Published:Updated:

‘கஜா’ நிவாரணக் களத்தில்...

‘கஜா’ நிவாரணக் களத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
‘கஜா’ நிவாரணக் களத்தில்...

கடந்த 2018 டிசம்பர் 15-ம் தேதியைத் தமிழ்நாடு மறக்கவே மறக்காது. கஜா புயல் நம் டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட நாள் அது.

‘கஜா’ நிவாரணக் களத்தில்...

கடந்த 2018 டிசம்பர் 15-ம் தேதியைத் தமிழ்நாடு மறக்கவே மறக்காது. கஜா புயல் நம் டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட நாள் அது.

Published:Updated:
‘கஜா’ நிவாரணக் களத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
‘கஜா’ நிவாரணக் களத்தில்...

புயலின் தாக்கத்தால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்கள் வரலாறுகாணாத பாதிப்புகளை எதிர்கொண்டன. வீடுகள், உடைமைகள், விளை நிலங்கள் என எல்லாம் போய் உயிர்பிழைக்கப் போராடிய தினங்களை இந்தத் தலைமுறை மறக்காது.

‘கஜா’ நிவாரணக் களத்தில்...

இயற்கைச் சீற்றங்களால் மக்கள் துயருற்ற போதெல்லாம் அங்கே முதலில் களம் கண்டு வாசகர்களின் பங்களிப்போடு உதவிக்கரம் நீட்டுவதில் விகடன் எப்போதுமே முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறது. கஜா புயல் நாள்களிலும் விகடனின் உதவிகள் ஆயிரக்கணக்கானோரைச் சென்ற டைந்தன. மீட்புப்பணி களிலும் நிவாரண உதவிகள் வழங்கு வதிலும் தங்களுடைய பங்களிப்பைத் தொடர்ந்து செய்தது விகடன். ஆனால் அதோடு நின்றுவிடவில்லை. அடுத்தகட்டமாக, ஓலைக் குடிசைகளில் வசித்த வீடிழந்த ஏழைக் கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டத்தையும் தொடங்கினோம். முதல்கட்டமாக நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புஷ்பவனத்திலும், முதலியார் தோப்பிலும் 10 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
‘கஜா’ நிவாரணக் களத்தில்...

நிவாரண உதவிகளுக்காக நாம் சென்றபோது ``புயலில் சிதைந்துபோன வீட்டுக்கு அரசு கொடுத்த ரூ.5,000, ரூ.10,000 எங்க வயித்துப் பாட்டுக்கே சரியாப்போச்சு. அந்தப்பணத்தில் கீற்றுகூட வாங்கிவிட முடியாது. இனி வீடு என்பதையே எங்களால் நெனச்சிப் பார்க்க முடியாது, நடுத்தெருதான்!” என்று கண்ணீர் வழிய நம்மிடம் அழுதவர்கள் பலரும், இன்று தங்களுக்கென வீடுகள் கட்டப்படுவதைக் கண்டு, மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தனர்.

‘கஜா’ நிவாரணக் களத்தில்...

புஷ்பவனத்தைச் சேர்ந்த கோமதியிடம் பேசினோம். “எங்க மூத்த பொண்ணு சரண்யா காலேஜ் படிக்கிறா. அடுத்ததா ஒரே பிரசவத்துல ஒரு பொண்ணு, ரெண்டு புள்ளைங்க. மூணு பேரும் ஏழாவது படிக்கிறாங்க. கஷ்டப்பட்டுக் கட்டின கூரை வீடு புயல்ல தரைமட்ட மாகிப் போச்சு. புள்ளைங்க படிக்கிற புத்தகம் வரைக்கும் மழைத்தண்ணியில அழிஞ்சுபோச்சு. முகாமிலிருந்து திரும்பியதும் எஞ்சி இருக்கிறதை வெச்சிக் காப்பாத்த சின்னதா குடிசை போட்டோம். மூணு பேரு படுத்துத் தூங்கினா மூணு பேரு உட்கார்ந்து தூங்கணும். இனி என்ன பண்ணப்போறோம்னு திக்குத் தெரியாமத் தவிச்ச நேரத்துலதான் எங்கிருந்தோ வந்து, எங்க காலத்துக்கும் கஷ்டமில்லாம வாழுறதுக்கு கான்கிரீட் வீடு கட்டித் தர்றீங்க.

‘கஜா’ நிவாரணக் களத்தில்...

இப்படி ஒரு வீட்டை நாங்க நெனச்சும் பார்த்ததில்லை. நன்றி சொல்லவும் வார்த்தை வரலை” எனத் தழுதழுக்கும் குரலில் நம்மிடம் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலியார் தோப்பைச் சேர்ந்த சேகர், “நான் கூலி வேலை செஞ்சி சம்பாரிக்கிறது புள்ளைங்களை வளர்த்துப் படிக்க வைக்கவே பத்தலை. இதில் குடியிருந்த வீடும் இடிஞ்சிபோனதில் மனசு ஒடஞ்சிபோச்சு. எப்படி வாழுறதுன்னு பித்துப்புடிச்ச மாதிரிதான் இருந்தேன். அந்தச் சமயத்துலதான் ஆயிரம் ரூபாய்க்கே அல்லல்படுற எங்களுக்கு லட்சக்கணக்குல பணம் போட்டு இலவசமா வீடு கட்டித்தர வந்தது பெரிய சந்தோஷம்” என்று நெக்குருகினார்.

‘கஜா’ நிவாரணக் களத்தில்...

கஜா நிவாரண நிதி அறிவிப்பு வெளியிட்டதும் அள்ளித்தந்த விகடன் வாசகர்களாலேயே இது சாத்தியமானது. இந்த வீடுகளின் ஒவ்வொரு செங்கல்லும் விகடன் வாசகர்களின் பெயர் சொல்லும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism