இன்றைக்கு சில அரசு நிறுவனங்களும் பல தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை 55 வயதிலேயே வீட்டுக்கு அனுப்பிவிடுகின்றன. இப்படி வலுக்கட்டாய ஓய்வில் அனுப்பப் படுகிறவர்களில் பலர் மனமுடைந்து போய் விடுகின்றனர். 55 வயதுக்குப் பின் நல்ல வேலை கிடைக்காது என்ற எண்ணம் அவர்களின் கவலையை பலமடங்கு அதிகரித்து விடுகிறது. இப்படி கட்டாய ஓய்வுக்குத் தள்ளப்பட்டவர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்பது பற்றிச் சொல்கிறார் மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் கெம்பா கார்த்திகேயன்.

திறமைசாலிகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு

“தனியார் நிறுவனங்களில் வேலைபார்ப்பவர்களுக்கு ‘எப்போது வேண்டுமானாலும் தங்களுடைய வேலை பறிபோகலாம்’ என்பது தெரியும் என்பதால், அடுத்தடுத்த நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்வதற்கு அவர்கள் மனதளவில் தயாராகவே இருப்பார்கள். கூடவே, மேற்கொண்டு படிப்பது, அதற்குத் தேவையான வேலைத்திறனில் தங்களை மேம்படுத்திக்கொள்வது என்றும் தயாராக இருப்பார்கள். தனியார் நிறுவனங்களில் ஒயிட் காலர் ஜாப் செய்பவர்கள்கூட தங்கள் திறமையையும் அனுபவத்தையும் பயன்படுத்தி வேறொரு நிறுவனத்துக்குச் சென்றுவிடுவார்கள்.

இதுவே அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு ‘இது நமக்கு நிரந்தர வேலை’ என்ற நம்பிக்கை இருப்பதால் உயர்படிப்பு, மற்ற வேலைத்திறன்களில் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளாமலே இருந்திருப்பார்கள். அரசு வேலையில் இருந்தவர்கள் அடுத்தவரை அதிகாரம் செய்தே பழக்கப்பட்டிருப்பார்கள். அதிகாரம் செய்வதை மறந்து தன் திறமையை வெளிப்படுத்தி, இன்னொருவரிடம் வேலை வேண்டும் என்று கேட்பதே அவர்களால் முடியாத காரியம். தங்கள் வேலையில் நல்ல திறமை கொண்டிருப்பவர்கள்கூட, அரசு வேலை போன பிறகு, சமாளிக்க முடியாமல் போவதற்கு இதுதான் காரணம்.

ஆனால், ராணுவத்தில் சாதாரண வேலையில் இருந்தவர்கள், ஓய்வுக்குப் பிறகு செக்யூரிட்டி வேலைக்குச் செல்வதுபோல சில விதிவிலக்குகளும் உண்டு. எழுதுவது, தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது போன்றவற்றில் ஏற்கெனவே ஈடுபாடு கொண்டவர்கள் பிழைத்துக்கொள்வார்கள்.

அரசாங்கத்தில் ஒயிட் காலர் வேலையில் இருந்தவர்களுக்கு அரசு இயந்திரம் எப்படிச் செயல்படுகிறது என்பது நன்கு தெரியும். இவர்கள் தனியார் நிறுவனங்களில் ஆலோசகர் களாகப் போகலாம். உதாரணத்துக்கு, அரசு வேளாண்துறையில் வேலை பார்த்தவர்கள் விவசாயம் தொடர்பான தொழிலைச் செய்துவரும் தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தால், எந்த டெண்டருக்கு எப்படி அப்ளை செய்ய வேண்டும், எந்த வேலைக்கு எந்த அரசுத்துறையை அணுக வேண்டும் என ஆலோசனை வழங்கலாம்.

எல்லாவற்றுக்கும் உங்கள் மனது தயாராக இருந்தால், கட்டாய ஓய்வால் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. திறமைசாலிகளுக்கு எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு!

நல்ல ஆசிரியர்களுக்கு எங்கும் எப்போதும் தேவை இருக்கும். துறைசார்ந்த அறிவு இருக்கும் ஆசிரியர்கள் அரசு வேலை போனால் தனியார் கல்வி நிறுவனங்களில் வேலைக்கு முயற்சி செய்யலாம். ஒருவேளை வேலை இழந்ததே தனியார் கல்வி நிறுவனத்திலிருந்துதான் என்றால், அதைவிட சிறிய கல்வி நிறுவனத்திலோ, ஆன்லைனிலோ பாடம் நடத்த ஆரம்பிப்பதன் மூலம் மீண்டும் சம்பாதிக்கத் தொடங்கலாம்.

அரசு நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள் தனியார் நிறுவனத்திலும், பெரிய தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தவர்கள் சிறிய தனியார் நிறுவனங்களிலும் வேலைபார்க்க நேரும்போது, தெரிந்த வேலையே என்றாலும் வொர்க்கிங் ஸ்டைல் மாறும். சம்பளம் குறையலாம். எல்லாவற்றுக்கும் உங்கள் மனது தயாராக இருந்தால், கட்டாய ஓய்வால் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. திறமைசாலிகளுக்கு எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு என்பதை மறக்காதீர்கள்’’ என்றார் கெம்பா கார்த்திகேயன்.

கட்டாய ஓய்வுக்குப் பிறகும் கம்பீரமாக வாழலாம்!

அடுத்து, தொழில் ஆலோசகர் சிவகுமாருடன் பேசினோம். “பொதுத்துறையோ, தனியார் துறையோ ஒரு நிறுவனம் என்பது உற்பத்தித் துறை, நிதித்துறை, நிர்வாகம், மார்க்கெட்டிங் என்ற சந்தைப்படுத்துதல் ஆகிய நான்கும் சேர்ந்ததுதான். இதில் ஏதோ ஒரு துறையில் தங்களுடைய 55 வயது வரை வேலை பார்த்தவர்கள், அந்தத் துறையில் நிச்சயம் நிபுணத்துவம் பெற்றவர்களாகவே இருப்பார்கள். அந்த நிபுணத்துவத்தைக் கையில் எடுத்தால், கட்டாய ஓய்வுக்குப் பிறகும் கம்பீரமாக வாழலாம்.

உற்பத்தித் துறையில் வேலைபார்த்தவர்களுக்கு...

வேலை போனாலும் பெரிய நிறுவனங் களுக்கான சிறிய உதிரிபாகங்களைச் செய்து தருகிற சிறிய தொழில் முனைவோராக நீங்கள் மாறலாம். பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களுக்கான சிறிய உதிரிபாகங்களை வெளியேதான் அவுட்சோர்ஸிங் முறையில் தயார் செய்து வாங்குகின்றன. இதற்கு ஆன்சிலரி இண்டஸ்ட்ரி என்று பெயர்.

உதாரணமாக, மாருதி கம்பெனி மட்டும் கிட்டத்தட்ட 1000-க்கும் மேற்பட்ட உதிரி பாகங்களை அவுட்சோர்ஸிங்தான் உற்பத்தி செய்து வாங்குகிறது. நீங்கள் ஒரே நிறுவனத்தை மட்டும் நம்பியிருக்காமல், எல்லா பெரிய நிறுவனங்களையும் அணுகலாம். தவிர, பெரிய நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அப்ரூவ்டு வெண்டார்களுக்கும் நீங்கள் உதிரிபாகங்களைத் தயார் செய்து தரலாம்.

நிர்வாகம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறையில் வேலை பார்த்தவர்களுக்கு...

நிர்வாகத்துறையில் அலுவலக நிர்வாகம், தொழிற்கூட நிர்வாகம் என இரு பிரிவுகள் இருக்கின்றன. இவர்களுக்கு தொழிலாளர் சட்டம் குறித்த நிபுணத்துவம் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் ஒரே நேரத்தில் பல கம்பெனிகளுக்கு நிர்வாக ஆலோசகராகச் செயல்படலாம்.

மனிதவள மேம்பாட்டுத்துறையில் இருந்தவர்கள், அப்ரூவ்டு எம்பிளாய்மென்ட் ஏஜென்சியாகச் செயல்பட ஆரம்பிக்கலாம். அதாவது, ஆட்கள் தேவைப்படுகிற நிறுவனங் களுக்கு மனித வளத்தைத் தேர்வு செய்து அனுப்பலாம். நீங்கள் மத்திய அரசின் அனுமதி பெற்று வெளிநாட்டு வேலைகளுக்கும் ஆட்களை அனுப்பலாம்.

நிதித்துறையில் வேலைபார்த்தவர்களுக்கு...

ஆள் பற்றாக்குறை. இருக்கிற துறை இது. வங்கிகளில் கடன் வாங்கும் கடன் மனுக்களைத் தயார் செய்வது, புராஜெக்ட் ரிப்போர்ட்டுகளைத் தயார் செய்வது பற்றியும் அவர்களுக்கு அனுபவம் இருக்காது. இப்படிப் பட்டவர்களுக்கு உதவுகிற வேலையை கையில் எடுக்கலாம். ஜி.எஸ்.டி ஃபைலிங், ஜி.எஸ்.டி ரிட்டர்ன், வருமான வரி மேலாண்மை, ஏற்றுமதி, இறக்குமதி ரசீதுகளை எப்படிச் சமர்ப்பிப்பது போன்ற விஷயங்களில் உங்களுக்கு நல்ல திறமை இருந்தால், சிறு, குறு தொழில் செய்பவர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் நிச்சயம் உதவலாம். இது தொடர்பாகக் குறுகிய கால கோர்ஸையும் படிக்கலாம்.

மார்க்கெட்டிங் அல்லது சந்தைப்படுத்துதல் தொழிலில் வேலை பார்த்தவர்களுக்கு...

உங்கள் துறையில் நீங்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்றால், உங்கள் நிறுவனத்தில் தயாராகிற அதே பொருள், வேறொரு நிறுவனத்தில் 20 ரூபாய் குறைவாக அல்லது 30 குறைவாக விற்பனை செய்யப்படுவது நிச்சயம் தெரிந்திருக்கும். அந்த வாய்ப்பை நீங்கள் கையகப்படுத்திக்கொள்வது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

வேளாண்துறையில் வேலை பார்த்தவர்களுக்கு...

இந்தத் துறையில் வேலைபார்த்தவர்களுக்கு இயற்கை முறை விவசாயம் செய்பவர்களை நன்கு தெரியும். அவர்களிடம் பொருள்களை வாங்கி ஆன்லைனில் விற்கலாம். இப்போதைய பொருளாதார வீழ்ச்சியைக் கண்டு பயப்பட வேண்டாம். இன்னும் ஆறு மாதங்களில் மறுபடியும் வளர ஆரம்பிக்கும். நம்முடையது வளருகிற பொருளாதாரம். அதனால் வேலையிழந்தாலும் அதே துறையில் வெவ்வேறு இடங்களில் ஜெயிக்கலாம்’’ என்றார்.

திறமைசாலிகள் நம்பிக்கையுடன் செயல் பட்டால், கட்டாய ஓய்வைப் பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லை!