதில் ஒவ்வொரு வருக்கும் வேறுபடும். சிலர் தன் குடும்பத்தினர், நண்பர்களைவிட்டுப் பிரிந்திருப்பதால் தனிமையை உணரலாம். சிலர் தன் காதல் இணையைப் பிரிந்திருப்பதால்... சிலருக்கோ அருகில் அனைவரும் இருந்தும்கூட தனிமை உணர்வு ஏற்படும். இது தனிப்பட்ட நபரின் மனநிலையைப் பொறுத்தது.

 வசந்தி பாபு
வசந்தி பாபு

சென்ற தலைமுறையில் ‘தனிமை’ என்ற சொல்லுக்கே இடமிருந்ததில்லை. பெரும்பாலும் கூட்டுக் குடும்பம். எந்தவொரு சுகதுக்க நிகழ்ச்சியாக இருந்தாலும் உறவினர்கள் அனைவரும்கூடி ஒரு வார காலமாவது ஒன்றாக இருப்பார்கள். வேலைக்கோ, படிக்கவோ வெளியே சென்றாலும் எளிதில்

ஒரு நட்பு வட்டம் உருவாகிவிடும் இவற்றையெல்லாம் தாண்டி ஒருவரின் மூளைக்குள் தனிமை பற்றிய எண்ணங்கள் புகுவது அரிதாக இருந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் வேலை, படிப்பு இன்னும் பிற காரணங்களுக்காக இளம் வயதிலேயே குடும்பத்தினரைப் பிரிந்திருக்க நேரிடுகிறது. கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையும் அருகி வருகிறது.

முகநூல் நண்பர்களைக் காட்டிலும் முகம்பார்த்துப் பேசும் நண்பர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. யாருமில்லாத பட்சத்தில் தனிமை வந்து கவ்விக்கொள்கிறது.

இந்தக் காரணங்களுக்கெல்லாம் யாரையும் குறை கூற முடியாது. எல்லாம் காலத்தின் கோலம். காலத்துகேற்ப நம் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தனிமை பற்றிய நமது எண்ணம்...

நம்மில் பெரும்பாலானோருக்குத் தனிமை என்பது பயங்கரமான, கொடுமையான விஷயமாகவே இருக்கிறது. உண்மையில் தனிமை அழகான ஒன்று. நீங்கள் தனிமையில் இருக்கும்போது மற்றவர்களுக்காகப் போலியாக புன்னகை செய்யத் தேவையில்லை. மற்றவர்களின் தேவையற்ற விமர்சனங்களைக் கருத்தில்கொள்ள அவசியமில்லை. நீங்கள் நீங்களாகவே இருக்கலாம். உங்களைப் பற்றி யோசிக்கலாம். எந்தத் தொந்தரவும் இன்றி பிடித்த புத்தகத்தைப் படிக்கலாம். படம் பார்க்கலாம். இஷ்டப்படி சமைக்கலாம். பிடித்த உடையை அணியலாம். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்தைத் தவிர்க்கலாம். இன்னும் இப்படி எத்தனையோ வாய்ப்புகள். ஆனால், தனிமையைக் கொண்டாடத் தெரியாத நாமோ, தனிமை பற்றிய சோக பாடல் வரிகளை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் அப்லோட் செய்து கொண்டிருக்கிறோம்.

தனிமையோடு வாழப் பழகுங்கள்!

தனிமையை அதிகமாக உணர்வதால் வரும் பிரச்னைகள்...

ஒருவர் தனிமையைத் துக்கமான ஒன்றாக நினைத்து அதிலேயே உழன்றுகொண்டிருந்தால் அவர் மனம் மற்றும் உடல் சார்ந்து அதிகம் பாதிக்கப்படுகிறார். தேவையில்லாத மன அழுத்தம், மன உளைச்சல், இறந்த காலத்தை நினைத்து துக்கம், எதிர்காலத்தைப் பற்றிய பயம், தலைவலி, எரிச்சல், இனம்புரியாத குற்றவுணர்வு எல்லாம் இதனால் ஏற்படலாம். மனநிலை சீராக இல்லாதபோது அதனால் உடல்நிலையும் பாதிக்கப்படுகிறது. தனிமையில் அதீத மன உளைச்சலுக்கு ஆளாகும் சிலர் தற்கொலை எண்ணத்துக்குக்கூட தூண்டப்படுகிறார்கள்.

தனிமையை இனிமையாக்குங்கள்!

உங்களுக்குக் கிடைக்கும் தனிமையை சாபமாகக் கருதாமல் உங்களுக்குள் இருக்கும் உங்களைக் கண்டறியக் கிடைத்திருக்கும் வரமாகக் கருதுங்கள். தனிமையில் தேவை யில்லாத சிந்தனைகளில் மூழ்குவதற்குப் பதிலாக உங்களுக்குப் பிடித்தவர்களுடன் தொலைபேசியில் கலந்துரையாடலாம்.

தோட்டமிடுங்கள். அங்குள்ள மரம், செடி, கொடிகளுடன் மனம்விட்டுப் பேசுங்கள். உங்களின் வார்த்தைகளுக்கு அவை காற்றில் அசைந்தாடி செவி கொடுக்கும் அழகை ரசியுங்கள். வீட்டில் நீங்கள் மட்டும் இருப்பது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தினால் நாய், பூனை போன்ற ஏதாவது செல்லப்பிராணி வளர்க்கலாம். மனம் சோர்வடையும் தருணங்களில் அவற்றைக் கொஞ்சி மகிழ்வது நல்ல நிவாரணியாக இருக்கும். உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளரின் பாடலைக் கேட்டுக்கொண்டே புத்தகம் படியுங்கள். மனத்தில் தோன்றும் காட்சிகளுக்கு வார்த்தை களால் வடிவம் கொடுங்கள்.தனிமையில் உங்களுக்குப் பிடித்தவற்றை மட்டும் செய்யுங்கள். கண்டிப்பாகத் தனிமையிலும் இனிமை காணலாம்!