Published:Updated:

`பெண்ணுடன் சேர்த்து போட்டோ வெளியிடுவேன்' - மிரட்டலால் மத குரு தற்கொலை; சி.பி.ஐ விசாரணை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தற்கொலை செய்துகொண்ட நரேந்திர கிரி
தற்கொலை செய்துகொண்ட நரேந்திர கிரி

`உத்தரப்பிரதேசத்தில் பெண்ணுடன் தொடர்புபடுத்தி போட்டோக்கள் வெளியிடுவேன்’ என மிரட்டியதால் பிரபல சாமியார் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உத்தரப்பிரதேசத்தில் மிகப்பெரிய இந்து அமைப்பான அகில் பாரதிய அகாத பரிஷத்தின் தலைமை மத குருவான நரேந்திர கிரி, பிரயக்ராஜ் நகரிலுள்ள மிகப்பெரிய அனுமான் கோயில் தலைமை பூசாரியாகவும் இருந்தார். நரேந்திர கிரி திடீரென கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கோயிலுக்கு அருகிலுள்ள மடத்தில் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை, அவருடைய சீடர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

நரேந்திர கிரி
நரேந்திர கிரி
தலைமைக் காவலர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை! காவலர்கள் அதிர்ச்சி!

அவர் தற்கொலைக்கு முன்பாக கடிதம் ஒன்றையும் எழுதிவைத்திருக்கிறார். அந்தக் கடிதத்தில் தன் சீடர் ஆனந்த் கிரி, ஹனுமான் கோயில் பூசாரி ஆத்ய திவாரி, திவாரி மகன் சந்தீப் ஆகியோர் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்திவந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து மூன்று பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆனந்த் கிரி இரண்டு சந்தர்ப்பங்களில் தனது புகைப்படத்தை வேறு ஒரு பெண்ணுடன் சேர்த்து வெளியிட்டு, எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தப்போவதாக மிரட்டினார். அவப்பெயருடன் வாழ்வதைவிட சாவதே மேல். ஆனந்த கிரி என்மீது சுமத்திய நிதி மோசடியால் மிகவும் மன வருத்தம் அடைந்திருக்கிறேன் என்று நரேந்திர கிரி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதோடு தனக்குப் பிறகு தனது சொத்துகள் யாருக்குச் சேர வேண்டும் என்பது தொடர்பாக தற்கொலைக் கடிதத்திலேயே உயிலும் எழுதியிருக்கிறார். ஆனால் மத குரு நரேந்திர கிரி இந்த அளவுக்கு எப்போதும் எழுதியது இல்லை என்று அவருடைய சீடர்கள் தெரிவித்துள்ளனர். `ஓரிரு வரிகள் மட்டுமே எழுதுவார் என்றும், அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை’ என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நரேந்திர கிரி மடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்திய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், `மத குரு நரேந்திர கிரி தற்கொலைக்குக் காரணமானவர்களை விட மாட்டோம்’ என்று தெரிவித்தார். அதோடு அரசு இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், `நரேந்திர கிரி தற்கொலை தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்கும்’ என்று தெரிவித்திருக்கிறது. மாவட்ட எஸ்.பி கே.பி.சிங் இது குறித்துக் கூறுகையில், குருவின் கடிதத்தைப் படித்தேன். அவர் மிகவும் மன வருத்தத்தில் இருந்திருக்கிறார். தனக்குப் பிறகு ஆசிரமத்தில் என்ன நடக்க வேண்டும் என்பது குறித்தும் கடிதத்தில் எழுதியிருக்கிறார் என்று தெரிவித்தார். கைதுசெய்யப்பட்டிருக்கும் ஆனந்த கிரி இது குறித்துக் கூறுகையில், ``குருஜியை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றவர்கள் சதி செய்து கடிதத்தில் எனது பெயரை சேர்த்துள்ளனர். குருஜி ஒரு நாளும் கடிதம் எழுதியது கிடையாது. எனவே, குருஜி எழுதியதாகக் கருதப்படும் கடிதம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். எனது வாழ்நாள் முழுவதையும் மடத்தில் செலவு செய்துவிட்டேன். நிதி மோசடி எதிலும் ஈடுபடவில்லை. எனக்கும் குருவுக்கும் எந்தவிதப் பிரச்னையும் கிடையாது. எனவே இந்தச் சம்பவத்தை அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார். ஆனந்த் கிரி இதற்கு முன்பு நிதி மோசடியில் ஈடுபட்டதாக மடத்திலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் நரேந்திர கிரியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். மன்னிப்பு கேட்டுக்கொண்டதால் ஆனந்த கிரி மீண்டும் மடத்தில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு