Published:Updated:

2K kids: அவளும் நானும்!

ரோஜா
பிரீமியம் ஸ்டோரி
ரோஜா

செ.சிவ நந்தினி

2K kids: அவளும் நானும்!

செ.சிவ நந்தினி

Published:Updated:
ரோஜா
பிரீமியம் ஸ்டோரி
ரோஜா
ரு நல்ல தோழமை அமைவது குழப்பம், சோகம், மன அழுத்தம் ஏற்படும்போதெல்லாம் நமக்கு கைகொடுத்து கரைசேர்க்கும். அப்படி எனக்குக் கிடைத்திருக்கும் தோழியைப் பற்றித்தான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன். அவள் பெயர் ரோஜா. உங்கள் வீடுகளில் அவளை ரோஜாச் செடி என்பீர்கள். ஆம்... ஒரு சிவப்பு ரோஜா செடிதான் என் நெருங்கிய தோழி!

என் வீட்டின் மாடியில்தான் ரோஜா பல மாதங்களாக இருந்தாள். ஆனால், அவளைக் கவனிக்கும், அவளுடன் அறிமுகமாகும், அவளை நட்பாக்கிக்கொள்ளும் சூழலை லாக்டௌன்தான் எனக்கு வழங்கியது. பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு எல்லோரும் வீடுகளுக்குள் அடைபட்டபோது, பொழுதுபோக்க டிவி, இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டல்கோனா காபி என்றெல்லாம்தான் என் நாள்களும் கழிந்தன. எல்லாமே சீக்கிரம் போர் அடித்துவிட, அடுத்ததாக மொட்டை மாடி டைமை உருவாக்கிக்கொண்டு மாலைகளில் அங்கு காற்றும், கொஞ்சம் நிலவும் வாங்கச் செல்வது என் வழக்கமானது. அப்படி செல்லும்போது தான் ரோஜாவை பார்த்தேன்.

ஒரு பருவப் பெண்ணை தன் வீதியில் பார்க்கும் இளைஞர், ‘இந்தப் புள்ள இத்தனை நாளா நம்ம தெருவுலயா இருந்துச்சு? நமக்கு தெரியாம போச்சே...’ என்று குறுகுறுப்பாவதைப்போல்தான் இருந்தது எனக்கும். ஓர் ஓரத்தில் இருந்தாள்.

ரோஜாவுடன் நான் பேச ஆரம்பித்தேன். எனக்கு இந்த உலகின் ஆகச் சிறந்த தோழியானாள் அவள். மொட்டை மாடி செல்லும்போதெல்லாம் அவளிடம் பேசிவிடுவேன் என்ற நிலை மாறி, ஒரு கட்டத்தில் அவளை பார்ப்பதற்கென்றே மொட்டை மாடிக்குப் போக ஆரம்பித்தேன்.

2K kids: அவளும் நானும்!

அவள் அருகில் அமரும்போது என் மனம் மிகவும் அமைதிகொள்ளும். அதுவும் கொரோனா காலத்தில் யாரையும் பார்க்க முடியாத, யாரிடமும் பேச முடியாத வெறுமை யில் அவள் எனக்களித்த அரவணைப்பை வார்த்தைகளில் சொல்லத் தெரியவில்லை.

‘செடி பேசுமா?’ என்கிறீர்களா... நம் மன துடன் மிக நெருக்கமாகப் பேசும். ரோஜா பேசினாள். நான் அவளுக்குத் தண்ணீர் ஊற்றும்போதும் உரம் போடும்போதும், `நன்றி' என்பாள். வைகாசி தூறலையும் ஆடிக் காற்றையும் அவள் அருகில் அமர்ந்தபடி நான் ரசிக்கும்போது, ‘உனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு இல்ல... எனக்கும்’ என்பாள்.

அவள் ஈன்ற பூவை நான் சூடிக்கொள்ள கொடுக்கும்போதெல்லாம், தாய்போல சிரிப்பாள். அம்மா திட்டினால், வேறு ஏதேனும் மன சஞ்சலத்தில் இருந்தால் அவளிடம்தான் செல்வேன், சொல்வேன். எதுவுமே பேசாத ஒரு மௌனத்தை ஆறுதலாகத் தருவாள். என் சந்தோஷத்தையும் அவளிடம்தான் முதலில் சொல்ல ஓடுவேன். இலைகளெல்லாம் சலசலக்க மகிழ்வாள். சினிமா, இலக்கியங்களில் பெண்ணுக்கும் மரத்துக்கும் நட்பு என்று சொல்லும்போதெல்லாம் கேலி செய்த எனக்கு, ரோஜாதான் இப்போது என் சோல்மேட்.

என் அன்றாட வாழ்வில் நடக்கும் அனைத் தும் ரோஜாவுக்குத் தெரியும். வீட்டுக்கு விருந்தினர் யாரேனும் வந்தால், அவர்களுக்கு தவறாது என் தோழியை அறிமுகம் செய்வேன். ஒரு தாய் தன் கருவிலிருக்கும் குழந்தையுடன் பேசுவதைப்போல் நான் என் ரோஜாவிடம் பேசுவேன். அந்தக் கரு தன் காலை உதைத்து தாயிடம் பதில் பேசுவதுபோல, ரோஜா தன் இதழ் களை காற்றில் படபடக்க வைப்பாள். இதோ... இந்த ரசனையான எண்ணம், மொழி எல்லாம் எனக்கு வந்தது, ரோஜா என் வாழ்வுக்குள் வந்ததற்குப் பிறகுதான் என்று உணர்வேன்.

இப்போது எனக்கு அனைத்துமாகி நிற்கிறாள் ரோஜா. ஆனால் எனக்கோ, `அவளுக்காக நான் என்ன செய்தேன்?' என்பதே கேள்வியாக இருக்கும். `எங்கள் வீட்டுக்கு வந்த நாள் முதல் மலர்ந்த முகத் துடனே இருக்கும், என் மனசெல்லாம் படிக்கும் இந்த மாயக்காரிக்கு, தண்ணீர், உரம் தவிர வேறு என்ன தந்துவிட்டேன் நான்' என்று சில நேரங்களில் தவிக்கும். ‘ஏய் லூஸு நந்தினி... ஐ லவ் யூ’ என்று அப்போதும் அவளே என்னை சமாதானப்படுத்துவாள்.

லவ் யூ ரோஜா... மை பெஸ்டி!