Published:Updated:

முதல் தன்னம்பிக்கை விதை... விழுந்தது இப்படித்தான்!

முதல் தன்னம்பிக்கை விதை
பிரீமியம் ஸ்டோரி
முதல் தன்னம்பிக்கை விதை

மகாலெட்சுமி.சீ

முதல் தன்னம்பிக்கை விதை... விழுந்தது இப்படித்தான்!

மகாலெட்சுமி.சீ

Published:Updated:
முதல் தன்னம்பிக்கை விதை
பிரீமியம் ஸ்டோரி
முதல் தன்னம்பிக்கை விதை

கல்லூரியில் சேர்ந்த பின்னர், ஒரு மாலை வேளையில் கல்லூரி வாட்ஸ்அப் குரூப்பில் ஒரு மெசேஜ் வந்து விழுந்தது. ‘ரோட்டராக்ட் கிளப் தொடக்க விழாவில் பங்கேற்க விரும்புபவர்கள் உங்கள் பெயர்களை அனுப்புங்கள்’ என்பதுதான் அந்த மெசேஜ். அங்கேதான், கல்லூரி `ரோட்டராக்ட் கிளப்' உடனான என் முதல் பயணம் தொடங்கியது.

அது என்ன ரோட்டராக்ட் கிளப் (Rotaract Club)?

அமெரிக்காவில், ரோட்டரி சர்வதேச இளைஞர் திட்டம் 1968-ல் தொடங்கப்பட்டது. Rotary in Action என்பதே Rotaract. இன்று அது உலகம் முழுக்க 189 நாடுகள், 10,904-க்கும் மேற்பட்ட கிளப்புகள், 2,03,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் என்று வளர்ந்திருக்கிறது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு, சமூகக் குழுக்கள் மற்றும் பணியிடங் களில் தலைமைப் பண்புடன் வளர்வதற்கான அடிப் படையைக் கட்டமைக்கும் அமைப்பு இது. என் தன்னம்பிக்கையை மெருகேற்ற இந்த அமைப்பின் மூலம் நான் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

எங்கள் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர் களுக்கான ரோட்டராக்ட் கிளப் தொடக்க விழாவில், மாணவிகள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அவர்களுக்குப் பல டாஸ்க்குகள் நடத்தப்பட்டன. எங்கள் குழுவுக்கு நான் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

முதல் டாஸ்க், ஹலோ டாஸ்க். குழுவில் உள்ள அனைத்து மாணவி களின் பெயர், பாடப் பிரிவு உள்ளிட்ட தகவல்களை நாம் அறிந்துகொண்டு அவர்கள் அனைவருடனும் நாம் அறிமுகமாக வேண்டும். பெஞ்சில் பக்கத்தில் அமர்ந்திருப்பவருக்கு `ஹாய்' சொல்லலாமா, வேண்டாமா என்பதற்கே 10 நிமிடங்கள் மனதுக்குள் பட்டிமன்றம் நடத்துபவர்களுக்கு எல்லாம், இது ஒரு ஐஸ் பிரேக்கிங் பயிற்சி.

முதல் தன்னம்பிக்கை விதை... விழுந்தது இப்படித்தான்!

இரண்டாவது டாஸ்க், நம் லட்சியத்தை நாம் நடித்துக் காட்ட வேண்டும். காவல்துறை அதிகாரி, ஆசிரியர், ஆட்சியர் என நாங்கள் அனைவரும் எங்கள் கனவை சில நிமிடங்கள் வாழ்ந்துகாட்டியபோது, எங்களை நாங்களே புதிதாக உணர்ந்ததுபோல இருந்தது.

மூன்றாவது, ஓபன் மைக் டாஸ்க். இதில் மாணவிகள் அனைவரும், தாங்கள் ரோல் மாடலாக நினைக்கும் ஒரு பெண்ணைப் பற்றிப் பேச வேண்டும். பக்கத்து வீட்டு அக்கா முதல் ஐ.நா சபை பெண்கள் வரை மாணவிகள் பகிர்ந்துகொண்டபோது, பாசிட்டிவ் வைப் உருவானதை பங்கேற்ற அனைவருமே உணர்ந்தோம்.

நான்காவது டாஸ்க்கில், நமக்குக் கொடுக்கப் படும் பொருளை நாம் வரைய, அதை மற்றவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். நம் எண்ணத்தை நாம் எந்தளவுக்கு வெளிப் படுத்துகிறோம் என்பதுதான் இதில் பயிற்சி. கொரோனா லாக்டௌன் காரணமாக இந்த நான்கு டாஸ்க்குகளிலும் நாங்கள் ஸூம் மீட்டிங் வழியில் அட்டண்ட் செய்தாலும், மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றோம்.

முதல் தன்னம்பிக்கை விதை... விழுந்தது இப்படித்தான்!

இறுதியாக, விருது மொமென்ட். ‘சிறந்த குழுத் தலைவி’ விருது எனக்கு வழங்கப் பட்டபோது... என் கல்லூரி வாழ்வின் அந்த முதல் வெற்றி என்னையே வேறொரு வெர்ஷனாக என்னைப் பார்க்க வைத்தது. தொடர்ந்து ரோட்டராக்ட் கிளப்பின் உறுப்பினராக என் பயணத்தைத் தொடங்கி னேன். எங்கள் கல்லூரியின் ரோட்டராக்ட் வெற்றி புராஜெக்ட் ஆன ‘உதிரம்’ ஆர்கானிக் சானிட்டரி பேட் விநியோகத் திட்டப் பணிகளில் நான் கற்றதும் பெற்றதும் நிறைய. இப்போது நான் கிளப் சேவை இணை இயக்கு நராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன்.

என்னைப் போல பல மாணவிகளை ‘உன்னால் முடியும்’ என்று கைதூக்கி விட்டிருக் கும் எங்கள் கல்லூரி ரோட்டராக்ட் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மகா லட்சுமிக்கு, கல்லூரிக் காலத்துக்குப் பிறகும் நாங்கள் பெறவிருக்கும் வெற்றிகள் மூலமே எங்கள் நன்றிகளைச் சொல்ல வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism