அரசியல்
அலசல்
Published:Updated:

இயற்கையை அழித்து ‘சூழல் சுற்றுலாவா’? - எதிர்ப்புக்குள்ளாகும் கொடைக்கானல் ரோப் கார் திட்டம்!

கொடைக்கானல்
பிரீமியம் ஸ்டோரி
News
கொடைக்கானல்

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த பல இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்போது, ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்படும்.

‘கொடைக்கானல் - பழநி மலைகளுக்கு இடையிலான ரோப் கார் திட்ட’த்துக்கு எதிராகக் கொதித்தெழுகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்!

மத்திய, மாநில அரசுகள் இணைந்து தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் ரோப் கார் அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வுகளைத் தொடங்கியிருக்கின்றன. இதில், 12 கி.மீ தூரம்கொண்ட கொடைக்கானல் - பழநி மலைகளுக்கு இடையேயான ரோப் கார் திட்டம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பழநியிலிருந்து கொடைக் கானல் வரையிலான 64 கி.மீ தூரத்துக்கு சாலை மார்க்கமாகப் பயணிக்க மூன்று மணி நேரம் ஆகும். ஆனால், 500 கோடி ரூபாய் செலவில் 12 கி.மீ தூரம் அமைக்கப்படும் இந்த ரோப் கார் திட்டம் செயல்படுத்தப்பட்டால், வெறும் 40 நிமிடங்களில் போய்விட முடியும் என்கிறது தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு.

இயற்கையை அழித்து ‘சூழல் சுற்றுலாவா’? - எதிர்ப்புக்குள்ளாகும் கொடைக்கானல் ரோப் கார் திட்டம்!

இந்த நிலையில் இந்தத் திட்டம் குறித்து கொடைக்கானலைச் சேர்ந்த ‘வன ஆர்வலர்’ வீரா நம்மிடம் பேசியபோது, ‘‘விதிமீறிய கட்டடங் களின் எண்ணிக்கையாலும், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையாலும் ஏற்கெனவே கொடைக்கானல் திணறிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பழநியிலிருந்து கொடைக்கானல் மலைக்குச் செல்ல ஏற்கெனவே நான்கு சாலைகள் இருக்கும் நிலையில், ரோப் கார் திட்டம் அவசியமற்றது. இந்தத் திட்டத்துக்காக அமைக்கப்படும் தூண்களால் வனவிலங்குகள் தொல்லைக்குள்ளாகும். அவை காட்டைவிட்டு வெளியேறினால், உயிரிழக்கும் அபாயமும் ஏற்படும்’’ என்றார் எச்சரிக்கும்விதமாக.

இயற்கையை அழித்து ‘சூழல் சுற்றுலாவா’? - எதிர்ப்புக்குள்ளாகும் கொடைக்கானல் ரோப் கார் திட்டம்!

‘‘இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த பல இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்போது, ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்படும். இதன் தொடர்ச்சியாக தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவும். இப்படிச் சூழல் கேட்டை உருவாக்கும் திட்டங்களுக்கு ‘சூழல் சுற்றுலா’ எனப் பெயரிட்டிருப்பது அபத்தமானது. பல தலைமுறைகளுக்கும் பயனளிக்கக்கூடிய சூழல் வேண்டுமா அல்லது வருவாய் ஈட்டும் திட்டம் வேண்டுமா என்று அரசு யோசித்து முடிவெடுக்க வேண்டும்’’ என்றார் சூழலியல் ஆர்வலர் ரவீந்திரன்.

வீரா
வீரா
ரவீந்திரன்
ரவீந்திரன்

இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கொடைக்கானல் ரோப் கார் திட்டப் பொறுப்பாளர் சிவாஜியிடம் பேசியபோது, ‘‘தமிழ்நாட்டில் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்து வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்பதற்கான முதற்கட்ட பணிகளை ஐந்து இடங்களில் தொடங்கியிருக்கிறோம். இதில் வன உயிர்கள் மற்றும் வனப்பகுதி பாதிப்புக்கு உள்ளாகுமா என்பது குறித்தும் ஆராயப்படும். இதன்படி, கொடைக்கானல் - பழநி இடையே ரோப் கார் அமைக்க சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகே, அடுத்தகட்ட பணிக்குச் செல்ல முடியும்’’ என்றார்.