அன்பாலும் பண்பாலும் `அப்பாக் களின் செல்ல இளவரசி'களுக்கே டஃப் கொடுப்பவர்கள்தாம் இந்த கேர்ள் பெஸ்டிகள். சேட்டை செய்யும் மச்சானாகவும், அக்கறை காட்டும் நட்பாகவும், கலாய்ப்புகளுக்குச் சிக்கிய அப்ரசண்டியாகவும், அரவணைப்பில் தாயாகவும், அலறவிடுவதில் பேயாகவும் இருக்கும் `கேர்ள் பெஸ்டி' கிடைப்பதெல்லாம் ‘கூகுள் பே'யில் கிடைக்கும் ரங்கோலி மாதிரி அழகானது. ஆனால், அபூர்வமானது!

ஊருக்குள் புதுவித உயிரினங்கள் சில உருவாகியிருக்கின்றன, அவையே பெஸ்டிஸ். பாய் பெஸ்டி, கேர்ள் பெஸ்டி என இந்த பெஸ்டி கோஷ்டிகளின் தொல்லைக்கு ஆளாகியிருக்கிறது தமிழ்கூறு நல்லுலகு. பெஸ்டியால் வரும் பிரச்னைகளைச் சிந்திக்கும் நாம், என்றைக்காவது பெஸ்டிகளுக்கு வரும் பிரச்னைகளைச் சிந்தித்திருக்கிறோமா அல்லது சந்தித்துதான் இருக்கிறோமா!

`பிரியமான தோழி’ காலத்தில் இருந்தே கேர்ள் பெஸ்டிகள் எல்லாம் கல், குருணை நீக்கப்பட்ட ஐ.எஸ்.ஐ தரச்சான்றிதழ் பெற்ற அக்மார்க் நல்லவர்கள். இந்தக் காதலிகளோ, அந்தப் புரிதலே இல்லாமல் பெஸ்டிகளின் மேல் எரிந்து விழுகிறார்கள். `நீங்கள் இருவரும் நீடுழி வாழ வேண்டும். உங்கள் திருமணத்தில் நாங்கள் பன்னீர் தெளிக்க வேண்டும்' என்பது தான் பெஸ்டிகளின் உச்சபட்ச ஆசையே!

`டா, டபுள் டா, ஆமாம்டா, டால்டா' என்றெல்லாம் நண்பனை இஷ்டத்துக்கு `டா’ போட்டு பேசியிருப்போம். அவன் கமிட்டானதும், `இந்த உலகத்திலேயே ஒருத்திதான் உன்னை டான்னு கூப்பிடணும். அவ நானாதான் இருக்கணும்' என்று காதலி கண்களை உருட்டிமிரட்ட, காதலர்களும் `காதலுக்கு மரியாதை' தரவேண்டி நம்மைக் கண்ணீரோடு பார்ப்பார்கள். திடீரென `டா’வை வெட்டியதில், போலியான மரியாதை உருவாகி, எண்ண அலைகள் வேறுபட்டு, ஓசோனில் ஓட்டை விழுந்து, பனிப்பாறைகள் உருகி, பெஸ்டிகளுக்குள் பிரேக்அப் ஏற்படும். இப்போ சொல்லுங்க, பிரேக்அப்புக்கு நாங்களா காரணம்?!

கமிட்டட் பசங்களுக்கு கேர்ள் பெஸ்டியாக இருப்பது இத்தகைய கொடுமை என்றால், பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார்க்கும் சிங்கிள் பசங்களுக்கு பெஸ்டியாக இருப்பது இன்னும் கொடுமை. அரியர் இருக்கு, கரியர் இல்ல... கவலை இருக்கு, காதலி இல்ல... காசு இல்ல, கடன் இருக்கு... பெட்ரோல் இல்ல, பைக் இருக்கு... அடுப்பு இருக்கு, மாவு இல்ல... அரிசி இருக்கு, உளுந்து இல்ல என கஷ்டங்களை அடுக்கிக்கொண்டே போவார்கள். இவர்களின் புலம்பல்களையெல்லாம் காதுகொடுத்துக் கேட்டால், ஒரு வாரத்துக்கு மூளை ஓய்வெடுக்கச் சென்றுவிடும். இப்படி எதையும் தாங்கும் இதயம்கொண்ட எங்களை, கல் நெஞ்சுக்காரிகளெனக் கரித்துக்கொட்டுவது நியாயமா நியாயமாரே!

இருவரும் சேர்ந்து எடுத்த செல்ஃபியை `நட்பே துணை’ என தலைப் பிட்டுப் பதிவேற்றினால் கூட, `யாரு இவன், உன் லவ்வரா', `இது எப்போ இருந்துடி', `எங்கிருந்தாலும் வாழ்க, மஞ்சள் குங்குமம் வாழ்க' என கண்டமேனிக்கு கமென்ட்டுகளைத் தட்டும் இந்தச் சமூகம். `அதான் `நட்பு’ன்னு சொல்லிருக்கோம்ல, பின்ன ஏன் இந்த கொலைவெறி? `ஆணும் பெண்ணும் சேர்ந்து பழகினா அது காதல்ல மட்டும்தான் முடியுமா, அவங்களால நல்ல நண்பர்களா இருக்க முடியாதா' என விக்ரமன் காலத்து வசனம் எல்லாம் விரலில் வந்துபோகும், `இவிய்ங்களுக்கு ஏன் விளக்கம் சொல்லணும்? இப்படி யோசிச்சே வெந்துபோகட்டும்' என விட்டுவிடுவோம். நொந்துபோயிருக்கோம் மக்களே!

இந்த பயபுள்ளைக வேறு யாரையாவது கலாய்த்தால் ஊறப்போட்டு அடிப்பார்கள் என்பதால், எங்களைத்தான் எளிதில் கையாளுகிறார்கள். எப்போதெல்லாம் போர் அடிக்கிறதோ அப்போதெல்லாம் கேர்ள் பெஸ்டியின் போஸ்ட்டுகளுக்கு ‘ஹாஹா’ போடுவது, பழைய போட்டோக்களுக்கு கமென்ட் அடிப்பது எனத் தன்னுடைய நகைச்சுவைத் திறனை மொத்தமாக இறக்குவதும் கற்பனையை டியூன் பண்ணுவதும் இவர்களின் வழக்கமாகிவிட்டது. இந்தக் கலாய்ப்புகளை எல்லாம் தாங்கிக்கொண்டுதானே வாழ்ந்துகொண்டிருக் கிறோம்?

ஆகவே, உலக பெஸ்டிகளே ஒன்று கூடுவோம்!